வீட்டில் இருந்தபடியே உங்களின் புதிய எஸ்பிஐ ஏடிஎம் கார்டை பெறுவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகமாக தான் உள்ளது. மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பின்பு இப்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் இந்த கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் மத்தியில் ஆன்லைன் பேங்கிங் வசதி ஆனது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்றுகூறலாம். அதன்படி பல வங்கிகள் தங்களது அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்கி வருகிறது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், மக்கள் வங்கிகளுக்கு வருவதை தவிர்க்க தேவையான அனைத்து நடைமுறைகளையும்
டிஜிட்டல் உதவி மூலம் நிறைவேற்றி வருகிறது. மேலும் வங்கிகளின் ஆன்லைன் சேவையானது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளவகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் புதிய ஏடிஎம் கார்டை பெற வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே உங்களின் ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இதற்கான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

குறிப்பு: அதாவது உங்களின் மொபைல் எண் உங்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும்முக்கியமானது என்றே கூறலாம். அப்போது தான் உங்களால் ஓ.டி.பி-ஐ பெறமுடியும்.

வழிமுறை-1
முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள்.

வழிமுறை-2
அடுத்து இந்த இணையதளத்தில் e-services என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்னர் நீங்கள் ஏ.டி.எம். சேவைகளை (ATM/Debit card) தேர்வு செய்ததும், உடனே OTP-based மற்றும் profiles password-based என்ற இரண்டு விருப்பம் உங்கள் முன் இருக்கும். அதில் நீங்கள் ஓ.டி.பி தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4
அதன்பின்பு புதிய பாப் அப் உருவாகும். அதில் உங்களுக்கும் தேவையான ஏ.டி.எம் கார்ட் சேவைகளை தேர்வுசெய்து, அந்த தளத்தில் உங்களது அனைத்து விவரங்களை கொடுக்க வேண்டும்.

வழிமுறை-5
பின்பு அடுத்து 7 வேலை நாட்களில் உங்களுக்கு ஏடிஎம் கார்ட் கிடைக்கும் என்ற குறுஞ்செய்தி கிடைக்கும்.

வழிமுறை-6
அதன்பின்பு உங்களது வங்கி கணக்கில் நீங்கள் கொடுத்த சரியான முகவரிக்கு ஏ.டி.எம் கார்ட் அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் வேற முகவரிக்கு ஏடிஎம் கார்டை அனுப்ப விரும்பும் பட்சத்தில் மட்டுமே வங்கி கிளையை அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications