ரூ.149 தேவையே இல்ல.. 3 மாத JioHotstar சந்தா.. இலவசமாக பெறுவது எப்படி? Vodafone Idea யூசர்களின் கவனத்திற்கு!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல்லுக்கு (Airtel) அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக இருந்தாலும் கூட, "எங்க ஏரியாவுல வோடபோன் ஐடியா (Vodafone Idea) நெட்வொர்க் தான் நல்லா இருக்கு.. நான் அதைத்தான் யூஸ் பண்றேன்" என்பவரா நீங்கள்?
ஆம் என்றால், உங்களுடைய பொழுதுபோக்கு (ஓடிடி, திரைப்படங்கள், வெப் சீரீஸ், டிவி சீரியல்கள்) தேவைகளை பூர்த்தி செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை (Jio Hotstar Subscription) பெற, நீங்கள் ரூ.149 கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம் வோடாபோன் ஐடியா நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோ ஹாட்ஸ்டாரை சந்தாவை வழங்கும் மூன்று திட்டங்களை கொண்டுள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த 3 திட்டங்களும் டேட்டா வவுச்சர்கள் ஆகும் மற்றும் அனைத்துமே ரூ.200 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் உள்ளன.
அதென்ன திட்டங்கள்? விஐ சேவையின் கீழ் இலவச ஜியோ ஹாட்ஸ்டாரை சந்தாவை வழங்கும் மூன்று திட்டங்கள் - ரூ.101, ரூ.151 மற்றும் ரூ.169 திட்டங்கள் ஆகும். இந்த 3 திட்டங்களுமே வாடிக்கையாளர்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இலவசமாக வழங்குகின்றன. சரி வாருங்கள் இந்த 3 திட்டங்களின் விரிவான நன்மைகளை பற்றி பார்ப்போம்:
வோடபோன் ஐடியா ரூ.101 டேட்டா வவுச்சரின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.101 மதிப்புள்ள வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சர் ஆனது 30 நாட்கள் செல்லுபடியாகும். இதன்கீழ் மொத்தம் 5 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துடன் 1 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.151 டேட்டா வவுச்சரின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.151 மதிப்புள்ள வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சர் ஆனது 90 நாட்கள் செல்லுபடியாகும். இதன்கீழ் மொத்தம் 4 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துடன் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும்.
வோடபோன் ஐடியா ரூ.169 டேட்டா வவுச்சரின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.169 மதிப்புள்ள வோடபோன் ஐடியா டேட்டா வவுச்சர் ஆனது 90 நாட்கள் செல்லுபடியாகும். இதன்கீழ் மொத்தம் 8 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்துடன் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மட்டுமே போதாது என்றால், வோடாபோன் ஐடியா வழங்கும் சில டேட்டா வவுச்சர்கள் ஆனது, மேலும் சில ஓடிடி (OTT) நன்மைகளுடன் வருகின்றன. அவைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டம் ரூ.95 டேட்டா வவுச்சர் பேக் ஆகும்.
ரூ.95 திட்டமானது மொத்தம் 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் மற்றும் 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் இது 28 நாட்களுக்கு சோனிலிவ் மொபைல் சந்தாவுடன் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பின்னர் ரூ.154 டேட்டா வவுச்சர் பேக் உள்ளது. இந்த பேக் 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது மற்றும் 1 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
இந்த திட்டம் - ஜீ5 (ZEE5), சோனி லைவ் (SonyLIV), லயன்ஸ் கேட் பிளே (Lionsgate Play), சன் நெக்ஸ்ட் (SunNXT), பேன் கோட் (Fancode), எம்எக்ஸ் பிளேயர் (MX Player), அத்ராங்கி (Atrangi), கிளிக் (Klikk), சௌபால் (Chaupal), மனோரமா மேக்ஸ் (Manorama Max), நம்ம பிளிக்ஸ் (NammaFlix), அடா டைம்ஸ் (AddaTimes), கான்ச்சா லங்கா (Kanncha Lannka), பிளே பிளிக்ஸ் (PlayFlix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷீமாரூ மீ (Shemaroo Me), யப் டிவி (YuppTV), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் (Pocket Films) ஆகிய ஓடிடி-களை வழங்கும்.


Click it and Unblock the Notifications








