சிம்பிள் டிப்ஸ்: ஐபோனில் ஆப்ஸ்களை மறைத்து வைப்பது எப்படி?

|

ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பது என்பது அரிது. இந்தியாவில் பலவகை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களது புதிய வகை மாடல் மொபைல்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் எத்தனை ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை கையில் வைத்திருந்தாலும், ஐபோன் வைத்திருப்பவர் என்றால் அது தனி மதிப்புதான்.

அதிகரிக்கும் ஐபோன் பயன்பாடுகள்

அதிகரிக்கும் ஐபோன் பயன்பாடுகள்

ஐபோன் என்றவுடன் அது லட்சக்கணக்கில் இருக்கும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. அதற்கேற்ப ஐபோன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெரும்பாலானோர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆப்பிள் ஐபோன் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் விலை

ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் விலை

ஆப்பிள் ஐபோன் எஸ்இ சாதனமானது ரூ.32,999-க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனமானது 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.41,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 64 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்ட சாதனம் விலை ரூ.51999 ஆக இருக்கிறது. அடுத்தடுத்து பல்வேறு விலைப்பிரிவில் ஐபோன் சாதனங்கள் கிடைக்கிறது.

பிரதானமாக இருக்கும் ஆப்ஸ்கள்

பிரதானமாக இருக்கும் ஆப்ஸ்கள்

ஸ்மார்ட்போன்கள் என்றாலும் சரி ஆப்பிள் ஐபோன் என்றாலும் சரி அதில் பிரதான தேவையாக இருப்பது செயலிகள் (ஆப்ஸ்). பல்வேறு செயலிகளில் தொடங்கி கேம்கள் வரை அனைத்தும் ஸ்மார்ட்போன்களுக்கு தனியாக ஐபோனுக்கு தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. செயலிகள் பயன்பாடு ஒரே மாதிரியாக இருந்தாலும் அனுபவம் என்பதில் வித்தியாசம் இருப்பதாகவே கூறப்படுகிறது.

செயலியை மறைத்து வைப்பது எப்படி

செயலியை மறைத்து வைப்பது எப்படி

ஸ்மார்ட்போன்களில் செயலியை மறைத்து வைப்பதற்கு பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் ஐபோன்களில் குறிப்பிட்ட செயலிகளை மறைத்து வைப்பதற்கு என சில வழிமுறைகள் உள்ளது அதுகுறித்து பார்க்கலாம்.

 • ஆப் ஸ்டோர் செயலியை ஓபன் செய்யவும் அதன்பின் அக்கவுண்டை ஓபன் செய்யவும்.
 • அக்கவுண்டை ஓபன் செய்வதற்கு மேலே உள்ள தங்களது புகைப்படத்துடன் இருத்தும் தேர்வை கிளிக் செய்யவும். வாங்கு என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
 • விரும்பும் பயன்பாட்டை கண்டுபிடித்த பின் மேலே ஓபன் மற்றும் ஹைட் காண்பிக்கப்படும் அதை இடதுபுறமாக ஸ்வைப் செய்து ஹைட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். முடிந்தது என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
 • மறைத்தலை எடுத்தல் என்ற விருப்பம்

  மறைத்தலை எடுத்தல் என்ற விருப்பம்

  ஆப் ஸ்டோர் பயன்பாட்டை திறக்கவும்

  தங்களது கணக்கை திறக்கவும் அதற்கு தங்களது புகைப்படத்தை தட்டவும்.

  கீழே ஸ்க்ரால் செய்து மறைக்கப்பட்ட பயன்பாடுகளை வாங்குதல் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதில் தங்கள் மறைக்கப்பட்ட பயன்பாடுகளை தேர்ந்தெடுத்து அதை அன்ஹைட் செய்து கொள்ளலாம்.

  பேஸ் லாக் எடுப்பதில் சிரமம்

  பேஸ் லாக் எடுப்பதில் சிரமம்

  கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்திருக்கும் போது மொபைல் போனில் பேஸ் லாக் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

  ஐஓஎஸ் 13.5 அப்டேட்

  ஐஓஎஸ் 13.5 அப்டேட்

  இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஐஓஎஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் ஐஓஎஸ் 13.5 அப்டேட்டின் மூலம் பேஸ் ஐடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்த பிறகு கேமராவில் பேஸ் ஐடி ஸ்கேன் செய்யும்போது முகக்கவசம் அணிந்திருப்பது கண்டறியப்பட்டால் தானாக பாஸ்வேர்டு கேட்கும்.

  சிறுகுறு கோளாறுகள் சரி செய்யப்படும்

  சிறுகுறு கோளாறுகள் சரி செய்யப்படும்

  முன்பாகவே அறிவித்தது போல் கூகுளுடன் இணைந்து ஆப்பிள் முன்னெடுக்கும் கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கான API இதில் இடம்பெறும். இதோடு இந்த அப்டேட்டின் மூலம் சிறுகுறு கோளாறுகள் சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் அறிவிப்பு ஐபோன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to Hide Apps in Apple Iphone?- Here the simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X