Home
How to

கூகுள் போட்டோஸ் சேவையில் அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெறுவது எப்படி?

எனினும், பெரும்பாலான கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் குறிப்பிட்ட அளவு மெமரி மட்டுமே வழங்குகின்றன.

ஸ்மார்ட்போன் கேமராக்களில் தொடர்ந்து புதுவித தொழில்நுட்பம் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மொபைலில் மெமரி மிகப்பெரும் பிரச்சனையாகி வருகிறது. ஸ்மார்ட்போன் கேமராக்கள் அதிக ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்குவதால், மெமரி மிக விரைவில் தீர்ந்து போகிறது. இதேபோன்று வீடியோக்களும் அதிக தரமுள்ளதாக 4K, ஃபுல் ஹெச்.டி. தரத்தில் படமாக்கும் போது ஸ்மார்ட்போன் மெமரி சீக்கிரம் தீர்ந்து போகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய கிளவுட் ஸ்டோரேஜ் பயன்பாடு சிறப்பான தீர்வாக இருக்கிறது.

கூகுள் போட்டோஸ் சேவையில் அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெறுவது எப்படி?

எனினும், பெரும்பாலான கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் குறிப்பிட்ட அளவு மெமரி மட்டுமே வழங்குகின்றன. அதன்பின் கூடுதல் மெமரியை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற விதிமுறை மற்றும் நிபந்தனைகளிலும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது.


கூகுள் போட்டோஸ் (Google Photos) இதற்கு சரியான பதிலாக இருக்கிறது. கூகுள் பயனர்களை தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கிளவுடில் பதிவேற்றம் செய்ய உதவுகிறதரு. கூகுள் போட்டோஸ் சேவையில் ஹை ரெசல்யூஷன் புகைப்படங்கள் அதிகபட்சம் 16 எம்.பி. வரையிலானவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். எனினும், இவ்வாறு செய்ய அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெற வேண்டியது அவசியாகும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் போட்டோஸ் சேவையில் அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெறுவது எப்படி?

முதலில் செய்ய வேண்டியவை:
பயனர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை உயர் ரெசல்யூஷனிற்கு மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. கூகுள் போட்டோஸ் ஆப் தானாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை உயர் ரெசல்யூஷனில் மாற்றிக் கொள்ளும். உயர் ரெசல்யூஷன் புகைப்படங்கள் அதன் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனினும், இவை அதிக மெமரியை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

கூகுள் போட்டோஸ் சேவையில் அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெறுவது எப்படி?

அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெற:

1 - முதலில் பேக்கப் மோட் ஆப்ஷனை தேர்வு செய்து ஹை குவாலிட்டியை க்ளிக் செய்ய வேண்டும்

2 - கூகுள் போட்டோஸ் ஆப் திறக்க வேண்டும்

3 - வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று கோடுகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

5 - இனி பேக் & சின்க் பட்டனை ஆன் செய்ய வேண்டும்

6 - பேக்கப் மோட் ஆன் செய்து ஹை குவாலிட்டியை தேர்வு செய்ய வேண்டும்

7 - இனி பேக்கப் டிவைஸ் ஃபோல்டர்ஸ் ஆப்ஷனில் நீஙகள் அப்லோடு செய்ய வேண்டிய ஃபோல்டர்களை தேர்வு செய்ய வேண்டும்

Best Mobiles in India

English summary
How to get unlimited storage on Google Photos : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X