வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்

|

வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நீண்ட நாட்களாக கூறி வந்தது. அதன்படி தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

அதாவது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களை உறுதிப்படுத்திடவும், பின்பு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம்பெறுதல் ஆகியவற்றைத் தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேர்மையான நிலை

நேர்மையான நிலை

குறிப்பாக இவ்வாறு இணைக்கும்பட்சத்தில் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க முடியும். அதேபோல் ஒருவர் இரு தொகுதிகளில் வாக்களிப்பதைத் தடுக்க முடியும். இந்த நடவடிக்கை மூலம் ஜனநாயகத்தில் வாக்களிக்கும் முறையில் நேர்மையான நிலை கடைப்பிடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

 வாக்காளர் அடையாள அட்டை

இருந்தபோதிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், அதார் எண்ணை இணைப்பது கட்டாயமல்ல. வாக்காளர் விருப்பப்பட்டால் மட்டுமே ஆதார் எண்ணைஅரசிடம் பகிர்ந்து அடையாள அட்டையுடன் இணைக்கலாம். குறிப்பாக தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விருப்பம் இல்லை என்பதற்கு காரணங்கள் இருந்தால் கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக இணைத்துவிடலாம்

எளிதாக இணைத்துவிடலாம்

மேலும் சேவை மையத்துக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் உடன் எளிதாக இணைத்துவிடலாம். இப்போது அதற்கான வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் உங்களுக்கு தான்- இந்த 13 நகர மக்கள் ரெடி ஆகிக்கோங்க, ரொம்ப நேரம் இல்ல!முதலில் உங்களுக்கு தான்- இந்த 13 நகர மக்கள் ரெடி ஆகிக்கோங்க, ரொம்ப நேரம் இல்ல!

வழிமுறை-1

வழிமுறை-1

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர் முதலில் உங்களது போனில் Voter Helpline App-ஐ பதிவிறக்கம் செய்யவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும், voter helpline app-ஐ திறந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுதொடரவும்.

புதிய Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்.! இந்த போனில் இப்படி ஒரு பவர்ஃபுல் சிப்செட்டா?புதிய Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்.! இந்த போனில் இப்படி ஒரு பவர்ஃபுல் சிப்செட்டா?

வழிமுறை-3

வழிமுறை-3

குறிப்பாக இந்த செயலியில் Voter Registration என்பதை கிளிக் செய்து Electoral Authentication form 6bஎன்பதை தேர்வு செய்யவும். அதன்பின்பு Let's Start என்பதை கிளிக் செய்யவும்.

Driving Licence Online: வீட்டில் இருந்தே இதையெல்லாம் செய்யலாம்., ரொம்ப சிம்பிள்!Driving Licence Online: வீட்டில் இருந்தே இதையெல்லாம் செய்யலாம்., ரொம்ப சிம்பிள்!

வழிமுறை-4

வழிமுறை-4

அதை தொடர்ந்து உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு
கிடைத்த ஓடிபியை உள்ளிட்டுசரிபார்க்க வேண்டும்.

அம்மாடியோவ்.! ரூ.20,000 வரை சலுகை கிடைக்கும் புது மாடல் Smartphone-ஆ? நம்பவே முடியல.!அம்மாடியோவ்.! ரூ.20,000 வரை சலுகை கிடைக்கும் புது மாடல் Smartphone-ஆ? நம்பவே முடியல.!

வழிமுறை-5

வழிமுறை-5

அதன்பின்பு உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்கும். அதாவது செயலியில் YEs I Have Voter IDஎன்பதை உறுதிசெய்துவிட்டு, உங்களது வாக்காளர் அட்டை எண், மாநிலம் போன்ற தகவல்களை வழங்கிவிட்டு Proceed என்பதை
கிளிக் செய்யவும்.

Google Pixel 6a மீது அபார சலுகை.! ரிஸ்க் எடுத்து வாங்கலாமா? வேண்டாமா?Google Pixel 6a மீது அபார சலுகை.! ரிஸ்க் எடுத்து வாங்கலாமா? வேண்டாமா?

வழிமுறை-6

வழிமுறை-6

அதன்பின்பு உங்களது போன் திரையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் எண், மொபைல் எண், விண்ணப்பிக்கும் இடம் ஆகியவற்றை உள்ளிடவும்.

வழிமுறை-7

வழிமுறை-7

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு Done என்பதை கிளிக் செய்யவும். இப்போது Form 6B Previews Page காண்பிக்கும். அனைத்து விவரங்களையும் முழுமையாக சரிபார்த்து இறுதி சமர்ப்பிப்பை உறுதிப்படுத்தவும். அவ்வளவு தான் அதன்பின்புஉங்களுக்கு ஒரு Reference numbers கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to link Voter ID Card with Aadhaar Card? Simple tips!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X