மழையில் நனையாமல், வெயிலில் வேகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ்: Smartphone இல் இதை பண்ணுங்க

|

வானிலை நிலை என்பது நிலை இல்லாததாக இருக்கிறது. எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்று கணிக்க முடியாத கால நிலை தற்போது நிலவுகிறது. திடீரென குளிர் காற்று வீசி மழை பெய்கிறது.

மழை பெய்வது போல் சூழல் ஏற்பட்டு வெயில் அடிக்கிறது. எனவே எந்த இடத்திற்கு எப்போது செல்லலாம், குடை எடுத்துக் கொண்டு போலாமா? வேண்டாமா? உடை குளிருக்கு ஏற்றார் போல் அணிந்து போகலாமா, வெயில் நிலைக்கு ஏற்றது போல் அணிந்து போகலாமா என்ற குழப்பமும் நீடிக்கிறது. ஆமப்பா இதுக்கு என்னதான் வழி என்ற உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.

உடனுக்குடன் வானிலை தகவல்

உடனுக்குடன் வானிலை தகவல்

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் உலகத் தகவல் முழுவதையும் உடனுக்குடன் அறியலாம். உலகத் தகவலே கிடைக்கும் என்ற நிலையில் வானிலைத் தகவல் மட்டும் கிடைக்காமல் இருக்குமா என்ன?.

ஸ்மார்ட்போனில் வானிலை அறிக்கை

ஸ்மார்ட்போனில் வானிலை அறிக்கை

வானிலை தகவலை உடனுக்குடன் ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம். கூகுள் க்ரோம் மூலமாகவும் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலமாகவும் வானிலைத் தகவலை உடனுக்குடன் அறியலாம்.

மூன்றாம் தரப்பு பயன்பாடு என்பது ப்ளே ஸ்டோரின் நிபந்தனைக்குள் உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பப்படி இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூகுளில் வானிலை தகவல் அறிவது எப்படி?

கூகுளில் வானிலை தகவல் அறிவது எப்படி?

முதலில் கூகுளில் எப்படி வானிலைத் தகவலை அறிவது என்று பார்க்கலாம்.

கூகுள் பயன்பாட்டை ஓபன் செய்து, மேல் இடது மூலையில் உள்ள வானிலை ஐகானை கிளிக் செய்யவும் அல்லது வானிலை என டைப் செய்யவும். இதன்பின் முகப்பு திரையில் வானிலை நிலவரத்தின் புள்ளி விவரங்கள் காட்டப்படும்.

அடுத்த 1 வாரத்திற்கான வானிலை நிலவரங்கள் ஏறத்தாழ துல்லியமாகக் காட்டப்படும். உங்கள் பகுதியில் மழை எதிர்பார்க்கலாமா என்ற விவரத்தையும் இதன்மூலம் அறிந்துக் கொள்ளலாம். வெப்ப நிலையையும் இந்த பயன்பாட்டில் துல்லியமாக அறியலாம்.

AccuWeather

AccuWeather

AccuWeather என்பது மூன்றாம் தரப்பு செயலி ஆகும். இது அமெரிக்க ஊடக நிறுவனம். இது உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு சேவைகளை உடனுக்குடன் வழங்குகிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை இந்த பயன்பாடு பெற்றிருக்கிறது. அதிகப்பட்ச துல்லியமான வெப்பநிலை இந்த பயன்பாட்டில் வழங்கப்படுகிறது.

இந்த பயன்பாடு நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

The Weather Channel

The Weather Channel

The Weather Channel என்பது ஆலன் மீடியா குழுமத்தின் துணை நிறுவனமான வெதர் க்ரூப்பிற்கு சொந்தமானது. IBM ஆல் இந்த சேனல் இயக்கப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்புக்கான சிறந்த சேவைகளை பெற மற்றொரு சிறந்த பயன்பாடாகும் இது. உள்ளூர் வானிலை முன்னறிவுப்பு, தீவிர மழை, புயல் மற்றும் சூறாவளி கண்காணிப்புகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளலாம்.

Weather - Live & Forecast

Weather - Live & Forecast

Weather - Live & Forecast என்பது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த செயலி ஆகும். இது ப்ளே ஸ்டோரில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்கிறது. நிகழ்நேரத்தில் காலநிலையை கண்காணிக்க இந்த பயன்பாடு மிக உதவியாக இருக்கும். இந்த பயன்பாடு ப்ளே ஸ்டோரில் 2022 என்ற குறியீட்டுடன் கிடைக்கிறது.

Weather App - Weather Radar

Weather App - Weather Radar

Weather App - Weather Radar செயலியும் கூகுள் ப்ளே ஸ்டோரில் சிறந்த மதிப்பெண்ணை பெற்றிருக்கிறது. இந்த பயன்பாட்டில் அடுத்தடுத்த மணிநேரத்தில் என்ன கால நிலை இருக்கும் என்பதை துல்லியமாக முன்கூட்டியே அறிந்துக் கொள்ளலாம். இந்த பயன்பாட்டில் டேட்டா சேஃப்டி உறுதி செய்யப்பட்டுள்ளதாக ப்ளே ஸ்டோரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Weather Forecast: Live Weather

Weather Forecast: Live Weather

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சிறந்த பயன்பாட்டில் பிரதான ஒன்று Weather Forecast: Live Weather ஆகும். பெயர் குறிப்பிடுவது போல் நேரலையில் காலநிலையை அறிந்துக் கொள்ளலாம். 2022 என்ற வருட குறியீட்டுடன் இந்த பயன்பாடு ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.

அனைத்து பகுதியின் வெப்ப நிலையையும் பிற பயன்பாடுகளில் இருந்தும் அறிந்துக் கொள்வது போல் துல்லியமாக இதிலும் அறிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Know Weather Forecast on Your Smartphone? Easy Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X