WhatsApp இல் வீடியோவை ஷேர் செய்யும்போது அதை எப்படி மியூட் செய்வது? ஈசி டிப்ஸ்..

|

சில நேரங்களில் உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட் நண்பர்களுடன் சில சுவாரசியமான அல்லது சுமாரான வீடியோவை கூட ஷேர் செய்ய நாம் நினைத்து இருப்போம். ஆனால், அதில் வீடியோ காட்சிகள் அற்புதமாக அமைந்திருந்தாலும் கூட அதில் உள்ள ஆடியோ விரும்பத்தகாத வகையில் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கும். அப்படியான வீடியோவை நாம் ஷேர் செய்யலாமா வேண்டாமா என்ற யோசனையின் இறுதியில் அதை ஷேர் செய்யாமலே விட்டுவிடுவோம்.

வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம்

வாட்ஸ்அப் மியூட் வீடியோ அம்சம்

இதைச் சரிப்படுத்த வாட்ஸ்அப் இப்போது மியூட் வீடியோ அம்சத்தை ஆதரிக்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்தமான ஒரு வீடியோவை ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பு, அதை மியூட் செய்ய இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் அதன் அண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களை அனுமதிக்கிறது. இந்த மியூட் வீடியோ அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து வருகிறது.

புதிய அப்டேட் மூலம் கிடைக்கும் புதிய அம்சம்

புதிய அப்டேட் மூலம் கிடைக்கும் புதிய அம்சம்

இப்போது சமீபத்தில் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் அனைவருக்கும் கிடைக்கும் படி அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அம்சம் Android பயனர்களுக்கு இப்போது வெளியிடப்பட்ட புதிய அப்டேட் மூலம் கிடைக்கிறது. மியூட் வீடியோ அம்சம் ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிடைக்கிறது.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

மியூட் வீடியோ அம்சம் என்றால் என்ன?

மியூட் வீடியோ அம்சம் என்றால் என்ன?

குறிப்பிட்ட வீடியோ காட்சிகளில் உள்ள ஆடியோ பிடிக்கவில்லை, ஆனால் அந்த வீடியோவை மற்றவர்களுடன் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது இந்த அம்சம் உங்களுக்கு கைகொடுக்கும். வீடியோவை அனுப்புவதற்கு முன்பு அதை எப்படி மியூட் செய்வது என்று இப்போது சில விரிவான வழிகாட்டுதலுடன் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் இல் வீடியோக்களை எப்படி மியூட் செய்வது?

வாட்ஸ்அப் இல் வீடியோக்களை எப்படி மியூட் செய்வது?

உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட் உடன் வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்பு அவற்றை மியூட் செய்ய, நீங்கள் பிளே ஸ்டோருக்குச் சென்று, உங்கள் வாட்ஸ்அப்பை சமீபத்திய அப்டேட்டிற்கு புதுப்பிக்க வேண்டும். பின்னர் வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் வீடியோவை அனுப்ப விரும்பும் காண்டாக்ட்டை கிளிக் செய்யவும். அதற்குப் பின்னர், 'Attachment' என்ற பேப்பர் கிளிப் ஐகானை கிளிக் செய்யவும்.

ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!

லோட் ஆகும் வரை காத்திருக்கவும்

லோட் ஆகும் வரை காத்திருக்கவும்

அல்லது, நீங்கள் கேமரா விருப்பத்தை கிளிக் செய்து ஒரு புதிய வீடியோவை பதிவு செய்து அதை ஷேர் செய்ய விரும்பினாலும் நீங்கள் இதில் செய்யலாம்.

அதுவும் இல்லை, என்னிடம் முன்பே ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரு வீடியோ கேலரியில் உள்ளது அதை மியூட் செய்து அனுப்ப வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதையும் செய்யலாம். எந்த வீடியோவை ஷேர் செய்ய விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்து, வீடியோ லோட் ஆகும் வரை காத்திருக்கவும்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

திரையில் காண்பிக்கப்படும் உங்கள் வீடியோவில் தேவைகளுக்கு ஏற்ப எடிட் செய்து, வீடியோவின் பிரேம்களுக்குக் கீழே ஒரு சிறிய ஸ்பீக்கர் ஐகான் காணப்படும், அதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோ மியூட் செய்யப்படும்.


நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்த பின்னரும் கூட உங்களுக்கு ஸ்பீக்கர் ஐகான் தெரியவில்லை என்றால், அதற்காக நீங்கள் வருத்தப்படாதீர்கள், குழம்பாதீர்கள்.

வேறு வழி இல்லையென்றால் இப்படியும் மியூட் வீடியோ அனுப்பலாமா?

வேறு வழி இல்லையென்றால் இப்படியும் மியூட் வீடியோ அனுப்பலாமா?

உங்களுக்கான அப்டேட் வெகு விரைவில் கிடைக்கும், அதுவரை சற்று காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், இந்த புதிய மியூட் அம்சம் iOS பயனர்களுக்கு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவை 6 வினாடிகளாகக் குறைத்து GIF வடிவத்தில் நீங்கள் ஷேர் செய்யும் பொழுது, வீடியோவில் உள்ள ஆடியோ தானாக நீக்கப்படும்.

Best Mobiles in India

English summary
How to Mute Videos on WhatsApp Before Sending It Easily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X