கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வேண்டுமா? இதோ வாட்ஸ்அப் செயலி இருக்கு.!

|

வாட்ஸ்அப் செயலியை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பயனுள்ள அம்சங்கள் அதிகமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் வழங்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

 இந்தியாவில் அதிக பாதிப்பை

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து

குறிப்பாக தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களில் தொற்று பரவல் பழையபடி மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும், அந்தமாநிலத்தை ஒட்டியுள்ள கோவையில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஃப்ரீ ஃபயர் புனைப்பெயர் 2021: பிடிச்ச பெயர் வைக்கலாம்- ஆண்கள், பெண்களுக்கான புனைப்பெயர் பட்டியல்!ஃப்ரீ ஃபயர் புனைப்பெயர் 2021: பிடிச்ச பெயர் வைக்கலாம்- ஆண்கள், பெண்களுக்கான புனைப்பெயர் பட்டியல்!

 தடுப்பூசி மட்டுமே இப்போது

மேலும் இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மட்டுமே இப்போது தற்காலிக தீர்வாக இருக்கிறது. இது நோயின் தீவிரத்தை குறைக்கிறது. அதேபோல் இனி வரவிருக்கும் நாட்களில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்க வாய்ப்புகள் இருப்பதால். அதனை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஐபிஎல் தொடங்கும்போது இது வரும்: சக்தி வாய்ந்த விவோ எக்ஸ் 70 சீரிஸ்- கீக்பெஞ்ச் பட்டியல் தகவல்!ஐபிஎல் தொடங்கும்போது இது வரும்: சக்தி வாய்ந்த விவோ எக்ஸ் 70 சீரிஸ்- கீக்பெஞ்ச் பட்டியல் தகவல்!

 இரண்டு டோஸ் நீங்கள்

குறிப்பாக கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் நீங்கள் எடுத்திருத்தால், உங்களால் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோல் இந்த சான்றிதழ் இருந்தால் தான் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.

ரூ.100, ரூ.150, ரூ.1000 நாணயங்கள் வெளியானது: தொடர்ந்து பரவும் தகவல்- நேரில் பார்த்தது உண்டா? உண்மை என்ன?ரூ.100, ரூ.150, ரூ.1000 நாணயங்கள் வெளியானது: தொடர்ந்து பரவும் தகவல்- நேரில் பார்த்தது உண்டா? உண்மை என்ன?

மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார்

இதற்குவேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள +91 9013151515-மொபைல் எண்ணை பதிவு செய்து, அதன்பின்பு வாட்ஸ்அப்பில் 'COVID CERTIFICATE' என்று அனுப்பினால் ஓடிபி எண் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும். குறிப்பாக இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார்.

மரக்கைப்பிடியுடன் இரும்பு வாளும் உடனிருந்த மனித எலும்புகளும்- கொந்தகை அகழாய்வு சொல்வது என்ன?மரக்கைப்பிடியுடன் இரும்பு வாளும் உடனிருந்த மனித எலும்புகளும்- கொந்தகை அகழாய்வு சொல்வது என்ன?

 சான்றிதழை கோவின் ஆப்

அதேபோல் தடுப்பூசி சான்றிதழை கோவின் ஆப் அல்லது ஆரோக்ய சேது செயலியில் இருந்து கூட பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக நீங்கள் ஒரு டோஸ் மட்டுமே பெற்றிருந்தால் கூட அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். வாட்ஸ்அப் செயலியில் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிடுறது. அதேபோல் இந்த வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to get Corona Vaccine Certificate on WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X