பிளாஸ்டிக் ஆதார் அட்டை: ரூ.50 மட்டும் போதும்: விண்ணப்பிப்பது எப்படி? இதோ முழு விவரம்.!

|

தற்போது வங்கி சேவை, வருமான வரி, இன்சூரன்ஸ் சேவையில் இருந்து சிலிண்டர் வாங்குவது வரையில் அனைத்திற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டம் என்றால் ஆதார் அட்டை இல்லாமல் தனிநபரை உறுதி செய்யும் எந்த சேவைகளையும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள

இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அண்மைக்காலமாக கையடக்கமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. குறிப்பாக இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக இது நீர்-எதிர்ப்புத் திறன் கொண்டது. அதேபோல் தண்ணீரால் சேதமடையும் என்ற அச்சமின்றி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

சூழ்நிலை சரியில்ல., பாதுகாப்பு முக்கியம்- கூகுள் மேப் குறிப்பிட்ட சேவை தற்காலிக நிறுத்தம்: எங்கு தெரியுமா?சூழ்நிலை சரியில்ல., பாதுகாப்பு முக்கியம்- கூகுள் மேப் குறிப்பிட்ட சேவை தற்காலிக நிறுத்தம்: எங்கு தெரியுமா?

அட்டை அல்லது PVC கார்டு

பிளாஸ்டிக் அட்டை அல்லது PVC கார்டு அடிப்படையிலான ஆதார் கார்டானது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR கோடுடன் ஃபோட்டோ மற்றும் முகவரி உள்ளிட்ட தேவையான உரிய விவரங்களுடன் பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

கொஞ்சம் ஓரம் போங்க., இது எங்க நேரம்: ஐந்து ஸ்மார்ட்போன்கள்., பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்த டிசிஎல்!கொஞ்சம் ஓரம் போங்க., இது எங்க நேரம்: ஐந்து ஸ்மார்ட்போன்கள்., பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்த டிசிஎல்!

 எப்படி பா

குறிப்பாக ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை எப்படி பாக்கெட்டில் வைத்து எளிதாக செல்கிறோமோ அதேபோல் இந்த பிவிசி கார்டை எளிமையாக எடுத்து கொண்டு போகலாம். குறிப்பாக இந்த புதியவகை அட்டை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

சார்., இதான் நோக்கியா: இப்போ வாங்க நம்மகிட்ட: ரொம்ப கம்மி விலை., இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியீடு!சார்., இதான் நோக்கியா: இப்போ வாங்க நம்மகிட்ட: ரொம்ப கம்மி விலை., இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியீடு!

QR குறியீடு, ஹாலோகிராம்,

பாதுகாப்பான QR குறியீடு, ஹாலோகிராம், மைக்ரோ டெக்ஸ்ட், கோஸ்ட் பிக்ச்சர், வெளியீட்டு தேதி & அச்சு தேதி, குய்லோச் பேட்டர்ன், எம்போஸ்ட் அல்லது பொறிக்கப்பட்ட ஆதார் லோகோ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய வகை ஆதார் அட்டை.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அசத்தலான அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அசத்தலான அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

தாரில் பதிவுசெய்யப்பட்ட

அதேபோல் ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கும் வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு
ஆர்டர் செய்ய முடியும். ஆனால் இந்த அட்டை வழங்குவதை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, ஆதாரில் பதிவுசெய்யப்படாதஎண்ணைக் கொண்டும் ஆர்டர் செய்யும் சேவையை யுஐடிஏஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

எச்சரிக்கையா?- 500 டன் எடை., அப்படியே இந்தியா மீது விழுந்தா என்ன செய்வீங்க- ரஷ்யா கேட்ட பரபரப்பு கேள்வி!எச்சரிக்கையா?- 500 டன் எடை., அப்படியே இந்தியா மீது விழுந்தா என்ன செய்வீங்க- ரஷ்யா கேட்ட பரபரப்பு கேள்வி!

ரைவு அஞ்சலில் ஆதார்

குறிப்பாக இந்த சேவையை https://myaadhaar.uidai.gov.in/genricPVC என்ற இணையதளத்தில் பெறமுடியும். அதுவும்
5 நாட்களில் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வந்து சேரும். மேலும் குடும்பத்தினர் அனைவருக்கும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை
பெற இதில் விண்ணப்பிக்கலாம்.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அசத்தலான அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் அசத்தலான அசுஸ் 8Z ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

இந்த புதிய முறையில் முறைகேடு நட

மேலும் இந்த புதிய முறையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்குத்தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும் எனவும், எனவே இதில் கண்டிப்பாக முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to get Aadhar PVC card using any mobile number: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X