ஐபோனில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்வது எப்படி?
கூகுள் போட்டோஸ் ஆப் சாதாரண கேலரி போன்று மட்டுமில்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கி வருகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது மல்டிமீடியா தரவுகளை உயர் ரகத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளவும் வரம்பற்ற சேவையை வழங்கி வருகிறது.

கூகுள் போட்டோஸ்
பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் போட்டோஸ் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது. எனினும், ஐபோன்களில் ஐகிளவுட் சேவையில் குறி்ப்பிட்ட அளவு மெமரி மட்டுமே வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் தான் கூகுள் போட்டோஸ் செயலி பயனுள்ளதாக மாறுகிறது. கூகுள் போட்டோஸ் செயலியை கொண்டு ஐபோனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை
இதற்கான வழிமுறைகளை துவங்கும் முன் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று கூகுள் போட்டோஸ் செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
1 - ஐபோனில் கூகுள் போட்டோஸ் செயலியை ஓபன் செய்ய வேண்டும்
2 - செட்டிங்ஸ் சென்று பேக்கப் & சின்க் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
3 - கூகுள் அக்கவுண்ட் விவரங்களை பதிவிட கூறும் பட்சத்தில் அவற்றை பதிவிட வேண்டும்

செட்டிங்ஸ்
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஐபோனில் இருந்து கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்ய செயலியை திறந்து அதில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட மெனு ஆப்ஷனை க்ளிக் செய்து செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி பேக்கப் அன்ட் சின்க் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

கூகுள் அக்கவுண்ட்
இனி கூகுள் போட்டோஸ் செயலியில் கூகுள் அக்கவுண்ட் விவரங்களை கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். செயலியை செட்டப் செய்யும் போது லாக் இன் செய்ய வேண்டும். லாக் இன் செய்ததும், செலியை திறந்து பேக்கப் மோட் ஆப்ஷனில் ஹை குவாலிட்டி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வீடியோ
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சின்க் செய்ய வேண்டும் எனில் செட்டிங்ஸ்-இல் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை போனின் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனில், பேக்கப் ஃபோல்டரில், நீங்கள் சின்க் செய்ய விரும்பும் போல்டர்களை மட்டும் தேர்வு செய்யலாம்.
அடுத்து கூகுள் போட்டோஸ் செயலியின் ஹோம் பேஜ் சென்று செயலி உங்களின் தரவுகளை சின்க் செய்யும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் உங்களின் போன் வைபை மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வது நல்லது. இவ்வாறு செய்வதால் போனின் மொபைல் டேட்டா சேமிக்கப்படும்.


Click it and Unblock the Notifications