கூகுள் க்ரோம் பிரவுசரின் செயல்திறனை வேகமாக்குவது எப்படி?

|

கூகுள் க்ரோம் செயலியில் சமீபத்திய அப்டேட்கள் அதனை தலைசிறந்த மொபைல் பிரவுசராக மாற்றி வருகிறது. பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டாலும், இதனை பயன்படுத்த கூடுதல் திறன் நிச்சயம் தேவைப்படும்.

கூகுள் க்ரோம் பிரவுசரின் செயல்திறனை வேகமாக்குவது எப்படி?

சில சமயங்களில் பிரவுசரில் டேப்களை திறந்து வைத்திருந்தால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போவதுடன், அதன் வேகமும் குறையத்துவங்கும்.

கூகுள் க்ரோமின் புதிய அப்டேட்

கூகுள் க்ரோமின் புதிய அப்டேட்

கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் கொண்டிருக்கும் வசதியில் பிரவுசரின் செயல்திறனை மேம்படுத்த பிரத்யேக அம்சம் வழங்கப்படுகிறது. இதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மேக் மற்றும் விண்டோஸ் கூகுள் க்ரோம்

மேக் மற்றும் விண்டோஸ் கூகுள் க்ரோம்

இவ்வாறு செய்யும் முன் கூகுள் க்ரோம் பிரவுசரின் மேம்பட்ட பதிப்பினை இன்ஸ்டால் செய்திருக்கின்றீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் ஸ்மார்ட்போனில் சீரான இணைய இணைப்பு இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இந்த அம்சம் மேக் மற்றும் விண்டோஸ் பிரவுசரிலும் வழங்கப்படுகிறது.

<span style=தெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.! " title="தெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.! " loading="lazy" width="100" height="56" />தெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.!

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

- கூகுள் க்ரோம் பிரவுசரை திறந்து மேல்புறம் இடதுபக்கத்தில் இருக்கும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும்.

- மெனு ஆப்ஷனில் செட்டிங்ஸ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- சிஸ்டம் ஆப்ஷனில் ‘Use hardware acceleration when available' எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- இனி இந்த அம்சத்தை ஆன் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்த க்ரோம் பிரவுசரை ரீ-லான்ச் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இவ்வாறு செய்ததும் பிரவுஸ் செய்ய துங்கலாம்.

<span style=பட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.! " title="பட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.! " loading="lazy" width="100" height="56" />பட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.!

புக்மார்க் பயன்படுத்தலாம்

புக்மார்க் பயன்படுத்தலாம்

இவைதவிர க்ரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்க வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன. இதற்கு தேவையற்ற டேப்கள் திறந்திருக்கும் பட்சத்தில் அவற்றை மூடலாம். தேவையான வலைத்தளங்களை புக்மார்க் செய்து கொண்டு அவற்றை பயன்படுத்தலாம்.

<span style=அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.! " title="அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.! " loading="lazy" width="100" height="56" />அதிரடியாக நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10ஆயிரம் குறைப்பு.!

 எக்ஸ்டென்ஷன்கள்

எக்ஸ்டென்ஷன்கள்

பிரவுசரில் பல்வேறு எக்ஸ்டென்ஷன் மற்றும் ஆட்-ஆன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். எக்ஸ்டென்ஷன்களை நீக்குவதும் பிரவுசரின் செயல்திறனை ஊக்குவிக்கும்.

Best Mobiles in India

English summary
How to get faster and better performance in Google Chrome : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X