ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!

|

கிட்டதட்ட அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்களுமே, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு "எரிச்சலூட்டும் விடயம்" இருந்தால் - அது ஸ்பேம் கால்களாகத்தான் (Spam Calls) இருக்கும்!

நீங்கள் ஒரு முக்கியமான அழைப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில், "அன்பான வாடிக்கையாளர்களே!" என்று தொடங்கும் ஒரு ஆட்டோமேட்டட் வாய்ஸ் அழைப்பையோ அல்லது ஏதோ ஒரு தயாரிப்பபை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பின் கீழ் உங்களை அணுகும் ஒரு ஏஜென்ட்டோ, உங்களுக்கு ஏமாற்றத்தின் உச்சிக்கு மட்டுமல்ல, கோபத்தின் உச்சிக்கே கூட கொண்டு செல்லலாம்.

எப்போவாச்சு..னா பரவாயில்ல; எப்போவுமே..னா எப்படி?

எப்போவாச்சு..னா பரவாயில்ல; எப்போவுமே..னா எப்படி?

அப்பா, அம்மா, நண்பர்கள் அல்லது நேசமிகு உறவுகளிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வருகிறதோ இல்லையோ, ஸ்பேம் கால்கள் உங்கள் மொபைல் நம்பரை, ஒரு நாளைக்கு ஒருமுறை அல்ல, பல முறை குறி வைப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளன.

இப்படியான ஸ்பேம் கால்களை கண்டுபிடித்து அவைகளை புறக்கணிப்பது, சிலருக்கு சற்றே கடினமான பணியாக இருக்கும். ஒருவேளை நீங்களும் அந்த பட்டியலில் உள்ளீர்கள் என்றால்? அடிக்கடி வரும் ஸ்பேம் அழைப்புகளால் எரிச்சலான சூழ்நிலையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், கவலையை விடுங்க! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ட்ரூகாலர் இருக்கு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு!

ட்ரூகாலர் இருக்கு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு!

ட்ரூகாலர் (Truecaller) போன்ற தேர்ட்-பார்ட்டி ஆப்கள், ஸ்பேம் கால்களை அடையாளம் காணவும், அவற்றை தடுக்கவும் உதவும் என்றாலும் கூட, அவற்றின் முழு அளவிலான அம்சங்களைப் பயன்படுத்த, நீங்கள் அடிக்கடி சந்தா கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதுமட்டுமின்றி ட்ரூகாலர் போன்ற ஆப்களை பயன்படுத்துவது திருடன் கையில் சாவியை கொடுப்பதற்கு சமம். ஏனெனில் ஸ்பேம் கால்களிடம் இருந்து உங்களை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் - குறிப்பிட்ட சில ஆப்கள் - உங்கள் மொபைல் நம்பர் மற்றும் பிற தகவல்களை க்ளவுட் பேஸ்டு டேட்டாபேஸில் (cloud-based database) சேமிக்கின்றன. ப்ரைவஸி கண்ணோட்டத்தில் பார்த்தால், இது சில யூசர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

அப்படியென்றால்... மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தாமலேயே ஸ்பேம் கால்களை எவ்வாறு ஒழித்துக்கட்டுவது? இதோ இப்படித்தான்!

சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!சம்பவம் செய்த Samsung! ஜூன்.29 வரை வேற எந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனும் வாங்கிடாதீங்க!

கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!

கொடுத்து வைத்த ஆண்ட்ராய்டு யூசர்கள்!

தெரியாத எண்ணில் இருந்து வருவது, ஸ்பேம் கால்-ஆ அல்லது உண்மையான அழைப்பா என்பதை எளிதாக கண்டறிய உதவும் ஒரு "தந்திரம்" ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அணுக கிடைக்கிறது.

பலருக்கும் இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும், ஏனெனில் இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் உங்களுக்கு ஏற்படவிருந்த தொந்தரவை தட்டிக்கழிக்கும்.

குறிப்பிட்ட அம்சத்தை 'ஆன்' செய்ய, நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பின்வரும் எளிமையான மற்றும் படிப்படியான செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.

அதற்கு முன், குறிப்பிட்ட அம்சம் ஆண்ட்ராய்டு 12-க்கு கீழே உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டமை கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ் இல்லாமல் ஸ்பேம் கால்களை அடையாளம் காண்பது எப்படி?

தேர்ட்-பார்ட்டி ஆப்ஸ் இல்லாமல் ஸ்பேம் கால்களை அடையாளம் காண்பது எப்படி?

- டயலர் ஸ்க்ரீனை திறக்கவும்.

- மேல் வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை (three vertical dots) கிளிக் செய்யவும்.

- பிறகு செட்டிங்ஸ் (Settings) சென்று, அசிஸ்ட்டிவ் (Assistive) என்பதன் கீழ் காலர் ஐடி & ஸ்பேம் (Caller ID & spam) என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது சீ காலர் அன்ட் ஸ்பேம் ஐடி (See caller and spam ID) மற்றும் ஃபில்டர் ஸ்பேம் கால்ஸ் (Filter spam calls) என்கிற விருப்பங்களை எனேபிள் செய்யவும்; அவ்வளவுதான்!

இது போதாது என்றால்.. இன்னொரு மேட்டரும் உள்ளது!

இது போதாது என்றால்.. இன்னொரு மேட்டரும் உள்ளது!

ஒருவேளை, ஸ்பேம் கால்களை அடையாளம் காண்பது மற்றும் ஃபில்டர் செய்வது உங்களுக்கு போதுமானதாக இல்லை என்றால், இந்த செயல்முறையின் கீழ் சிக்காத சில மொபைல் நம்பர்களை நீங்கள் கைமுறையாக பிளாக் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அதற்கும் ஒரு வழி உண்டு.

இவ்வாறு செய்வதன் வழியாக, குறிப்பிட்ட எண்களில் இருந்து மீண்டும் அழைப்புகளை பெற மாட்டீர்கள். அதெப்படி என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஸ்மார்ட்போனில் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஸ்மார்ட்போனில் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி?

- (மறுபடியும்) டயலர் ஸ்க்ரீனில் இருந்து செட்டிங்ஸ் மெனுவிற்குள் செல்லவும்

- இப்போது ஜெனரல் (General) என்கிற விருப்பத்தின் கீழ் பிளாக்டு நம்பர்ஸ் (Blocked numbers) என்பதை கிளிக் செய்யவும்.

- தற்போது, அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் நீங்கள் பிளாக் செய்யலாம் அல்லது பிளாக் செய்ய விரும்பும் மொபைல் எண்ணை கைமுறையாக 'ஆட்' செய்யலாம்.; அவ்வளவுதான், வெற்றிகரமாக ஸ்பேம் கால்களை ஒழித்துக்கட்டி விட்டீர்கள்!

மேலும் இதுபோன்ற டெக் டிப்ஸ் மற்றும் லேட்டஸ்ட் டெக் நியூஸ்களை படிக்க கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தை பின்தொடரவும்.

Best Mobiles in India

English summary
Want to identify and Block Spam Calls. Here is our step by step guide.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X