வாட்ஸ்அப் Last Seen, Profile Picture-ஐ குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மறைப்பது எப்படி?

|

வாட்ஸ்அப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரைவசி பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆனது. அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பின்னர் பல வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல், டெலெக்ராம் போன்ற மற்ற சாட்டிங் பயன்பாடுகளைப் பயன்படுத்தத் துவங்கினர். இதற்குப் பின்னர் நிறுவனம் அதன் பயனர்களின் பிரைவசி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பல புதிய அப்டேட்களை நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட அம்சம் இது

நீண்ட காலத்திற்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட அம்சம் இது

வாட்ஸ்அப் ஒரு வழியாக இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனியுரிமை அம்சங்களில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தை நிறுவனம் நீண்ட காலத்திற்கு முன்பே சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது தான் பயன்பாட்டிற்குக் கிடைக்கிறது. வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது அவர்களின் காண்டாக்ட்டில் இருக்கும் சில குறிப்பிட்ட தொடர்புகளில் இருந்து மட்டும் அவர்களின் லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ரொபைல் புகைப்படத்தை மறைக்க முடியும்.

இந்த அம்சம் உண்மையிலேயே நிம்மதி அளிக்கும்

இந்த அம்சம் உண்மையிலேயே நிம்மதி அளிக்கும்

இந்த அம்சம் உண்மையிலேயே சில பயனர்களுக்கு நிம்மதி அளிக்கலாம். இந்த மெசேஜ்ஜிங் ஆப்ஸில் ஏராளமான பயனர்கள் ஒன்று சேர்ந்துவிட்டதனால், குறிப்பிட்ட சிலரிடமிருந்து உங்கள் பிரைவசியை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம் என்பதே உண்மை. பல பயனர்களின் மொபைல் எண்கள் உங்கள் காண்டாக்ட் புக்கில் சேமிக்கப்பட்டுள்ளதால் உங்கள் குடும்பம் மற்றும் நெருக்கமான நண்பர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் இருந்து உங்கள் பிரைவசியை மறைப்பது தேவைப்படுகிறது.

ப்ரொபைல் புகைப்படம் மற்றும் லாஸ்ட் ஸீன் ஹைடு செய்யலாமா?

ப்ரொபைல் புகைப்படம் மற்றும் லாஸ்ட் ஸீன் ஹைடு செய்யலாமா?

இந்த அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்து, அறிமுகம் செய்வதற்கும் இதுவே காரணமாகும். வாட்ஸ்அப் ப்ரொபைல் புகைப்படம் மற்றும் லாஸ்ட் ஸீன் விபரங்களை மறைக்க வேண்டிய அவசியத்தைப் பயனர்கள் கேட்டதைத் தொடர்ந்து இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கூட நீங்கள் லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ரொபைல் படத்தை மறைக்க முடியும். ஆனால், அது முற்றிலுமாக உங்கள் காண்டாக்ட்டில் உள்ள அனைவரிடமும் மறைத்துவிடும்.

இனி குறிப்பிட்ட சில காண்டாக்ட் நபர்களிடம் இருந்து மட்டும் மறைக்கலாம்

இனி குறிப்பிட்ட சில காண்டாக்ட் நபர்களிடம் இருந்து மட்டும் மறைக்கலாம்

ஆனால், WhatsApp இறுதியாக இப்போது வழங்கியுள்ள அப்டேட் பயனர்களுக்கு இதைக் குறிப்பிட்ட சில காண்டாக்ட் நபர்களிடம் இருந்து மட்டும் மறைக்க உதவுகிறது. இந்த அம்சத்தை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், இந்த புதிய அப்டேட் அம்சத்தை விரைவாக இயக்க கீழே வழங்கப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ரொபைல் புகைப்படத்தைக் குறிப்பிட்ட சில காண்டாக்ட் நபர்களிடமிருந்து மட்டும் மறைத்துக்கொள்ளுங்கள்.

டெக் டிப்ஸ்: Word டாக்குமெண்ட்-ஐ சில நொடிகளில் PDF ஆக மாற்றுவது எப்படி?டெக் டிப்ஸ்: Word டாக்குமெண்ட்-ஐ சில நொடிகளில் PDF ஆக மாற்றுவது எப்படி?

லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ரொபைல் படத்தைக் குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்து மட்டும் மறைப்பது எப்படி?

லாஸ்ட் ஸீன் மற்றும் ப்ரொபைல் படத்தைக் குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்து மட்டும் மறைப்பது எப்படி?

  • வாட்ஸ்அப் பயனர்கள் முதலில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும்.
  • டிஸ்பிளேவின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று-புள்ளிகள் கொண்ட பட்டனைத் தட்டவும்.
  • அங்கிருந்து செட்டிங்ஸ் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
  • இப்போது, Settings > Account என்பதை மீண்டும் தட்டவும்.
  • இப்போது Privacy விருப்பத்தைக் காண்பீர்கள்.
  • இப்போது Last Seen and Profile Picture விருப்பங்கள் அனைத்தையும் காண்பீர்கள்.
  • Last Seen விருப்பம்

    Last Seen விருப்பம்

    • இப்போது Last Seen விருப்பத்தை கிளிக் செய்யவும்.
    • இதில் உங்களுக்கு நான்கு விருப்பங்கள் காண்பிக்கப்படும், அதிலிருந்து My Contacts except என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
    • இப்போது WhatsApp காண்டாக்ட் பட்டியல் காண்பிக்கப்படும்.
    • இதிலிருந்து, உங்களின் Last Seen and Profile Picture-ஐ மறைக்க விரும்பும் அனைத்து தொடர்புகளையும் தேர்ந்தெடுக்கவும்.
    • இதற்குப் பிறகு, கீழே அமைந்துள்ள பச்சை நிற டிக்மார்க் ஐகானை தட்டவும்.
    • முக்கிய குறிப்பு பயனர்களே

      முக்கிய குறிப்பு பயனர்களே

      • இனி உங்களின் Last Seen and Profile Picture நீங்கள் தேர்வு செய்த நபர்களுக்குக் காண்பிக்கப்படமாட்டாது.
      • இதேபோல், உங்களின் Profile Picture விருப்பத்திற்கும் நீங்கள் குறிப்பிட்ட சில காண்டாக்ட் நபர்களைத் தேர்வு செய்யலாம். இதன் செயல்முறையும் ஒத்ததாகும்.
      • முக்கிய குறிப்பு: WhatsApp உங்கள் ஸ்மார்ட்போன் காண்டாக்ட் முகவரிப் புக்கில் சேமிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே காட்டுகிறது, தெரியாத பயனர்களைக் காட்டாது என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
How to hide WhatsApp last seen and profile picture from selected users only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X