Android போனில் iPhone ஈமோஜியை பயன்படுத்துவது எப்படி? உங்க சாட்டிங்கை கெத்தாக்கும் டிப்ஸ்.!

|

iPhone Emojis on Your Android: சாட்டிங் அல்லது மெசேஜ் செய்வது என்பது இப்போது நம் அனைவருக்கும் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. குறிப்பாக, மக்கள் இப்போது அவர்களுடைய உரையாடல்களை சாட்டிங் மூலமாக மேற்கொள்கிறார்கள். சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்தவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்ற உங்கள் போனில் பலதரப்பட்ட ஈமோஜிக்களை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. இதில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் ஈமோஜிக்கள் ஐபோனில் கிடைக்கும் ஈமோஜிக்களை விட வித்தியாசமானது.

இந்த ஆண்டில் புதிதாக 30-க்கும் மேற்பட்ட புதிய ஈமோஜிகளா?

இந்த ஆண்டில் புதிதாக 30-க்கும் மேற்பட்ட புதிய ஈமோஜிகளா?

குறிப்பாக, உங்கள் சாட்டிங் அனுபவத்தைச் சுவாரசியமாக மாற்ற, டெவலப்பர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஈமோஜிகளை சோதித்து, புதியவற்றை அறிமுகப்படுத்துகின்றனர். Emojipedia இன் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய ஈமோஜிகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உங்களுக்கு ஐபோனில் கிடைக்கும் ஈமோஜி கிடைக்க வாய்ப்பில்லை.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஐபோன் ஈமோஜி கிடைக்குமா?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஐபோன் ஈமோஜி கிடைக்குமா?

ஆனால், நாங்கள் சொல்லும் வழியைப் பின்பற்றினால், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஐபோனில் கிடைக்கும் ஈமோஜிக்களை நீங்கள் பெற முடியும். கூகிள் மற்றும் ஆப்பிள் வழங்கும் ஈமோஜிக்கள் வெவ்வேறாக இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கும் ஐபோனில் இருக்கும் ஈமோஜி தேவைப்படுகிறது என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஐபோன் ஈமோஜிகளை பெற சில எளிய வழிகள் உள்ளது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

இப்படி செய்தால் Android போனில் iPhone இன் ஈமோஜியைப் பெறலாமா?

இப்படி செய்தால் Android போனில் iPhone இன் ஈமோஜியைப் பெறலாமா?

நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனர் என்றால் கீழே வரும் விபரங்களைச் சரியாகப் படித்து, உங்கள் போனிலும் ஐபோனில் கிடைக்கும் ஈமோஜிக்களை பயன்படுத்தத் துவங்குங்கள். சரி, இப்போது எப்படி Android போனில் iPhone இன் ஈமோஜியைப் பெறுவது என்று தெரிந்துகொள்ளலாம். நாம், முன்பே சொன்னது போல, Google Play Store இல் பல மூன்றாம் தரப்பு ஈமோஜி கீபோர்ட்கள் உங்களுக்கு இந்த வேலையை மிக எளிமையாகச் செய்து முடிக்க அனுமதிக்கின்றன.

அந்த ஆப்ஸை பயன்டுத்தினால் பெஸ்ட்?

அந்த ஆப்ஸை பயன்டுத்தினால் பெஸ்ட்?

இவற்றை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ஈமோஜிகள் 100% அப்படியே ஐபோனில் கிடைக்கும் ஈமோஜி போல துல்லியமாக இருக்காது, சில வேறுபாடுகள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களுக்கு பல ஆப்ஸ்கள் கிடைத்தாலும், நம்பகமான ஆப்ஸ்களாக Kika Keyboard 2021 - Emoji Keyboard, Emoji Keyboard, and Emoji keyboard - Cute Emoticons போன்ற ஆப்ஸ்கள் செயல்படுகின்றன. சரி, இந்த ஆப்ஸை பயன்படுத்தி எப்படி ஈமோஜியை மாற்றுவது என்று பார்க்கலாம்.

Kika Keyboard 2021 கீபோர்டை எப்படி யூஸ் செய்வது?

Kika Keyboard 2021 கீபோர்டை எப்படி யூஸ் செய்வது?

  • உங்கள் Android மொபைலில் Google Play Store ஓபன் செய்யுங்கள்.
  • மேலே உள்ள சர்ச் பாரில் Kika Keyboard 2021 - Emoji Keyboard என்று டைப் செய்யுங்கள்.
  • Kika Keyboard 2021 - Emoji Keyboard ஆப்ஸை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இப்போது இந்த ஆப்ஸை ஓபன் செய்து Enable Kika Keyboard என்ற பட்டனை அழுத்தவும்.
  • இப்போது, ​​​​உங்கள் போனின் Settings சென்று Keyboard and Input method கிளிக் செய்யவும்.
  • இப்போது பயன்பாட்டில் உள்ள கீபோர்டை கிளிக் செய்து Kika Keyboard-க்கு மாற்றவும்.
  • உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

    இன்னும் தரமான அம்சங்களுடன் புது ஈமோஜி கீபோர்ட் வேண்டுமா?

    இன்னும் தரமான அம்சங்களுடன் புது ஈமோஜி கீபோர்ட் வேண்டுமா?

    அவ்வளவுதான், இப்போது நீங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஐபோன் ஈமோஜிகளைக் கொண்டிருக்கும் கிகா கீபோர்டைப் பயன்படுத்தலாம்.

    இதேபோல், நீங்கள் இன்னும் தரமான அம்சங்களுடன் இருக்கக் கூடிய ஒரு கீபோர்டை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் கட்டாயம் டவுன்லோட் செய்து பார்க்க வேண்டிய ஆப்ஸ் Facemoji ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஐபோன் ஈமோஜியை பயன்படுத்தலாம்.

    Facemoji ஆப்ஸை பயன்படுத்துவது எப்படி?

    Facemoji ஆப்ஸை பயன்படுத்துவது எப்படி?

    • உங்கள் Android மொபைலில் Google Play Store ஓபன் செய்யுங்கள்.
    • Facemoji என்று டைப் செய்து, சர்ச் செய்யுங்கள்.
    • Facemoji ஆப்ஸை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.
    • இப்போது ஆப்ஸை ஓபன் செய்தால், உங்களுக்கு Go என்ற பட்டன் காட்டப்படும், அதை கிளிக் செய்யுங்கள்.
    • இதேபோல் இன்னும் சில ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறதா?

      இதேபோல் இன்னும் சில ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறதா?

      • அது உங்களை போனின் செட்டிங்ஸ் அழைத்துச் செல்லும்.
      • இப்போது பயன்பாட்டில் உள்ள கீபோர்டை கிளிக் செய்து Facemoji -க்கு மாற்றவும்.
      • அவ்வளவுதான், இந்த முறையைப் பின்பற்றி உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஐபோன் ஈமோஜிக்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to Get iPhone Emojis on Your Android

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X