Smartphone காணாமல் போனால் என்ன செய்வது?- டிராக் செய்து கண்டுபிடிக்க., சிம்பிள் டிப்ஸ்!

|

ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. ஒருவரின் அங்கமாக இருக்கும் ஸ்மார்ட்போனில் வங்கிக் கணக்கு விவரம், டிஜிட்டல் பரிவர்த்தனை பாஸ்வேர்ட், முக்கிய புகைப்படங்கள் முதல் பல முக்கிய ஆவணங்களும் ஸ்மார்ட்போனில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன் காணாமல் போனால் என்ன செய்வது என குழப்பம் வரலாம். குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்.

போர்ட்டலை எவ்வாறு பயன்படுத்துவது

போர்ட்டலை எவ்வாறு பயன்படுத்துவது

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகும் பட்சத்தில் அரசுக்கு சொந்தமான CEIR போர்ட்டலை அணுகலாம்.

இதன்மூலம் தொலைந்து போன ஸ்மார்ட்போனை பிறர் அணுகாத வகையில் பயனர்கள் தடுக்க முடியும். இந்த போர்ட்டலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

மத்திய உபகரண அடையாள பதிவேட்டு எண்

மத்திய உபகரண அடையாள பதிவேட்டு எண்

திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களைக் கண்காணிக்க பயனர்கள் CEIR தளத்தை அணுகலாம். CEIR என்பது மத்திய உபகரண அடையாள பதிவேட்டு எண்ணைக் குறிக்கிறது. இந்த தளமானது போலி மொபைல் போன் சந்தையை தடுக்க DoT மூலம் உருவாக்கப்பட்டது.

ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் என்ன செய்வது?

ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் என்ன செய்வது?

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகிவிட்டது, திருடப்பட்டு விட்டது போன்ற பல்வேறு தகவலை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது பிறக்கு தான் நடக்கிறது, நமக்கு நடக்காது என உறுதியாக கூறிவிட முடியாது.

அப்படி நமக்கு நடக்கும் பட்சத்தில் என்ன செய்வது? அல்லது பிறருக்கு நடந்து விட்டது என நம்மிடம் கூறும் பட்சத்தில் நாம் என்ன அறிவுரை கொடுப்பது? என்பதை அறிந்துக் கொள்வது மிக அவசியம்.

ind My Phone போன்ற ஆப்ஸ்கள்

ind My Phone போன்ற ஆப்ஸ்கள்

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகும் பட்சத்தில் அந்த பகுதி காவல்நிலையத்துக்கு சென்று FIR பதிவு செய்ய வேண்டும் என்பது மிகக் கட்டாயம்.

அதேபோல் சிலர் Find My Phone போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி தங்களது மொபைல் போன் அணுகல் குறித்த தகவலை பெறுகிறார்கள். ஆனால் இதோடு உங்கள் பணி நிறைவடைந்துவிடுவது இல்லை.

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகும் பட்சத்தில், CEIR எனப்படும் இந்திய அரசாங்கத்தின் போர்ட்டலில் அதை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட போர்ட்டல்

தொலைத்தொடர்பு துறையால் உருவாக்கப்பட்ட போர்ட்டல்

CEIR என்பது மத்திய உபகரண அடையாள பதிவேட்டைக் குறிக்கும் தளமாகும். போலி மொபைல் போன் சந்தையை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு துறையால் இது உருவாக்கப்பட்டது.

உங்கள் தரவு அல்லது உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைந்து போகும் பட்சத்தில் அது பெரிய சிக்கலை ஏற்படுத்துக்கூடும்.

எனவே நீங்கள் CEIR இணையதளம் மூலம் புகாரை பதிவு செய்து உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடத்தை கண்காணிக்கலாம்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் தொலைத்த ஸ்மார்ட்போனில் வேறு சிம்கார்ட் பயன்படுத்தினாலும் அதன் அணுகலை தடுக்க இந்த போர்ட்டல் உங்களை அனுமதிக்கிறது.

CEIR தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

CEIR தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

CEIR இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

CEIR இணையதளத்துக்கு சென்று ப்ளாக் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

இந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், உங்கள் மொபைல் எண், IMEI எண், மாடல் உள்ளிட்ட பிற தகவல்கள் கேட்கப்படும். இதை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், FIR பதிவு செய்யும் போது உங்களுக்கு புகார் பதிவு எண் வழங்கப்படும், அதை இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மொபைலை கண்டுபிடித்தவுடன் என்ன செய்வது?

மொபைலை கண்டுபிடித்தவுடன் என்ன செய்வது?

இதன்மூலம் மொபைலை கண்டறியும் பட்சத்தில் unblock option என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதை கிளிக் செய்தவுடன் உங்களிடம் சில தகவல் கேட்கப்படும் இதை பதிவிட்டு, உங்கள் மொபைலை அன்ப்ளாக் செய்யலாம்.

ஒரு போன் திருட்டு போனா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு போன் திருட்டு போனா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

தொலைந்து போன ஸ்மார்ட்போனை இந்த முறைகளின்படி கண்டறியலாம்.

செகண்ட் ஹேண்ட் மொபைல் வாங்கியிருந்தால், அது திருட்டுப் போனா என்பதை எப்படி கண்டறிவது என்ற கேள்வி வரலாம்.

14422 என்ற எண்ணிற்கு KYM என டைப் செய்து அதனுடன் IMEI எண்ணை பதிவிட வேண்டும்.

இப்படி அனுப்பப்படும் பட்சத்தில் இந்த மொபைல் குறித்த தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த ஐஎம்இஐ எண் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றால் இதுகுறித்து தகவலும் உங்களுக்கு அனுப்பப்படும்.

தடுப்புப்பட்டியலில் அந்த ஐஎம்இஐ எண் இருக்கும் பட்சத்தில், அந்த மொபைலை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்.

KYM செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IMEI எண் பார்ப்பது எப்படி?

IMEI எண் பார்ப்பது எப்படி?

IMEI எண்ணை ஒரு மொபைலில் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம், உங்கள் மொபைலில் *#06# என்ற எண்ணை டயல் பேட்டில் டைப் செய்தால் உங்கள் ஐஎம்இஐ எண் காட்டப்படும். இந்த ஐஎம்இஐ எண்ணை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக அவசியம். காரணம் இந்த அனைத்து பயன்பாட்டுக்கும் ஐஎம்இஐ எண் என்பது மிக பிரதானம்.

Best Mobiles in India

English summary
How to find your Lost Smartphone? How to use CEIR app?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X