ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க கடைசி கெடு செப்.30! உடனே இதை செய்யுங்கள்!

|

ரேஷன் அட்டையுடன் (Ration card) உங்களுடைய ஆதார் அட்டையை (aadhar Card) இணைப்பதற்காக வழங்கப்பட்ட இறுதி கால அவகாசம் நெருங்கிவிட்டது. இன்னும் நீங்கள் உங்களுடைய ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் உடனடியாக இப்பொழுதே பதிவு செய்திடுங்கள். இல்லை என்றால் சில சிக்கலை சந்திக்க நேரிடும். ஆன்லைனில் எப்படி இதை செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இறுதி காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியா?

இறுதி காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியா?

ரேஷன் அட்டையுடன் உங்களுடைய ஆதார் அட்டையை இணைப்பதற்கான இறுதி காலக்கெடு செப்டம்பர் 30, 2020 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதியை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் ஆதார் அட்டையுடன் உங்களின் ரேஷன் அட்டையை இணைக்கவில்லை என்றால் உடனே கீழே கொடுத்துள்ள முறையை பின்பற்றி ஆன்லைனில் பதிவிடுங்கள்.

ரேஷன் அட்டையுடன், ஆதார் அட்டையை எப்படி இணைப்பது?

ரேஷன் அட்டையுடன், ஆதார் அட்டையை எப்படி இணைப்பது?

 • உங்கள் ரேஷன் அட்டையை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க முதலில் ஆதார் - யுஐடிஏஐ (Aadhaar - UIDAI) வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
 • அடுத்தபடியாக Start Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
 • UIDAI வலைத்தளத்தில் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரி, மாவட்டம் மற்றும் மாநிலம் குறித்த தகவல்களை பதிவிடுங்கள்.
 • போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

  ரேஷன் அட்டை
  • உங்களுக்கு காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் இருந்து உங்கள் ரேஷன் அட்டையின் வகையை தேர்வு செய்து கிளிக் செய்யுங்கள்.
  • உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்களை பதிவிடவும்.
  • மொபைல் எண்ணுக்கு OTP எண்

   மொபைல் எண்ணுக்கு OTP எண்

   • உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை வலைப்பக்கத்தில் பதிவிடவும்.
   • இறுதியாக உங்களுக்கு ஒரு நோடிஃபிகேஷன் அனுப்பப்படும்.
   • அடுத்து உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, உங்களுடைய ரேஷன் அட்டை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
   • டெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவுடெபிட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு இனி புதிய விதிகள்? செப்.30, முதல் நடைமுறைக்கு வரும் RBI உத்தரவு

    ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு

    ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு

    புலம்பெயர்ந்த பயனாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் அட்டை போர்டபிளிடி சேவையையும் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை வைத்திருந்தால் அட்டைக்காரர்கள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

    உடனடியாக இதை செய்யுங்கள்

    உடனடியாக இதை செய்யுங்கள்

    குறிப்பாக ரேஷன் அட்டையுடன், ஆதார் இணைக்கப்படாவிட்டால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது. பயனர்கள் எப்பொழுதும் போல தொடர்ந்து உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இன்னும் இணைக்காதவர்கள் உடனடியாக உங்கள் அட்டைகளைஇணைத்துவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Link Aadhaar Card With Ration Card Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X