அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

|

தமிழகத்தில், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலாக மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க (Link EB with Aadhaar) உதவுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இருந்தாலும் அங்கும் இங்கும் அலைந்து அவஸ்தைப்பட விரும்பாதவர்கள், வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு எளிமையான வழி உள்ளது.

அதென்ன வழி?

அதென்ன வழி?

மிகவும் எளிமையான செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம், ஆன்லைன் வழியாக நீங்களே உங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியும்!

அதை செய்ய விரும்புவோர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றவும். அதற்கு முன் இதை ஏன் கட்டயாமாக செய்ய வேண்டும் என்கிற காரணத்தை பார்த்துவிடலாம்!

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

அறியாதோர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation - TANGEDCO) என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (Tamil Nadu Electricity Board - TNEB) ஒரு துணை நிறுவனமாகும்.

TANGEDCO-வின் சமீபத்திய கூற்றின்படி, முதல் 100 யூனிட்களுக்கான அரசு மானியத்தை பெற விரும்புபவர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம்.

ஒருவேளை நீங்கள் உங்களுடைய இபி நம்பரை ஆதார் நம்பருடன் இணைக்கவில்லை என்றால் உங்களுக்கு அரசாங்கத்தின் மானியம் வழங்கப்படாது!

ஆன்லைன் வழியாக மின் இணைப்பு நம்பரையும் ஆதாரையும் இணைப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக மின் இணைப்பு நம்பரையும் ஆதாரையும் இணைப்பது எப்படி?

- முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்கிற இணையதளத்திற்கு செல்லவும்.

- பின்னர் ஸ்க்ரீனில் தெரியும் படிவத்தில் உங்கள் சேவை இணைப்பு எண்ணை (Service Connection Number) டைப் செய்யவும்

- இப்போது உங்கள் மொபைல் எண்ணை (Mobile Number) உறுதி செய்யவும்; அதனை தொடர்ந்து ஒடிபி (OTP) ஒன்றை உருவாக்கவும்.

- பின்னர் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒடிபி-ஐ உள்ளிட்டு, உங்கள் அக்கவுண்ட்டை வெரிஃபை (Verify) செய்யவும்.

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது குடியிருப்பவரின் (Occupant) விவரங்களை டைப் செய்யவும்.

- அதனை தொடர்ந்து உங்கள் TANGEDCO அக்கவுண்ட் உடன் இணைக்க விரும்பும் ஆதார் அட்டை எண்ணை (Aadhaar Card Number) டைப் செய்யவும்.

- பின்னர் உங்கள் ஆதார் அட்டையில் இருப்பதை போலவே உங்கள் பெயரையும் டைப் செய்யவும்.

- இப்போது நீங்கள் உங்கள் ஆதார் அட்டையின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும்; அதை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

- கடைசியாக படிவத்தை சமர்ப்பித்து ரசீதை (Receipt) பதிவிறக்கம் செய்து கொள்ளவும்; அவ்வளவு தான்!

இது கட்டயாமா?

இது கட்டயாமா?

உங்களுக்கு தமிழக அரசின் உதவித்தொகை வேண்டும் என்றால், இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு மின் வாரியத்தின் (Tamil Nadu Electricity Board) அனைத்து வாடிக்கையாளர்களுமே தங்களது ஆதார் அட்டையுடன் மின் இணைப்பு எண்ணை (EB Number) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Best Mobiles in India

English summary
How to Link your Tamil Nadu EB Number with your Aadhaar Card by Yourself

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X