ஒரே WhatsApp நம்பரை 2 போன்களில் லிங்க் செய்து, ஒரே நேரத்தில் 2 பேருக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி?

|

இதுவொன்றும் ஏமாற்று வேலை இல்லை! ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை (WhatsApp Account) இரண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஆதரவு அதிகாரப்பூர்வமாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

ஆக உங்களிடம் 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருந்தால், ஒரே நேரத்தில் அந்த 2 ஸ்மார்ட்போன்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்துவது எப்படி என்கிற விவரங்கள் இதோ:

அந்த ஆசையை.. நிறைவேற்றி கொள்ள வேண்டிய நேரமிது!

அந்த ஆசையை.. நிறைவேற்றி கொள்ள வேண்டிய நேரமிது!

இரண்டு வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்த வேண்டும் என்கிற ஏக்கம், ஆசை, எண்ணம் உங்களிடம் இருந்தால்.. அதை உடனே நிறைவேற்றி கொள்ளும் நேரமிது!

ஏனென்றால், ஒரு வாட்ஸ்அப்பை அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்ராய்டு போன்களில் லிங்க் செய்ய அனுமதிக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமல்ல!

ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமல்ல!

ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 2 போன்களில் பயன்படுத்த அனுமதிக்கும் அம்சமானது, வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு மட்டுமின்றி, ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கும் வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி (Android Authority) வழியாக வெளியான தகவலின்படி, இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் ஆன 2.22.25.8-ல் அணுக கிடைக்கிறது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வந்து சேரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 2 போன்களில் லிங்க் செய்வது எப்படி?

ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 2 போன்களில் லிங்க் செய்வது எப்படி?

- முதலில், உங்கள் ப்ரைமரி போனில் (Primary phone), அதாவது முதலும் மற்றும் முக்கியமான போனில் வாட்ஸ்அப் வி2.22.25.8 பீட்டாவை இன்ஸ்டால் செய்யவும்; பின்னர் வாட்ஸ்அப்பிற்குள் செல்லவும்.

(இந்த அம்சம் அனைவருக்கும் வெளியான பிறகு உங்களுக்கு லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்பேட்டை இன்ஸ்டால் செய்தால் போதும்; ஒருவேளை இப்போதே பயன்படுத்த விரும்பினால் கீழ்வரும் வழிமுறைகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும்)

- இப்போது இரண்டாவது போனில் (Secondary Phone) உள்ள வாட்ஸ்அப்பை திறந்து செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்லவும். அங்கே அபௌட் போன் (About Phone) என்கிற விருப்பத்தைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- அபௌட் போன் என்கிற ஆப்ஷனுக்குள் பில்ட் நம்பர் (Build number) என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை பல முறை கிளிக் செய்யவும். எவ்வளவு முறை கிளிக் செய்ய வேண்டும் என்றால் "யு ஆர் நவ் ஏ டெவலப்பர்' (You are now a developer) என்கிற வாசகம் வரும் வரை கிளிக் செய்ய வேண்டும்!

- இப்போது இரண்டாவது மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பை திறந்து, செட்டிங்ஸ்-க்கு சென்று சிஸ்டம் (System) என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதனை தொடர்ந்து டெவலப்பர் ஆப்ஷன்ஸ் (Developer options) மற்றும் ஸ்மாலஸ்ட் விட்த் (Smallest width) என்பதை கிளிக் செய்யவும்.

- அங்கே காணப்படும் நம்பரை (Number) குறித்து வைத்து கொள்ளவும், பின்னர் அந்த நம்பரை 600 ஆக மாற்றவும். இப்படி செய்வதன் வழியாக, உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்பேஸ் (Phone's interface) ஆனது டேப்லெட்டின் இன்டர்பேஸ் (Tablet's interface) ஆக மாறும்!

கடைசியாக!

கடைசியாக!

- இப்போது முதல் போனில் செய்ததை போலவே, இரண்டாவது போனிலும் 2.22.25.8 வாட்ஸ்அப் வெர்ஷனை இன்ஸ்டால் செய்யவும். பின்னர் ஆரம்ப நிலை செட்டிங்ஸ்-ஐ தொடரவும்; ஆதரிக்கிடையில் இடையில் க்யூஆர் கோட்-ஐ (QR Code) பார்ப்பீர்கள்.

- அதை பயன்படுத்தி இன்னொரு ஸ்மார்ட்போனுடன் லிங்க் செய்யவும். இப்போது உங்கள் முதல் போனிற்கு சென்று வாட்ஸ்அப்பை திறந்து ஓவர்ஃப்ளோவை (Overflow) டேப் செய்யவும். பின்னர் மேல் வலது மூலையில் உள்ள லிங்க்டு டிவைசஸை (Linked devices) ஓப்பன் செய்யவும்.

- இப்போது மறுபடியும் உங்களுக்கு ஒரு QR கோட் கிடைக்கும். அதை, உங்கள் இரண்டாவது போன் வழியாக ஸ்கேன் செய்யவும்!

அவ்வளவு தான், வேலை முடிந்தது! இப்போது இரண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள வாட்ஸ்அப் வழியாக நீங்கள் மெசேஜ் அனுப்பலாம், பெறலாம்!

Best Mobiles in India

English summary
How To Link Same WhatsApp Account In 2 Different Android Smartphones And Using Both At A Time

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X