இன்டர்நெட் இல்லாமல் கூட UPI முறையில் பணம் அனுப்பலாம்.. பியூச்சர் போன் பயனர்களுக்கு இது இன்னும் பெஸ்ட்..

|

இந்திய ரிசர்வ் வங்கி அம்சத் தொலைப்பேசி பயனர்களுக்காக UPI23PAY என்ற புதிய பணம் மாற்றம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தப் பயனர்களுக்கு இணையச் சேவை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு உதவும் வகையில் மத்திய வங்கியிடமிருந்து 24x7 ஹெல்ப்லைன் சேவையும் வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பியூச்சர் போனில் இருந்து கூட நீங்கள் UPI முறைப்படி பணம் அனுப்ப முடியும் என்பது கவனிக்கத்தக்கது. சரி இதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

யுபிஐ கட்டணங்களை இனி பியூச்சர் போன் பயனர்களும் செய்யலாமா?

யுபிஐ கட்டணங்களை இனி பியூச்சர் போன் பயனர்களும் செய்யலாமா?

இந்தியா பணமில்லா பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு வருடம் மக்கள் பணமில்லா பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கத் தள்ளியது மற்றும் இரண்டு வருடத் தொற்றுநோய் இதற்கு ஒரு ஊக்கியாக இருந்தது என்பதே மறுக்கமுடியாத உண்மை. இப்போது வரை, யுபிஐ கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிருந்து மட்டுமே அதன் பயனர்கள் செய்ய முடிகிறது. ஆனால், பியூச்சர் போன் பயனர்களின் நிலை இங்கு வேறு.

புதிய UPI23PAY சேவை மக்களுக்கு எப்படி பயனளிக்கப் போகிறது?

புதிய UPI23PAY சேவை மக்களுக்கு எப்படி பயனளிக்கப் போகிறது?

மேலும், பியூச்சர் போன்களை வைத்திருப்பவர்கள் இன்னும் UPI முறைப்படி பணப் பரிவர்த்தனைக்குச் செல்ல முடியாமல், வழக்கம் போல் ரொக்க பணத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான தீர்வாக இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய UPI23PAY சேவை மக்களுக்குப் பயனளிக்கப் போகிறது. இது இப்போது பியூச்சர் போன் மக்களின் பணப் பரிவர்த்தனை சேவையை மாற்றப் போகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் UPI கட்டண அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் கிராமப்புறங்களில் ஃபீச்சர் ஃபோன்களை வைத்திருக்கும் மக்களும் UPI பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும்.

SBI பயனர்களுக்கு எச்சரிக்கை: 'இதை' செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக காலியாகிவிடும்.. உடனே விழித்திடுங்கள்..SBI பயனர்களுக்கு எச்சரிக்கை: 'இதை' செய்தால் உங்கள் கணக்கு மொத்தமாக காலியாகிவிடும்.. உடனே விழித்திடுங்கள்..

UPI 123PAY என்றால் என்ன? இது எப்படிப் பாதுகாப்பானது?

UPI 123PAY என்றால் என்ன? இது எப்படிப் பாதுகாப்பானது?

"UPI 123PAY என்பது, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் Unified Payments Interface (UPI) கட்டணச் சேவையைப் பயன்படுத்தக்கூடிய அம்சத் தொலைப்பேசி பயனர்களுக்கான உடனடி கட்டண முறையாகும். UPI 123PAY மூலம், ஃபீச்சர் ஃபோன் பயனர்கள் இப்போது நான்கு தொழில்நுட்ப மாற்றுகளின் அடிப்படையில் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். IVR (ஊடாடும் குரல் பதில்) எண்ணை அழைப்பது, ஃபீச்சர் போன்களில் செயலி செயல்பாடு, மிஸ்டுகால் அழைப்பு அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஒலி அடிப்படையிலான கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

4 செயல்முறைகளில் UPI 123PAY சேவையைப் பயன்படுத்தலாமா?

4 செயல்முறைகளில் UPI 123PAY சேவையைப் பயன்படுத்தலாமா?

இந்த தகவலை இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளக்கியுள்ளது. புதிய அம்சம் UPI123PAY என அழைக்கப்படுகிறது. மேலும், இது IVR எண்கள், அம்சத் தொலைப்பேசிகளில் பயன்பாட்டுச் செயல்பாடு, மிஸ்டுகால் அழைப்பு அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மற்றும் ஒலி அடிப்படையிலான கட்டணங்கள் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த இணையம் தேவையில்லை. DigiSaathi எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 24x7 ஹெல்ப்லைனும் உள்ளது.

உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?உங்கள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரி பார்ப்பது? இணைக்கவில்லை என்றால் என்னவாகும்?

மிஸ்டு கால் பேமெண்ட் அம்சத்தைப் பெறுவது எப்படி?

மிஸ்டு கால் பேமெண்ட் அம்சத்தைப் பெறுவது எப்படி?

ஆப்ஸின் மிஸ்டு கால் பேமெண்ட் அம்சத்தைப் பெறுவது எப்படி என்பதை அறிய, கீழே படிக்கவும். இந்த அம்சம் ஃபீச்சர் போன் பயனர்களுக்கு மட்டுமல்ல, இன்டர்நெட் கனெக்டிவிட்டி துண்டிக்கப்பட்டால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட்போன் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் யாராக இருந்தாலும், இணைய சேவை உள்ளதாக நேரத்தில் இந்த புதிய UPI23PAY சேவையைப் பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.

UPI23PAY முறைத்தபடி எப்படி எளிதாகப் பணம் அனுப்பலாம் என்பதைப் பார்க்கலாம்

UPI23PAY முறைத்தபடி எப்படி எளிதாகப் பணம் அனுப்பலாம் என்பதைப் பார்க்கலாம்

  • வணிகர் கடையில் காட்டப்பட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.
  • IVR அழைப்பைப் பெற்றவுடன் நிதி பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும்.
  • நீங்கள் மாற்ற வேண்டிய தொகையை உள்ளிடவும்.
  • உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.
  • இறுதியில் நிதி பரிமாற்றம் செய்யப்படும்.
  • அவ்வளவு தான், இந்த முறையைப் பின்பற்றி நீங்கள் எளிதாகப் பணத்தைப் பரிமாறலாம்.
  • இந்த செயல்முறை பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பொதுவானது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
How to make UPI payments without using the internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X