WhatsApp சாட் மறைப்பது எப்படி? சாட்டை Save செய்து.. டெலீட் செய்து.. மீட்டெடுப்பது எப்படி? ப்ரோ டிப்ஸ்..

|

வாட்ஸ்அப் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றாக மாறியுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த வாட்ஸ்அப் பயன்பாடானது சுமார் 2 பில்லியினுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு, பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அதன் நிறுவனத்தின் தலைமை பெயரை மெட்டா என்று மாற்றம் செய்து மெட்டாவெர்ஸ் தொழினுட்பத்தை மும்முரமாக விரிவுபடுத்தி வருகிறது.

இன்னும் எதிர்பார்க்கப்படும் சில அம்சங்கள் வாட்ஸ்அப் இல் இல்லையா?

இன்னும் எதிர்பார்க்கப்படும் சில அம்சங்கள் வாட்ஸ்அப் இல் இல்லையா?

வாட்ஸ்அப் போல் மெட்டா சேவைகளின் மீதும் இப்போது பயனர்கள் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரி, இப்போது வாட்ஸ்அப் பக்கம் வருவோம், உலகளவில் மிகவும் பிரபலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்அப் பயன்பாடானது, அமெரிக்கப் பயனர்களிடம் அந்த அளவில் அதிக ஈர்ப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் சில அம்சங்கள் இதில் இல்லை. குறிப்பாகச் சாட்டை மறைப்பதற்கான அம்சம் இங்கில்லை.

WhatsApp அரட்டைகளை எவ்வாறு சேமிப்பது மற்றும் மீட்டெடுப்பது?

WhatsApp அரட்டைகளை எவ்வாறு சேமிப்பது மற்றும் மீட்டெடுப்பது?

இந்த வகையான முக்கியத்துவத்துடன், உங்கள் சராசரி பயனரின் உரையாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவற்றை நீங்கள் ஒழுங்கமைக்க வேண்டிய அளவிற்கு வளரக்கூடும். வாட்ஸ்அப் சாட்களின் அளவு வழிசெலுத்த முடியாததாக இருக்கும் அல்லது நீங்கள் இனி ஈடுபடாத தொடர்புகள் பயன்பாட்டில் இருக்கிறது என்றால் அவற்றை என்ன செய்வது என்பது போன்ற குழப்பம் எழலாம். எந்தவொரு சூழ்நிலையிலும், WhatsApp அரட்டைகளை எவ்வாறு சேமிப்பது மற்றும் மீட்டெடுப்பது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!

வாட்ஸ்அப் சாட்களை எப்படி சுலபமாக மற்றவர்களிடம் இருந்து மறைப்பது?

வாட்ஸ்அப் சாட்களை எப்படி சுலபமாக மற்றவர்களிடம் இருந்து மறைப்பது?

உங்களின் வாட்ஸ்அப் அரட்டையில் எப்போது வேண்டுமானாலும் புதிய உரையைப் பெற்றால், அரட்டை இயல்பாகவே காப்பகப்படுத்தப்படும். பயன்பாட்டின் அமைப்புகளில் இதை மாற்றலாம். உங்கள் அரட்டைகள் நிர்வகிக்க முடியாததாகிவிட்டாலோ அல்லது பயன்பாட்டில் நீங்கள் ஈடுபடாத தொடர்புகள் இருந்தாலோ, WhatsApp அரட்டைகளைச் சேமித்து மீட்டெடுப்பது எப்படி என்பதையும், உங்கள் வாட்ஸ்அப் சாட்களை எப்படி சுலபமாக மற்றவர்களிடம் இருந்து மறைக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

வாட்ஸ்அப் இன் ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம்

வாட்ஸ்அப் இன் ஆட்டோமேட்டிக் பேக்அப் அம்சம்

அதேபோல், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எப்படி வாட்ஸ்அப் சாட்டை ஹைடு செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். சரி முதலில், வாட்ஸ்அப் இல் இருக்கும் சாட்களை எப்படி சேவ் செய்து, அவற்றை உங்களின் தேவைக்கேற்ப மீட்டெடுப்பது எப்படி எனபதை பார்க்கலாம். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த, வாட்ஸ்அப் இன் பேக்அப் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஆண்ட்ராய்டு பயனர் என்றால் கீழே உள்ள செயல்முறையைப் பின்பற்றுங்கள்.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

வாட்ஸ்அப் ஆட்டோமேட்டிக் பேக்கப் செயல்முறையை ஆக்டிவ் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஆட்டோமேட்டிக் பேக்கப் செயல்முறையை ஆக்டிவ் செய்வது எப்படி?

  • முதலில் உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
  • உங்கள் போனில் கூகுள் டிரைவ் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • வாட்ஸ் ஆப் ஓபன் செய்து மெனுவிற்கு செல்லுங்கள்.
  • மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
  • சாட் செலக்ட் செய்யுங்கள்.
  • அதனைத் தொடர்ந்து சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள்.
  • "நெவர்(Never)" ஆப்ஷன் என்ன செய்யும்?

    • பேக்கப் டு கூகுள் டிரைவ் கிளிக் செய்யுங்கள்.
    • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கப் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
    • "நெவர்(Never)" ஆப்ஷன் கிளிக் செய்தால் உங்களின் சாட்கள் பேக்கப் ஆகாது.
    • உங்களின் கூகுள் அக்கௌன்ட் விபரத்தைத் தேர்வு செய்யுங்கள்.
    • உங்களின் சாட் டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிக்கொள்ளும்.
    • வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..

      மேனுவல் பேக்கப் செயல்முறை

      மேனுவல் பேக்கப் செயல்முறை

      • மெனு கிளிக் செய்யுங்கள்.
      • செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
      • சாட் ஆப்ஷன் சென்று சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள்.
      • பேக்கப் ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யுங்கள்.
      • உங்களின் கூகுள் டிரைவ் அக்கௌன்ட் இல் பேக்கப் ஆகிவிடும்.
      • இதேபோல், ஐபோன் பயனர்கள் அவர்களின் ஆப்பிள் iCloud ஸ்டோரேஜில் அவர்களின் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்து தேவைப்படும் போது மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
      • வாட்ஸ்அப் சாட்டை முற்றிலுமாக ஹைடு செய்ய முடியுமா?

        வாட்ஸ்அப் சாட்டை முற்றிலுமாக ஹைடு செய்ய முடியுமா?

        இப்போது, உங்களின் வாட்ஸ்அப் சாட்டை எப்படி எப்படி மற்றவர்களின் கண்களில் இருந்து பாதுகாப்பாக மறைத்து வைப்பது என்று பார்க்கலாம். வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் வாட்ஸ்அப் சாட்டை முற்றிலுமாக ஹைடு செய்ய முடியாது என்றாலும் கூட, உங்கள் சாட்டை, சாட் பாக்சில் இருந்து மறைத்து வைக்க ஒரு எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனர் அல்லது ஐபோன் பயனர் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றி உங்களின் வாட்ஸ்அப் சாட்டை ஹைடு செய்துகொள்ளுங்கள்.

        ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!

        Android சாதனத்தில் WhatsApp சாட்களை எவ்வாறு மறைப்பது?

        Android சாதனத்தில் WhatsApp சாட்களை எவ்வாறு மறைப்பது?

        • உங்கள் Android சாதனத்தில், முதலில் நீங்கள் வாட்ஸ்அப் ஓபன் செய்ய வேண்டும்.
        • மறைக்க விரும்பும் சாட் அல்லது குறிப்பிட்ட நபரின் தொடர்பை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும்.
        • இப்போது காண்பிக்கப்படும் விருப்பங்களில் Archive விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
        • இதன் மூலம் மட்டுமே WhatsApp சாட்களை நீங்கள் Archive செய்து காப்பகப்படுத்த முடியும்.
        • Unarchive மற்றும் Archive விருப்பம் உங்கள் சாட்டை என்ன செய்யும்?

          Unarchive மற்றும் Archive விருப்பம் உங்கள் சாட்டை என்ன செய்யும்?

          • தொடர்புகள் பட்டியலின் மேலே உள்ள Archive விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் காப்பகப்படுத்தப்பட்ட சாட்டை நீங்கள் மீண்டும் மீட்டெடுக்கலாம்.
          • நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் உரையாடலைக் கண்டறிந்ததும், அதைச் சுருக்கமாக அழுத்திப் பிடிக்கவும்.
          • டிஸ்பிளேவின் மேல் வலதுபுறத்தில் உள்ள மெனுவிலிருந்து 'Unarchive' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
          • இதன் மூலம் நீங்கள் மரித்த சாட் மீண்டும் சாட் பாக்ஸிற்கு வந்து சேரும்.
          • கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

            iOS சாதனத்தில் WhatsApp சாட்களை எவ்வாறு மறைப்பது?

            iOS சாதனத்தில் WhatsApp சாட்களை எவ்வாறு மறைப்பது?

            ஐபோனில் உங்கள் அரட்டை செய்திகளை மறைக்க சில எளிமையான நுட்பங்கள் உள்ளன. இதைத் தொடங்குவதற்கு, நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டை நீண்ட நேரம் அழுத்தி, பாப் அப் மெனுவிலிருந்து Archive விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டாவது விருப்பம் அரட்டையில் வலமிருந்து இடமாக ஸ்லைடு செய்வது ஆகும். Archive விருப்பம் காண்பிக்கும் வரை ஸ்லைடு செய்ய வேண்டும். இந்த இடத்தில் வெளியீட்டு பொத்தானை அழுத்தினால் அரட்டை காப்பகப்படுத்தப்படும்.

            இந்த ப்ரோ டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்

            இந்த ப்ரோ டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்

            மற்றொரு விருப்பம், அமைப்புகளுக்குச் சென்று, பின்னர் அரட்டைகள், பின்னர் அனைத்து அரட்டைகளையும் காப்பகப்படுத்துதல். இது உங்கள் எல்லா தொடர்புகளையும் மறைக்க உதவும். காப்பகப்படுத்தப்பட்ட விருப்பத்தைத் தட்டி, நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் உரையாடலில் இடதுபுறமாக ஸ்வைப் செய்வதன் மூலம், காப்பகப்படுத்தப்பட்ட அரட்டையை மீட்டெடுக்கலாம். இந்த விருப்பங்களை நீங்கள் காணவில்லை என்றால், உங்களிடம் காப்பகப்படுத்தப்பட்ட தொடர்புகள் எதுவும் இல்லை என்பது அர்த்தம். இந்த ட்ரிக்ஸ்களை பயன்படுத்தி பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How To Hide Save And Backup WhatsApp Chats On Both Android And iPhone smartphones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X