கெத்தா போன்நம்பர் சொல்லனுமா?- எளிதாக ஏர்டெல் பேன்ஸி நம்பர் வாங்குவதற்கான வழிமுறைகள்!

|

பேன்ஸி நம்பர் மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஏர்டெல் பேன்ஸி விஐபி எண்களை ஆன்லைன் மூலம் பெறுவதற்கானா வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பேன்சி நம்பர் வேண்டுமா

பேன்சி நம்பர் வேண்டுமா

பொதுவாக ஒருவர் தங்களிடம் போன் நம்பர் கேட்கும்போது அதை எப்படி இருந்தாலும் முடிந்தளவு எளிதாக்கி சொல்லுவோம். அதுவே நம்பர் பேன்சி நம்பராக இருந்தால் அதை சொல்லும்போதே ஒரு கெத்தோடு அழகாக சொல்வோம். நம்பர் கேட்பவர் ஆஹா., நம்பர் நல்லா இருக்கே என கூறும்போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி.

ஈர்ப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈர்ப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பேன்ஸி நம்பர் அல்லது விஐபி நம்பர் மீது ஈர்ப்பு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும்போது வாடிக்கையாளர்கள் நம்பரை எளிதாக மனப்பாடும் செய்து கொள்வதற்காக மட்டுமே பேன்ஸி நம்பர் தேவை அதிகமாக இருந்தது. இப்போது வணிகம் மட்டுமின்றி பேன்ஸி நம்பர் என்பது தனிநபர்களிடமும் அதிகரித்துள்ளது.

ஏர்டெல் பேன்ஸி நம்பர் தேவை

ஏர்டெல் பேன்ஸி நம்பர் தேவை

பேன்ஸி நம்பர் தேவை இருக்கும் வாடிக்கையாளர்கள் அதை எவ்வாறு பெறுவது என சந்தேகம் இருக்கலாம். ஏர்டெல் நெட்வொர்க் அனைத்து பகுதிகளிலும் தங்களது சேவையை நன்றாக வழங்கிவரும் நிலையில், ஏர்டெல் நெட்வொர்க் பேன்ஸி எண்ணை எப்படி ஆன்லைன் மூலம் வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஒவ்வொருவர்களுக்கும் வெவ்வேறு தேவை

ஒவ்வொருவர்களுக்கும் வெவ்வேறு தேவை

பேன்ஸி நம்பரை பலரும் பல வகையில் வாங்க முயற்சிப்பார்கள், பூஜ்ஜியம் அதிகமாக வரும் எண், தொடர்ச்சியாக உச்சரிக்கும் படியான எண், தங்களது பிறந்தநாள் தேதி தங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்தாள் தேதி ஆகியவைகள் இடம்பெற வேண்டும் என நினைப்பார்கள். ஒருவருக்கு நம்பரை கூறும்போது முதல்தடவையே அவர்கள் தங்களது நம்பரை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!ஒரே அறிவுரை: உடனடியாக நோக்கியா 5310-க்கு மாறுங்கள்: ஐபிஎஸ் அதிகாரி டுவீட்!

ஆன்லைன் ஏஜென்ட் நிறுவனங்கள்

ஆன்லைன் ஏஜென்ட் நிறுவனங்கள்

பேன்ஸி எண்களை வழங்கும் வழங்குனர்கள் அல்லது பிற ஆன்லைன் ஏஜென்ட் நிறுவனங்கள் உள்ளன. அவர்களின் வலைத்தளத்தை அணுகலாம் அல்லது நேரடியாகவும் அணுகலாம். ஆரம்பக்கட்டமாக தங்கள் விரும்பும் மொபைல் எண்ணை தேர்வு செய்யவேண்டும். அதை குறிப்பிட்ட தொகையை செலுத்தி முன்பதிவு செய்யவேண்டும்.

ஆரம்பத் தொகையை செலுத்த வேண்டும்

ஆரம்பத் தொகையை செலுத்த வேண்டும்

இந்த ஆரம்பத் தொகையை செலுத்தியபின், போர்டிங் கோட் யுபிசி, பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கான விலைப்பட்டியல் வழங்குவார்கள். அதை போர்ட்டுடன் இணைக்க ஏர்டெல் ஷோரூம் செல்ல வேண்டும். அதேபோல் ஏர்டெல் ஷோரூம் சென்றும் ஒரு பேன்ஸி எண்ணை வாங்கலாம்.

ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலுத்தினால் போதும்

ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலுத்தினால் போதும்

ஏணைய ஏஜென்கள் அதிகாரப்பூர்வ செயலி மூலம் பேன்ஸி எண் வழங்கி இயக்குகின்றன. அதேபோல் எண்களை பெறுவதற்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையில் மொத்தமாக பேன்ஸி எண்களை பெற விரும்பினால் அதிகத் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to get Airtel Fancy Numbers: Here the Way to Get Airtel Fancy Vip Number From Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X