WhatsApp இல் யாருடன் அதிகம் பேசுகிறீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஈசி டிப்ஸ்!

|

தற்போதைய காலகட்டத்தில், பலரின் வாழ்க்கையில் WhatsApp என்பது ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், மக்கள் வாட்ஸ்அப் செயலியையே விரும்பி பயன்படுத்துகின்றனர். உலகளவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த பயன்பாட்டின் மூலம், நீங்கள் மெசேஜ் அனுப்புவது மட்டுமல்லாமல், வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

யாரிடம் அதிகம் பேசுகிறீர்கள்?

யாரிடம் அதிகம் பேசுகிறீர்கள்?

இப்படிப் பல அம்சங்கள் நிறைந்திருக்கும் வாட்ஸ்அப் பயன்பாட்டை ஒருநாளுக்கு நீங்கள் எத்தனை முறை ஓபன் செய்து கிளோஸ் செய்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். மெசேஜ்ஜே வரவில்லை என்றாலும் நம்மில் சிலர் சும்மா இந்த பயன்பாட்டை ஓபன் செய்து பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் உங்கள் காண்டாக்ட்டில் யாரிடம் அதிகம் பேசுகிறீர்கள் என்பதைக் கண்டறிய ஒரு எளிய வழி இருக்கிறது.

இப்படி ஒரு வசதி வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருக்கிறதா?

இப்படி ஒரு வசதி வாட்ஸ்அப் பயன்பாட்டில் இருக்கிறதா?

அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம், வாட்ஸ்அப் பயன்பாட்டில் இப்படி ஒரு வசதி இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த புதிய வசதி மூலம் வாட்ஸ்அப் இல் உங்களுக்குப் பிடித்த நபர் யார் என்பதை அறியலாம், அல்லது யாருடன் நீங்கள் அதிகம் அரட்டை அடிப்பீர்கள் என்பதை கச்சிதமாக இந்த அம்சம் சொல்லிவிடுகிறது. சரி இப்போது, இந்த டிரிக்கை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

Jio Phone 3 Booking: எப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் Jio Phone 3 முன்பதிவு செய்வது?Jio Phone 3 Booking: எப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் Jio Phone 3 முன்பதிவு செய்வது?

இன்டர்நெட் வசதி

இன்டர்நெட் வசதி

இன்டர்நெட் வசதியுடன் தான் வாட்ஸ்அப் செயல்படுகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே, இந்த விஷயம் தான் இப்பொழுது உங்களுக்குத் தேவையான தகவலைத் தரப்போகிறது. நீங்கள் ஒருவருடன் அதிகம் பேசும் போது, அந்த காண்டாக்ட் நபருடன் அதிகப்படியான டேட்டாவை செலவு செய்கிறீர்கள், இந்த தரவை உங்களுடைய வாட்ஸ்அப் கண்காணித்துக்கொண்டே தான் இருக்கிறது.

டேட்டா செலவு கணக்கை கண்காணிக்கும் வாட்ஸ்அப்

டேட்டா செலவு கணக்கை கண்காணிக்கும் வாட்ஸ்அப்

இந்த டேட்டா செலவு கணக்கை கொண்டே, நீங்கள் யாருடன் அதிகம் பேசுகிறீர்கள் என்பதை நாம் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். அதாவது, உங்களின் தரவு பயன்பாட்டின் அடிப்படையில் நீங்கள் யாருடன் அதிகம் அரட்டை அடிக்கிறீர்கள் அல்லது யாருடன் போட்டோ, வீடியோ மற்றும் வீடியோ அழைப்பு என்று அதிக டேட்டாவை செலவிடுகிறீர்கள் என்று வாட்ஸ்அப் பட்டியலிட்டுக் காட்டிவிடும்.

ஒரே கிளிக்கில் அனைத்து தகவல்

ஒரே கிளிக்கில் அனைத்து தகவல்

அதேபோல், உங்கள் WhatsApp பயன்பாட்டில் உள்ள காண்டாக்ட்டின் பெயரைக் கிளிக் செய்தால் அவர்களின் சாட் ஓபன் ஆகும். அதற்கு பின் அவர்களின் பெயரை கிளிக் செய்தால் அவர்களுடன் எத்தனை உரைச் செய்திகள், ஸ்டிக்கர்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், GIF கள், ஆடியோ செய்திகள், ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது மற்றும் பெறப்பட்டுள்ளது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

வாட்ஸ்அப் இல் யாருடன் அதிகம் அரட்டை அடிக்கிறீர்கள் என்பதை எப்படி கண்டறிவது?

வாட்ஸ்அப் இல் யாருடன் அதிகம் அரட்டை அடிக்கிறீர்கள் என்பதை எப்படி கண்டறிவது?

  • முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்யவும்.
  • உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் ஓபன் செய்த பிறகு, வலது மேல் பக்கத்தில் உள்ள மூன்று டாட் மெனுவைக் கிளிக் செய்யவும்.
  • மெனுவை
    • டாட் மெனுவை தட்டிய பின், செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
    • டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
    • இப்பொழுது ஸ்டோரேஜ் யூசேஜ் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
    • யாருடன் அதிக நேரம் செலவளித்துள்ளீர்கள்

      யாருடன் அதிக நேரம் செலவளித்துள்ளீர்கள்

      உங்களுடைய ஸ்டோரேஜ் லோட் ஆவதற்குச் சற்று நேரம் எடுத்துக்கொள்ளும், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். சிறிது நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பட்டியல் உங்களுக்குக் காண்பிக்கப்படும். யாருடன் அதிகம் அரட்டை அடித்தீர்களோ அவர்களின் பெயர் பட்டியலில் முதலில் இருக்கும். அவர்களை தொடர்ந்து யாருடன் அதிக நேரம் செலவளித்துள்ளீர்கள் என்பதை டேட்டா அளவை வைத்து வாட்ஸ்அப் ஆர்டர் வரிசையில் உங்களுக்குக் காண்பிக்கும்.

      மொத்தமாக எத்தனை வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது?

      மொத்தமாக எத்தனை வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது?

      இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் வாட்ஸ்அப்பில் யாருடன் அதிகம் பேசியுள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், இது வரை உங்களுக்கு எத்தனை வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது மற்றும் நீங்கள் எவ்வளவு மெசேஜ் அனுப்பியுள்ளீர்கள், வீடியோ கால்லிங் அழைப்பு நேரம், மீடியா பைல் எண்ணிக்கை போன்ற தகவல்களுக்கு மேலே கூறிய முறையை அப்படியே பின்பற்றி இறுதியில் நெட்வொர்க் யூசேஜ் கிளிக் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Know Who Is Chatting Lot With Whom On Whatsapp : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X