உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

|

உங்ககிட்ட வைஃபை (WiFi) கனெக்ஷன் இருக்கிறதா? சூப்பரா, வேகமா வேலை செய்யும் உங்க வைஃபை கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகிறதா? அப்போ, கட்டாயம் எதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. பயப்பட வேண்டாம், இந்த மாதிரியான சிறிய - சிறிய சிக்கல்கள் எல்லாம், எல்லோருக்கும் வருவது தான். இதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்துவிட்டால், இவற்றை சரி செய்வது மிகவும் சுலபமான காரியம் தான். உங்கள் சிக்கலை எப்படிச் சரி செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒழுங்கான அல்லது சீரான வைஃபை சிக்னல் கிடைக்கவில்லையா?

ஒழுங்கான அல்லது சீரான வைஃபை சிக்னல் கிடைக்கவில்லையா?

ஒழுங்கான அல்லது சீரான வைஃபை சிக்னல் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலே அது நமக்குத் தொந்தரவை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சினைகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். இந்த சிக்கலுக்கான சரியான காரணத்தை அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் சவாலான காரியம் தான் என்றாலும் கூட, இந்த சிக்கலை எளிதில் சரி செய்யக் கூடிய சில வழிமுறைகள் நம்மிடம் இருக்கிறது.

வைஃபை கனெக்ஷனில் தொந்தரவு இருக்கிறதா? இந்த சிக்கலுக்கான காரணம் என்ன?

வைஃபை கனெக்ஷனில் தொந்தரவு இருக்கிறதா? இந்த சிக்கலுக்கான காரணம் என்ன?

இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால், உங்களுக்கு நேரும் வைஃபை கனெக்ஷன் தொந்தரவுகளிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபடலாம். வைஃபை இணைய இணைப்பு அடிக்கடி குறைவதற்கான காரணங்களையும், வேகமான வைஃபை இணையத்தை மீட்டெடுக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில விரைவான தீர்வுகளையும் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம். காரணங்களைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!இப்படி ஒரு வித்தியாசமான கீபோர்ட் டிவைஸா? அல்ட்ரா காம்பெக்ட் சைசில் தி ஷ்ரிம்ப் Keyboard அறிமுகம்.!

இன்கரெக்ட் வைஃபை நெட்வொர்க்

இன்கரெக்ட் வைஃபை நெட்வொர்க்

முதல்காரணம், எப்போதாவது ஒரே பெயரில் அருகிலுள்ள இரண்டு இடங்களில் பாதுகாப்பற்ற Wi-Fi நெட்வொர்க் இயங்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சாதனம் தவறான நெட்வொர்க்குடன் தற்செயலாக இணைக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகவுள்ளது. இதன் காரணமாக, உங்களுடைய இணைப்பில் திடீர் சிக்கலை நீங்கள் சந்திக்கலாம். கூடுதலாக, மற்ற நெட்வொர்க்கில் பேண்ட்வித் சிக்கல் ஏற்படும் போதெல்லாம், இந்த சிக்கல் அடிக்கடி உருவாக வாய்ப்புகள் அதிகம்.

சேதமடைந்த கேபிள்கள்

சேதமடைந்த கேபிள்கள்

மோசமான வயர் கனெக்ஷன் அல்லது லூசான கேபிள் கனெக்ஷன்களால் கூட இதுபோன்ற திடீர் நெட்வொர்க் சிக்கலை நீங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகையால், உடனே உங்களுடைய சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள கேபிள்களை செக் செய்யுங்கள். கேபிள்கள் எந்த வகையிலாவது சேதமடைந்திருந்தால், உங்கள் வைஃபை டிவைஸ் அதன் சிறந்த நிலையில் செயல்படாது. இது திடீர் கனெக்ஷன் கட் அவுட்டிற்கு வழிவகுக்கும்.

ஓவர்லோடட் நெட்வொர்க்

ஓவர்லோடட் நெட்வொர்க்

நெட்வொர்க்குகளுக்கு மத்தியில் ஏதேனும் குறுக்கீடுகள் இருந்தால், அதன் விளைவாக இதுபோன்ற சிக்கல்களை நீங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரே நெட்வொர்க்குடன் ஒரே நேரத்தில் பல சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் அடிக்கடி உங்கள் கனெக்ஷன் கட் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகப் பல சாதனங்கள் ஒரே நேரத்தில் வைஃபை கனெக்ஷனை ஸ்ட்ரீமிங் செய்யும் போது, இந்தப் பிரச்சனை உருவாகிறது.

உங்க போனில் RC புக்கை டவுன்லோட் செய்வது எப்படி? கட்டாயம் 'இதை' போனில் வச்சுக்கோங்க!உங்க போனில் RC புக்கை டவுன்லோட் செய்வது எப்படி? கட்டாயம் 'இதை' போனில் வச்சுக்கோங்க!

இந்த சிக்கல்களுக்கான தீர்வு என்ன? இதை எப்படி சரி செய்வது?

இந்த சிக்கல்களுக்கான தீர்வு என்ன? இதை எப்படி சரி செய்வது?

சரி, இப்போது இந்த சிக்கல்களுக்கான தீர்வு என்ன என்பதையும், இதை எப்படி சுலபமாகச் சரி செய்வது என்பதையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். முதலில் உங்களிடையே டிவைஸ் வயர்களை செக் செய்யுங்கள். பழைய அல்லது பழுதடைந்த கேபிள்கள் அல்லது லூசான இணைப்புகள் மற்றும் கோக்ஸ் லைன்களில் ஏதேனும் வளைவுகள் அல்லது சேதங்கள் காணப்பட்டால் அவற்றை உடனே மாற்றிவிடுங்கள். ஒரு வயர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, சிக்கல் உருவாகும் என்பதை மறக்காதீர்கள்.

கடைசியாக உங்கள் வைஃபை ரூட்டரை எப்போது OFF செய்தீர்கள்?

கடைசியாக உங்கள் வைஃபை ரூட்டரை எப்போது OFF செய்தீர்கள்?

கடைசியாக உங்கள் வைஃபை ரூட்டர் அல்லது மோடமை எப்போது OFF செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?ஓய்வில்லாமல் நீண்ட காலத்திற்குச் செயல்படும் போது லேக், மெமரி லீக்ஸ் போன்ற பிற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு உங்களுடைய டிவைஸை நீங்கள் சரியாக பவர் சைக்கிள் செய்வது கட்டாயம். பவர் சைக்கிள் என்பது உங்களுடைய ரூட்டர் அல்லது மோடமை குறிப்பிட்ட நேரம் ஓய்வு பெறச் செய்வதாகும். இதைச் சரியாகச் செய்வதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

உங்கள் ரூட்டர் அல்லது மோடமை சரியாக பவர் சைக்கிள் செய்வது எப்படி?

உங்கள் ரூட்டர் அல்லது மோடமை சரியாக பவர் சைக்கிள் செய்வது எப்படி?

உங்கள் ரூட்டர் அல்லது மோடம் உடன் இணைக்கப்பட்டிருக்கும் அணைத்து டிவைஸ்களையும் டிஸ்கனெக்ட் செய்யுங்கள். பிறகு, உங்களுடைய ரூட்டர் அல்லது மோடமை குறைந்தது 30 வினாடிகளுக்கு OFF செய்யுங்கள். ஒரு சிறிய இடைவெளி வழங்கி, ON செய்யவும். பிறகு மீண்டும் உங்கள் டிவைஸ்களை அதனுடன் இணைத்து சோதனை செய்து பார்க்கவும். இப்படிச் செய்யும் போதே பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிடும்.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

இன்னும் சிக்கல் தீர்வாகவில்லையா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!

இன்னும் சிக்கல் தீர்வாகவில்லையா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!

இப்படி, அனைத்து உபகரணங்களுக்கும் சாதனங்களுக்கும் இடைவேளை கொடுப்பது பல்வேறு விதமான சிக்கல்களைத் தீர்க்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் இயங்கிக்கொண்டிருக்கும் சாதனங்களில் தான் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த பரிந்துரைகள் உங்களுக்கு உதவவில்லை, அல்லது பயனளிக்கவில்லை என்றால், உங்கள் பிரச்சனைகளைத் திறம்படத் தீர்க்கக்கூடிய ஒரு புகழ்பெற்ற ISP ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Fix WiFi has no internet Connection Access Error Easily

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X