SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

|

Link Aadhaar With SBI Bank Account: நமக்கு உறவினர்களிடம் இருந்து செய்தி வருகிறதோ இல்லையோ அடிக்கடி வங்கிகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கக் கூறி செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால், நம்முடைய சோம்பேறித்தனம் காரணமாகவோ அல்லது நேரமின்மை காரணமாகவோ நம்மில் பலர் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நமக்கு விழிப்புணர்வு இல்லை என்பதே இந்த அலட்சிய போக்கிற்குக் காரணம்.

SBI வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பது எவ்வளவு முக்கியமானது?

SBI வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பது எவ்வளவு முக்கியமானது?

வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பதால் அரசின் மானியங்கள் (கேஸ், நல நிதிகள், உதவித்தொகை, ஓய்வூதியம் மற்றும் MNREGA ஊதியங்கள்) மற்றும் சலுகைகளை நாம் நேரடியாக வங்கி கணக்கிற்கே எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஆதார் மூலம் பணம் செலுத்தும் முறைகளையும் பயன்படுத்தவும் முடியும். இவற்றை மனதில் கொண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தன் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைக்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பல வழிகளை வழங்கியுள்ளது.

1. ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது?

1. ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது?

  • இந்த வழிமுறையை பயன்படுத்த உங்கள் SBI கணக்கிற்கு நெட் பேங்க்கிங் வசதி இருக்க வேண்டும்.
  • அப்படி இல்லை என்றால், வங்கியை தொடர்புகொண்டு நெட் பேங்க்கிங் வசதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • பின்னர், onlinesbi.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று, பர்சனல் பேங்க்கிங் (Personal Banking) என்பதை தேர்வு செய்து உள்நுழைய வேண்டும்.
  • அந்த பக்கத்தில் திரையின் இடது ஓரத்தில் இருக்கும் மை அக்கௌன்ட்ஸ்-ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  • ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

    இந்த செயல்முறையைச் சரியாகப் பின்பற்றவும்

    இந்த செயல்முறையைச் சரியாகப் பின்பற்றவும்

    • நீங்கள் ஆதாருடன் இணைக்க நினைக்கும் வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
    • பின்னர், உங்கள் ஆதார் எண்ணையும் பதிவு செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
    • அடுத்த பக்கத்தில் உங்கள் போன் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் திரையில் காட்டப்படும்.
    • உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பான அலெர்ட்கள் இந்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
    • 2. யோனோ ஆப் மூலம் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

      2. யோனோ ஆப் மூலம் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

      • SBI வங்கியின் பிரத்தியேக ஆப்ஸ் ஆன YONO SBI அல்லது யோனோ SBI லைட்-ஐ நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், அதன் மூலமாகவும் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.
      • அதற்கு முதலில் உங்கள் யோனோ ஆப்ஸ் பின் நம்பர் உடன் உள்நுழைய வேண்டும்.
      • இடது ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட மெனுவை தேர்வு செய்ய வேண்டும்.
      • OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

        Service Request விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டுமா?

        Service Request விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டுமா?

        • அதில் சர்வீஸ் ரெக்வஸ்ட் (Service Request) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
        • அதில் செட்டிங்ஸ் (settings) -> மேனேஜ் ப்ரொபைல் (Manage profile) -> பெர்சனலைஸேஷன் (personalization) என்றவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
        • அதில் உங்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்துவிடலாம்.
        • 3. ஆஃப்லைன் மூலம் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

          3. ஆஃப்லைன் மூலம் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

          • ஏடிஎம் மூலம் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.
          • உங்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது இன்டர்நெட் வசதி இல்லை என்றால், ATM மூலமாகவும் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.
          • SBI ATM சென்று, நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பும் கணக்கின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த வேண்டும்.
          • ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?

            Aadhar Registration விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டுமா?

            Aadhar Registration விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டுமா?

            • பின்னர், உங்கள் பின் நம்பரை செலுத்தி, அதில் சர்வீஸ் ரெஜிஸ்ட்ரேஷன்ஸ் (Service Registrations) -> ஆதார் ரெஜிஸ்ட்ரேஷன் (Aadhar Registration) தேர்வு செய்ய வேண்டும்.
            • அதில் உங்கள் கணக்கின் வகையை தேர்வு செய்து, உங்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
            • இரண்டு முறை ஆதார் எண்ணை பதிவு செய்தால் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்ததற்கான செய்திஉங்களுக்கு அனுப்பப்படும்.
            • 4. SMS மூலம் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

              4. SMS மூலம் உங்கள் SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

              UDI <ஆதார் எண்> என்று டைப் செய்து 567676 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
              உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு ஆதார் எண் இணைப்பை உறுதி செய்யும் மெசேஜ் அனுப்பப்படும்.

              சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!

              5. நேரடியாக வங்கி சென்று SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

              5. நேரடியாக வங்கி சென்று SBI கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?

              உங்கள் அருகில் இருக்கும் SBI வங்கிக்கு நேரடியாக சென்று செல்ப் அடெஸ்ட் (self attest) செய்யப்பட்ட உங்கள் ஆதார் அட்டை நகலைக் கொடுக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டையையும் கையில் எடுத்து செல்ல மறக்க வேண்டாம். ஆதார் இணைப்பு சார்ந்த படிவத்துடன் ஆதார் நகலையும் கொடுத்தால் 24 மணிநேரத்தில் உங்கள் SBI கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் ஆதார் தகவலை SBI வங்கி கணக்குடன் இணைக்கலாம்.

Best Mobiles in India

English summary
How To Link Aadhaar Details With Your SBI Bank Account Using Both Online and Offline Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X