Home
How to

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுள் லைவ் டிரான்ஸ்கிரைப் அம்சம் பெறுவது எப்படி?

இதன் மூலம் பேச்சு குறைபாடுள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

2010 கூகுள் IO டெவலப்பர் நிகழ்வில் கூகுள் நிறுவனம் பேச்சு குறைபாடு கொண்டவர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய வழி வகுக்கும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பேச்சு குறைபாடுள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். பிராஜக்ட் யுஃபோனியா என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் கூகுள் நிறுவனம் லைவ் கேப்ஷன், லைவ் டிரான்ஸ்கிரைப் மற்றும் பல்வேறு இதர அம்சங்களை செயல்படுத்தி காண்பித்தது. அந்த வகையில் செயலி வெவ்வேறு வகையிலான பேச்சு வழக்கங்களை புரிந்து கொள்ள வைக்க முடியும்.

ஆண்ட்ராய்டில் கூகுள் லைவ் டிரான்ஸ்கிரைப் அம்சம் பெறுவது எப்படி?

இதற்கு முற்றிலும் முரணாக அமையும் வகையில் கூகுள் நிறுவனம் செயலியின் ஒரு வடிவத்தை லைவ் டிரான்ஸ்கிரைப் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. எனினும், இது வெளியிடப்படவில்லை என்பதை குறிக்கும் Unreleased பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன்

லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன்

இந்த செயலி காது கேட்பதில் குறைபாடுள்ளவர்களுக்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்று செயல்படும். மற்றொரு செயலி சவுண்ட் ஆம்ப்ளிஃபையர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிறப்பான குரல் அங்கீகாரத்திற்கென சத்தத்தை தெளிவாக மேம்படுத்தும்.

 70-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது

70-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது

லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி தற்சமயம் 70-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. இது மொபைல் போனின் மைக்ரோபோனை பயன்படுத்துகிறது. இதுதவிர இருவழி தகவல் பரிமாற்றம் செய்ய டைப்-பேக் கீபோர்டு வழங்குகிறது. இதை பேச்சு குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

1 - லைவ் டிரான்ஸ்கிரைப் மற்றும் சவுண்ட் ஆம்ப்ளிஃபையர் செயலிகள்

1 - லைவ் டிரான்ஸ்கிரைப் மற்றும் சவுண்ட் ஆம்ப்ளிஃபையர் செயலிகள்


- முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று மேலே கொடுக்கப்பட்டுள்ள செயலிகளை தேடவும்

- பின் இன்ஸ்டால் (Install) பட்டனை க்ளிக் செய்யவும்

- டவுன்லோடு ஆனதும் செட்டிங்ஸ் (Settings) சென்று அக்சஸபிலிட்டி (Accessibility) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி இன்ஸ்டால்டு சர்வீசஸ் (Installed Services) ஆப்ஷனை இரு செயலிகளுக்கும் ஆன் செய்ய வேண்டும்

1 - லைவ் டிரான்ஸ்கிரைப் செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

1 - லைவ் டிரான்ஸ்கிரைப் செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

- செயலியை அதன் ஹோம் ஸ்கிரீன் ஷார்ட்கட் கொண்டு திறக்கவும். பின் விர்ச்சுவல் நேவிகேஷன் பாரில் இருக்கும் டாக்பேக் (Talkback) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

- செயலிக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கி திரையின் கீழ் காணப்படும் கியர் ஐகானஐ க்ளிக் செய்ய வேண்டும்

- இனி மோர் செட்டிங்ஸ் (More Settings) ஆப்ஷனில் ஆடியோ மற்றும் லாங்குவேஜ் (Audio & Language) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

- அடுத்து நீங்கள் விரும்பும் பிரைமரி லாங்குவேஜ் மற்றும் செக்கண்டரி லாங்குவோஜ் (Primary Language & Secondary Language) ஆப்ஷன்களை க்ளிக் செய்யவும்

- பேக் பட்டனை க்ளிக் செய்து டிரான்ஸ்கிரைப் செய்ய துவங்கலாம்

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

சவுண்ட் ஆம்ப்ளிஃபையர் செயலியை இயக்க அக்சஸபிலிட்டி (Accessibility) செட்டிங் மற்றும் செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி செயலிக்கு தேவையான அனுமதி வழங்க வேண்டும்

குறிப்பு:

குறிப்பு:

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் லைவ் டிரான்ஸ்கிரைப் செயலி பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பிக்சல் போன் பயனர்கள் நேரடியாக செயலியை ஆன் செய்து பயன்படுத்த துவங்கலாம்.

Best Mobiles in India

English summary
How to get Google Live Transcribe feature on any Android Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X