Home
How to

இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு சேவை: பேஸ்புக், இன்ஸ்டாவில் புளூ டிக் பெறுவது எப்படி? எவ்வளவு கட்டணம்?

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைத்தளம் இப்போது மெய்நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளை கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. அதேபோல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் முக்கியமான செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இந்நிலையில் மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தைக் கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், இன்ஸ்டாவில் புளூ டிக் பெறுவது எப்படி? எவ்வளவு கட்டணம்?

அதாவது இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ.699 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு ரூ.599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. பின்பு வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுண்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுண்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்க வேண்டும். அடுத்து வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை கிளிக் செய்ய வேண்டும்.

பேஸ்புக், இன்ஸ்டாவில் புளூ டிக் பெறுவது எப்படி? எவ்வளவு கட்டணம்?

வழிமுறை-2: அதன்பின்பு செட்டிங்ஸ்-அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஒருவேளை இந்த அம்சம் காணப்படவில்லை என்றால், உடனே செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

வழிமுறை-3: குறிப்பாக மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் வரும் கட்டண முறையைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் அங்கு அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்வுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற கண்டிப்பாக 18 வயது அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். பின்பு நிறுவனங்கள் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றைத் தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப்போக வேண்டும்.

பேஸ்புக், இன்ஸ்டாவில் புளூ டிக் பெறுவது எப்படி? எவ்வளவு கட்டணம்?

குறிப்பாக தற்போது பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள்,பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இப்போது மெட்டா வெரிஃபைடு சேவை ஆனது இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Get Verified Blue Badge on Facebook, Instagram in India: Simple Tips.!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X