Android மற்றும் iPhone ஹேங் ஆகிவிட்டதா? ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யலாமா? இது நல்லதா? கெட்டதா?
உங்களிடம் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் இருந்தாலும் சரி, அல்லது ஐபோன் (iPhone) சாதனம் இருந்தாலும் சரி, இந்த ட்ரிக்கை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங் (smartphone hang) ஆனாலோ.! அல்லது டிஸ்ப்ளே ஸ்கிரீன் (display screen freeze) அப்படியே நின்று விட்டாலோ.!
இந்த சிக்கலை எப்படி சரி செய்வது?
நீங்கள் உடனே இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும் என்றால், இந்த டிரிக்கை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். முன்னர் வந்த ஸ்மார்ட்போன் டிவைஸ்களில் பேட்டரி (smartphone battery) கழட்டி மாட்டுவது போல் இருந்த காரணத்தினால், பயனர்கள் எளிதாகச் சாதனத்தை ரீஸ்டார்ட் (Restart) செய்ய முடிந்தது. ஆனால், இப்போது உள்ள சாதனங்கள் அனைத்தும் இன்பில்ட் பேட்டரியுடன் (in-built battery) வருவதனால், இத்தகைய செயலை நம்மால் செய்ய முடியாது.

இந்த ட்ரிக்கை கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.!
இப்படி உங்களுடைய சாதனம் திடீரென ஹேங் ஆகி நின்றுவிட்டால், என்ன செய்வதென்று உங்களுக்குத் தெரியவில்லையா? கவலையை விடுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு கற்றுத் தருகிறோம். இத்தகைய சூழ்நிலையில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்கள் ஸ்மார்ட்போனை ஃபோர்ஸ் ஷட் டவுன் (Force Shut down) செய்ய வேண்டும்.
ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்வது நல்லதா? கெட்டதா?
ஃபோர்ஸ் ஷட் டவுன் என்றால் என்னவென்று கேட்பீர்கள்? இது உங்களுடைய போனை ரீஸ்டார்ட் (Phone Restart) செய்வது போன்ற செயல்பாடு தான். இதைச் செய்தால் உங்கள் சாதனம் பழுதடையும் என்று சில கட்டுக்கதைகள் உண்டு. ஆனால், அது வெறும் கட்டுக் கதைகளே.. ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்வதனால், உங்கள் சாதனத்திற்கு எந்த கோளாறும் ஏற்படாது. முக்கியமாக உங்கள் சாதனத்தில் இருக்கும் கோளாறுகளை இது முற்றிலுமாக நிறுத்திவிட்டு, உங்கள் டிவைஸை ரீ-ஸ்டார்ட் (mobile device restart) செய்து தருகிறது.
iPhone இல் ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்வது எப்படி?
அதுதான் இந்த அம்சத்தின் முக்கிய வேலையாகும். சரி, நீங்கள் ஒரு ஐபோன் பயனர் என்றால் உங்கள் சாதனத்தை எப்படி ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
- உங்களுடைய iPhone iOS 16 அல்லது iOS 15 இல் இயங்குகிறது என்றால், உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்ய டவுன் வால்யூம் பட்டனை (Volume button) அழுத்த வேண்டும்.
- பிறகு மீண்டும் ஒருமுறை வால்யூம் டவுன் பட்டனை அழுத்தி லாங் பிரஸ் (Long press) செய்து கொண்டே, பவர் பட்டனையும் (Power button) அழுத்த வேண்டும்.
- சிறிது நேரத்தில் உங்களை ஐபோனின் ஆப்பிள் லோகோ (Apple LOGO) காண்பிக்கப்படும்.
- இப்போது உங்கள் விரல்களை பட்டன்களில் இருந்து எடுத்துவிடலாம்.
- இப்படி செய்தால் உங்கள் சாதனம் உடனே ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்து தானாகவே ரீஸ்டார்ட் செய்துவிடும்.

மற்ற ஐபோன்களில் 'இதை' ட்ரை செய்யுங்கள்.!
- ஐபோன் 7 (iPhone 7) சாதனத்தில் வால்யூம் டவுன் பட்டனை பிரஸ் செய்து, ஸ்லீப் (Sleep) அல்லது வேக் (Wake) பட்டனை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.
- ஆப்பிள் லோகோ வந்தவுடன் பட்டன்களில் இருந்து விரலை எடுக்கவும்.
- உங்கள் சாதனம் ரீஸ்டார்ட் செய்யப்படும்.
- இதேபோல், உங்களிடம் iPhone 6s அல்லது iPhone SE இருந்தால் வால்யூம் டவுன் பட்டனை பிரஸ் செய்து, ஹோம் பட்டனை (Home button) அழுத்த வேண்டும்.
- ஆப்பிள் லோகோ வந்தவுடன் உங்கள் விரல்களை எடுத்தால், ஐபோன் தானாக ரீஸ்டார்ட் செய்யப்படும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் Force Shutdown செய்வது எப்படி?
நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (android smartphone) பயனர் என்றால், உங்களுக்கும் இதே போன்ற கண்ட்ரோல் தான் ஃபோர்ஸ் ஷட் டவுன் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனில் டவுன் வால்யூம் பட்டனை அழுத்தி, அதே நேரத்தில் பவர் பட்டனையும் சேர்த்து ஏழு வினாடிகள் அழுத்த வேண்டும்.
- உங்கள் சாதனம் தானாக ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யப்பட்டு, மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யப்படும்.
- இப்படி செய்வதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.
இந்த முறை பல நேரங்களில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இதைக் கைவசம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால், ஒரு முறை சும்மா ரீ-ஸ்டார்ட் செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications