Home
How to

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவது எப்படி?

உலக அளவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தள செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப் என்பதும், ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் சுமார் ஒரு பில்லியன் பேர் இந்த செயலியை பயபடுத்தி வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ்அப் செயலி

வாட்ஸ்அப் செயலி

ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ், சிம்பியன் உள்பட கிட்டத்தட்ட அனைத்து ஓஎஸ் உள்ள ஸ்மார்ட்போன்களிலும் தற்போது வாட்ஸ் அப் செயலி உள்ளது. வாட்ஸ் அப் செயலியின் முக்கிய பயன்பாடு ஒருவருக்கொருவர் மெசேஜ்களை பரிமாறி கொள்வது மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள், ஃபைல்கள் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு அம்சம் ஆகும். அதேபோல் சாதாரண எஸ்.எம்.எஸ். மெசேஜ் மாதிரி வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்கள் மிஸ் ஆகுவதோ அல்லது தாமதம் ஆகுவதோ இல்லை.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்

ஸ்மார்ட்போன் பிரச்சனைக்குரிய நேரத்தில் இந்த வசதி நமக்கு கைகொடுக்கும், இந்த கட்டுரையில் வாட்ஸ் அப் செயலியை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் எப்படி இன்ஸ்டால் செய்ய வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். நீங்கள் ஒருவேளை இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை வைத்து பயன்படுத்தி கொண்டிருந்தாலும் உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்டெப் 1:

ஸ்டெப் 1:

புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை டவுன்லோடு செய்யுங்கள்

நீங்கள் உங்களுடைய டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப் பயன்படுத்த விரும்பினால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை டவுன்லோடு செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் உள்ளது. ஒன்று நார்மல் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் மற்றொன்று தின் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயர் ஆகும். இந்த இரண்டில் நார்மல் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை டவுன்லோடு செய்யும் போது சில பிரச்சனைகள் ஏற்படுவதாக பலர் குறை கூறி வருவதால் தின் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இதன் பின்னர் கம்ப்யூட்டரில் எப்படி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தலாம் என்பதை இனி பார்ப்போம்

ஸ்டெப் 2:

ஸ்டெப் 2:

தின் புளுஸ்டேக்ஸ் ஆப் பிளேயரை இன்ஸ்டால் செய்யுங்கள்

இந்த பிளேயரை இன்ஸ்டால் செய்வதற்கு உங்கள் டிவைசில் 2ஜிபி அளவுக்கு இடமிருக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் டிவைசில் இடமில்லை என்ற செய்தி உங்கள் திரையில் காண்பிக்கும். அதேபோல் இன்ஸ்டால் செய்யும்போது வேறு ஏதாவது வார்னிங் மெசேஜ் தோன்றினால் அதுகுறித்து கவலைப்படாமல் ஓகே செலக்ட் செய்து கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் உங்களுடைய திரையில் வாட்ஸ் அப் ஐகானுடன் கூடிய ஒரு மெசேஜ் கிடைக்கும். அதனை செலக்ட் செய்யவும்

ஸ்டெப் 3:

ஸ்டெப் 3:

உங்கள் திரையில் நீங்கள் பார்த்த அந்த வாட்ஸ் அப் ஐகானை க்ளிக் செய்து வாட்ஸ் அப் செயலியை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்

ஸ்டெப் 4:

ஸ்டெப் 4:

டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்த பின்னர் உங்களுக்கு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த தயாராகியுள்ள ஒரு ஐகான் தோன்றும். அந்த ஐகானை க்ளிக் செய்து ஓப்பன் செய்து அதன்மூலம் வாட்ஸ் அப் மெசேஞ்சரை பயன்படுத்தலாம்

ஸ்டெப் 5:

ஸ்டெப் 5:

வாட்ஸ் அப் செயலியை நீங்கள் ஓப்பன் செய்யும்போது வழக்கமாக கேட்பது போல் 'அக்ரி அண்ட் கண்டினியூ' என்று கேட்கும். அதனை நீங்கள் ஓகே செய்தால் போதும்

அதன் பின்னர் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு வெரிஃபிகேஷன் எண் வரும். அந்த எண்ணை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அந்த வெரிஃபிகேஷன் கோட் எணை பயன்படுத்திய பின்னர் உங்களுடைய வழக்கமான வாட்ஸ் அப் பணியை கம்ப்யூட்டரிலும் தொடரலாம். ஒருசில நேரத்தில் மட்டும் வெரிஃபிகேஷன் கோட் எண் வருவதற்கு காலதாமதம் ஆகலாம். அந்த நேரத்தில் கால் செய்யும் ஆப்சனை தேர்வு செய்து வெரிஃபிகேஷன் எண்ணை பெற்று கொள்ளலாம்.

மொபைல் பிரச்சனைக்கு உள்ளாகும் நேரத்தில்...

மொபைல் பிரச்சனைக்கு உள்ளாகும் நேரத்தில்...

வாட்ஸ் அப் செயலியை மொபைலில் பயன்படுத்த முடியாத நேரத்தில், மொபைல் பிரச்சனைக்கு உள்ளாகும் நேரத்தில் மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்

Best Mobiles in India

English summary
How to Install and Use Whatsapp in PC and Laptop: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X