உங்க போன்ல இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்கிறதா? இதை செஞ்சா ஸ்பீட் சும்மா பிச்சுக்கும்.!

|

உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகம் (Internet speed) குறைவாக இருக்கிறதா?அப்படியானால் உங்களுடைய ஸ்மார்ட்போன் செட்டிங்கில் (smartphone settings) சில மாற்றங்களை நீங்கள் உடனே மேற்கொள்ள வேண்டும்.! இந்த மாற்றங்களை நீங்கள் மேற்கொண்டால் - உங்களுடைய ஸ்மார்ட்போனின் 'இன்டர்நெட் வேகம்' சும்மா மின்னல் வேகத்தில் பிச்சுக்கும்.!

நிலையான மற்றும் வேகமான இன்டர்நெட் சேவை ஏன் முக்கியமானது?

நிலையான மற்றும் வேகமான இன்டர்நெட் சேவை ஏன் முக்கியமானது?

இன்றைய காலகட்டத்தில் மிகவும் வேகமான இன்டர்நெட் சேவை (Internet) அத்தியாவசியமாகிவிட்டது.

நமது அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பலவிதமான விஷயங்களை; இப்பொழுது நாம் ஸ்மார்ட்போன் வாயிலாகவே செய்து முடிக்கிறோம். ஸ்மார்ட்போன் (smartphone) வாயிலாக இந்த வேலைகளைச் செய்து முடிப்பதற்கு 'இன்டர்நெட் சேவை' (Internet service) மிகவும் அவசியமானது.

இன்டர்நெட் சேவை எவ்வளவு முக்கியமானதோ - அதைப்போல அதனுடைய வேகமும் மிகவும் முக்கியமானது.

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் போனில் 'இது' இருப்பதனால் தான் இன்டர்நெட் வேகம் குறைகிறது.!

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் போனில் 'இது' இருப்பதனால் தான் இன்டர்நெட் வேகம் குறைகிறது.!

உதாரணமாக யூடியூபில் வீடியோ (YouTube videos) பார்ப்பது முதல் Netflix இல் சீரிஸ் பார்ப்பது வரை அனைத்து விதமான வேலைகளுக்கும் வேகமான இன்டர்நெட் சேவை அவசியமாகிறது.

என்னதான் உங்களுடைய டேட்டா பேக் (Data pack) மிகவும் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கினாலும்; உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்ட டேட்டாக்களின் காரணமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் கணிசமாகக் குறைகிறது.

4G போன்களை சவக்குழியில் தள்ளி மூட பார்க்கிறதா 5G.! வெளியான உண்மை ரிப்போர்ட்.!4G போன்களை சவக்குழியில் தள்ளி மூட பார்க்கிறதா 5G.! வெளியான உண்மை ரிப்போர்ட்.!

இதை சரி செய்துவிட்டாலே.! ஸ்பீட் சும்மா பிச்சுக்கும்.!

இதை சரி செய்துவிட்டாலே.! ஸ்பீட் சும்மா பிச்சுக்கும்.!

இதை சரி செய்துவிட்டாலே.! உங்களின் இன்டர்நெட் வேகம் மிகவும் அதிகரிக்கும்.!

அதை எப்படிச் செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி, உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்.

சரி, வாருங்கள் இதை எப்படி செய்வது என்ற சூப்பர் டெக் டிப்ஸை (Tech tips) இப்போது தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியமே இது தான்.!

நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியமே இது தான்.!

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் கூகுள் குரோம் பிரவுசரை (Google chrome browser) திறந்து, பின்-அதற்கு மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்து - அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!

இந்த டேட்டாக்களை உங்கள் போனில் இருந்து அழிக்க வேண்டும்.!

இந்த டேட்டாக்களை உங்கள் போனில் இருந்து அழிக்க வேண்டும்.!

பின்பக்க கீழே ஸ்க்ரோல் செய்தால் ஸ்டோரேஜ் (Storage) அல்லது டேட்டா ஸ்டோர்டு (Data stored) என்ற விருப்பம் காண்பிக்கப்படும்; இதை கிளிக் செய்து கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாமல் சேவ் செய்யப்பட்ட இன்டர்நெட் டேட்டாக்கள் அனைத்தும் கிளியர் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

உங்கள் போனில் இது ON-ல் உள்ளதா? அல்லது OFF-ல் உள்ளதா?

உங்கள் போனில் இது ON-ல் உள்ளதா? அல்லது OFF-ல் உள்ளதா?

இரண்டாவதாக நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுடைய கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக, செட்டிங்ஸ் என்ற விருப்பத்தை கிளிக் செய்து அதில் சிங்க் ஆன் (Sync On) என்று காண்பிக்கப்படும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷன் ஆன் (ON) இல் இருந்தால், அதை உடனடியாக ஆஃப்பிற்கு (OFF) மாற்றவும். இந்த ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா சேவ் (Data save) செய்யப்படும் இதனால் இன்டர்நெட் வேகம் அதிகம் ஆகும்.

ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.! இது சாத மொபைல் கேஸ் இல்லை.!ஸ்மார்ட்போன் சூட்டை குறைக்கும் உலகின் முதல் கூலிங் கேஸ்.! இது சாத மொபைல் கேஸ் இல்லை.!

உங்கள் போனின் Mobile Network செட்டிங்க்ஸை உடனே மாற்றுங்கள்.!

உங்கள் போனின் Mobile Network செட்டிங்க்ஸை உடனே மாற்றுங்கள்.!

இறுதியாக நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்கள் ஸ்மார்ட் போனின் செட்டிங்ஸ் ஓப்பன் செய்து, மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது அதன் உள்ளிருக்கும் டேட்டா சேவர் (Data saver) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இந்த டேட்டா சேவர் அம்சம் ஆன்ல இருந்தால் அதை ஆஃப் செய்து வைப்பது உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும்.

அவசரப்பட்டு இப்போவே போன் வாங்காதீங்க.! 2023ல பட்ஜெட் பிரைஸ்ல 5G போனே வாங்கலாம்.!அவசரப்பட்டு இப்போவே போன் வாங்காதீங்க.! 2023ல பட்ஜெட் பிரைஸ்ல 5G போனே வாங்கலாம்.!

உடனே உங்கள் போனில் இதை ட்ரை செய்து பாருங்கள்.!

உடனே உங்கள் போனில் இதை ட்ரை செய்து பாருங்கள்.!

இப்படி செய்வதன் மூலம் பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ்கள் உரியும் டேட்டாவை இந்த அம்சம் தடுக்கிறது.

இதனால், தேவையில்லாத இடங்களுக்கு டேட்டா செல்லாமல் - நீங்கள் பயன்படுத்தும் ஒரே இடத்திற்கு ஒட்டுமொத்த டேட்டாவின் வேகமும் கிடைக்கப்பெறுகிறது.

இதன் மூலம் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்.

உடனே இந்த செட்டிங்ஸ்களை உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் மாற்றி அமைத்து, இன்டர்நெட் வேகத்தை செக் செய்து பாருங்கள். கட்டாயம் சிறிதளவு வேகம் அதிகரித்திருக்கும்.

Best Mobiles in India

English summary
How To Increase Internet Speed In Your Smartphone By Simple Settings Change

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X