உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளதா என்று சோதிக்க வேண்டுமா?

|

நாம் நினைப்பது போல, டிஜிட்டல் உலகம் பாதுகாப்பானது என்று கருத முடியாது. இது குறித்து ஒரு முறை கூட நாம் யோசிக்காமல், பல இணையதளங்களில் பதிவு செய்து வருகிறோம். ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒரு நடவடிக்கை ஆகும். ஏனெனில் பெரும்பாலான இந்த இணையதளங்கள் ஹேக் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, நம் கடவுசொல் (பாஸ்வேர்டு) கசிய வாய்ப்புள்ளது. இந்த கடவுசொற்களின் மூலம் உங்கள் கணக்கு எளிதாக ஹேக் செய்யப்படுகின்றன.

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளதா என்று சோதிக்க வேண்டுமா?

எனவே உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் கடவுசொற்கள் இன்னும் பத்திரமாக இருக்கிறதா அல்லது அதை மாற்ற வேண்டுமா என்பதை கண்டறியும் வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் அளிக்கிறோம். அதிஷ்டவசமாக, உங்கள் கணக்கின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

ட்ரோ ஹன்ட் அளிக்கும் ஹேவ் ஐ பீன் பவ்டு?

ட்ரோ ஹன்ட் அளிக்கும் ஹேவ் ஐ பீன் பவ்டு?

உங்கள் கணக்கின் கடவுசொல் கசிந்துள்ளதா என்பதை பரிசோதிக்க, சிறப்பான இணையதளமான ட்ரோ ஹன்ட் அளிக்கும் ஹேவ் ஐ பீன் பவ்டு உதவுகிறது. இந்த இணையதளத்தில் கசிந்த எல்லா பயனர்பெயர் மற்றும் கடவுசொல் ஆகியவற்றின் ஒரு தரவுத் தளம், பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால், உங்கள் தகவல்கள் கசிந்து இருந்தால், அது குறித்து இங்கு காட்டப்படுகிறது. இந்த இணையதளத்தில் மறைவான தளமாக இருந்தால் கூட, அதன் பயனர்பெயர் மற்றும் கடவுசொல் அடங்கிய ஒருங்கிணைப்பைப் பெற முடிகிறது.

இந்த இணையதளத்தின் மூலம் உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா என்பதை மிக எளிதாக கண்டறிய முடியும். உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுசொல் பாதுகாப்பாக உள்ளதா என்பதை பரிசோதிக்க, ஹேவ் ஐ பீன் பவ்டு? என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்திலேயே ஒரு தேடல் பார் இருப்பதை காணலாம். அந்த தேடல் பாரில், உங்கள் மின்னஞ்சல் ஐடி-யை தட்டச்சு செய்துவிட்டு, பவ்டு? என்ற பொத்தான் மீது தட்டவும்.

இந்தத் தகவல் அளிக்கப்பட்ட பிறகு, இந்த இணையதளமானது உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு ஒரு விரிவான தேடலை நடத்தி, ஏதாவது தரவு மீறலில் எங்காவது ஈடுபடுத்தப்பட்டுள்ளதா? என்று சோதித்து பார்க்கும். உங்கள் கடவுசொல் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில், 'நல்ல செய்தி - எந்த பவ்வேஜும் கண்டறியப்படவில்லை! எந்த கணக்கு தரவு மீறல் பதிப்புகளும் இல்லை' என்ற செய்தியைக் காணலாம். இதன்மூலம் உங்கள் கடவுசொல் பாதுகாப்பாக இருக்கிறது என்பதால், அதை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பயனர்பெயர் / கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதை எப்படி அறியலாம்?

உங்கள் பயனர்பெயர் / கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பதை எப்படி அறியலாம்?

உங்கள் கடவுசொல் வைத்து எங்காவது முயற்சி செய்யப்பட்டிருந்தால், 'ஓ நோ - பவ்டு!' என்ற செய்தியை நீங்கள் காணலாம். அதன்பிறகு, எத்தனை தளங்கள் மூலம் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல் பயன்படுத்தப்பட்டது என்ற எண்ணிக்கையை, இந்தத் தளம் காட்டுகிறது. இந்த முடிவு கிடைத்த உடனே, உங்கள் கடவுசொலை நீங்கள் மாற்றிவிட வேண்டும்.

இதேபோல உங்களுக்கு உள்ள பல்வேறு பயனர்பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பாதுகாப்பை, இந்த தளத்தில் பரிசோதித்து அறியலாம்.

அறிவிப்பைத் தேர்வு செய்து, பாதுகாப்பாக இருங்கள்'

அறிவிப்பைத் தேர்வு செய்து, பாதுகாப்பாக இருங்கள்'

இதையும் கடந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், 'நான் பவ்டு செய்யப்படும் போது எனக்கு அறிவி' என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள். இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி எங்காவது கசிந்த தரவில் தோன்றினால், உடனே அது உங்களுக்கு அறிவிப்பை வழங்கும்.

'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?'போர்ட்நைட் மொபைல்' கேம் ஆண்ராய்டில் எப்போது வரும்?

உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா என்பதை அறிய

உங்கள் கடவுசொல் திருடப்பட்டுள்ளதா என்பதை அறிய

இதேபோல, நீங்கள் பயன்படுத்தும் கடவுசொல் பவ்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க முடியும். இதை சோதித்து பார்க்க, 'கடவுசொற்கள்' என்பதன் மீது கிளிக் செய்யவும். அங்குள்ள தேடல் பாரில் உங்கள் கடவுசொல்லை உள்ளிட்டு, 'பவ்டு?' என்பதன் மீது கிளிக் செய்யவும். இது உங்கள் கடவுசொல் பவ்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனே சோதித்து காட்டிவிடும்.

முடிவு

ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தில் உங்கள் கடவுசொல்லை பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இதன்மூலம் இணையதளங்களில் நீங்கள் பதிவு செய்யும் போது, உங்கள் கடவுசொல் எதிர்பாராதவிதமாக கசிவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உங்களுக்கு நம்பகமாக தெரியும் இணையதளங்களில் மட்டும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை உள்ளிடுங்கள்!

Best Mobiles in India

English summary
Given that the digital world is unsafe, your data is always under threat. You might have a strong password, but the same is also prone to hacking. So, you need to know how to find out if your password is actually stolen. Take a look at how to find it from the steps we have given here and protect your data.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X