ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

|

பேஸ்புக்கில் விரும்பிய வீடியோவை கண்டுபிடிப்பது ஒரு சவாலான விஷயமாக அதன் பயனாளர்களுக்கு உள்ளது. ஏனெனில் அதில் உள்ள வீடியோக்கள் ஒழுங்கமைக்கப்படவில்லை. எனவே வீடியோ தேடலின்போது ஒரு குழப்பம் ஏற்படுவதை கிட்டத்தட்ட அனைவரும் உணர்ந்து இருக்கலாம்.

ஃபேஸ்புக்கில் விருப்பமான வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் பலவிதமான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. லைவ் வீடியோக்கள், டேக் வீடியோக்கள், , ஷேர் மற்றும் அப்லோட் வீடியோக்கள், பப்ளிக் வீடியோக்கள் என பலவிதமான வீடியோக்கள் உள்ளது. நமக்கு தேவையான வீடியோவை தேர்வு செய்வதற்கான ஆப்சன்களை ஃபேஸ்புக் வழங்கவில்லை. மேலும் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு வீடியோவும் வெவ்வேறு வகையான வீடியோக்களாகவும் இருக்கும். இவற்றை ஒழுங்குபடுத்தி நமக்கு தேவையான வீடியோக்களை மட்டும் பார்ப்பது எப்படி?

லைவ் வீடியோக்கள்:

லைவ் வீடியோக்கள்:

ஃபேஸ்புக் இதற்கு முன்னர் லைவ் மேப் வசதியை கொடுத்தது என்பது தெரிந்ததே. எனவே இதன்மூலம் அனைத்து குரூப்களும் ஒன்றிணைந்துள்ளது. இந்த நிலையில் நீங்கள் லைவ் வீடியோக்களை மட்டும் பார்க்க விரும்பினால் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள சியர்ச் ஆப்சனில் லைவ் என்ற ஹேஷ்டேக்கை போட்டு தேடினால் உங்களுக்கு லைவ் வீடியோக்கள் மட்டும் கிடைக்கும். இது கொஞ்சம் சிரமமாக இருந்தால் யாருடைய வீடியோவை பார்க்க விரும்புகிறீர்களோ அவர்களுடைய பக்கத்திற்கு சென்று வீடியோ லைப்ரரிக்கு சென்றால் உங்களுக்கு லைவ் வீடியோ கிடைக்கும்

தனிப்பட்ட வீடியோக்கள்:

தனிப்பட்ட வீடியோக்கள்:

நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்கள் அனைத்து உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டோஸ் என்ற செக்சனில் இருக்கும். பேஸ்புக்கில் உங்கள் அதிக நேரம் செலவு செய்தால் மட்டும் வீடியோ பிரிவில் உள்ள அனைத்தும் வீடியோக்களையும் காணலாம். இதனால் உங்கள் பொன்னான நேரம் விரயமாகும். எனவே அதற்கு பதிலாக, நீங்கள் என்ன செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் அப்லோட் செய்த அனைத்து வீடியோக்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யுங்கள். அதன்பினர் ஃபேஸ்புக் செட்டிங் சென்று யுவர் ஃபேஸ்புக் இன்பர்மேஷன் என்ற ஆப்சனுக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் டவுன்லோடு செய்த வீடியோக்கள் இருக்கும்.

பாதுகாக்கப்பட்ட வீடியோக்கள்:

பாதுகாக்கப்பட்ட வீடியோக்கள்:

ஒரு வீடியோவை நீங்கள் தேர்வு செய்து அதனை பின்னர் பார்த்து கொள்ளலாம் என பாதுகாத்து வைக்கப்பட்டும் வீடியோக்கள் தான் இந்த வீடியோக்கள். இவை டவுண்லோடு செய்யப்படாமல், உங்கள் புக்மார்க்கில் நீங்கள் தேவையான நேரத்தில் பார்க்கும் வகையில் இருக்கும். இந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் சேவ்டு வீடியோ பக்கம் சென்றால் போதும். மேலும் ஃபேஸ்புக்கில் லாகின் செய்து எக்ஸ்புளோர் மெனுவில் சென்றாலும் பாதுகாக்கப்பட்ட வீடியோக்களை காணலாம்

பழைய புரொபைல் வீடியோக்கள்:

பழைய புரொபைல் வீடியோக்கள்:

இரண்டு வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் செய்த ஒரு அப்டேட்டில் ஒரு சின்ன வீடியோ உங்கள் புரொபைலில் வைக்கும் வசதியை தந்தது. இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் போட்டோ செக்சன் சென்று வீடியோ என்ற ஆப்சனை ஓப்பன் செய்தால் போதும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் ஸ்க்ரோல் செய்துதான் தேட வேண்டும்., இதற்கு வேறு ஆப்சன் இல்லை

பப்ளிக் வீடியோக்களை தேடுவது எப்படி?

பப்ளிக் வீடியோக்களை தேடுவது எப்படி?

இதுமாதிரியான வீடியோக்களை தேட வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட நபரின் அல்லது குரூப் பெயர் தெரிந்திருந்தால் அந்த நபரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கோ அல்லது அந்த குரூப்பிற்கோ சென்றோ தேடலாம். நீங்கள் தேடும் வீடியோக்கள் சமீபத்தில் அப்லோடு செய்யப்பட்டிருந்தால் ஒருசில நிமிடங்கல் ஸ்க்ரோல் செய்தாலே அந்த வீடியோ கிடைத்துவிடும். இல்லையெனில் போட்டோ செக்சன் சென்று சியர்ச் ஆப்சனில் குறிப்பிட்ட வீடியோவை தேடி கொள்ளலாம்

டேக்டு வீடியோக்கள்:

டேக்டு வீடியோக்கள்:

டேக் செய்த வீடியோக்களை தேடுவது என்பது மிக எளிதான ஒரு விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இது நீங்கள் ஒருசில வீடியோக்களை மட்டுமே டேக் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம். அதிக வீடியோக்களை டேக் செய்திருந்தால் கொஞ்சம் கடினம். இதற்கு ஒரே வழி சியர்ச் பார் சென்று தேடுவதுதான். சியர்ச் பாக்ஸில் டேக் செய்த வீடியோக்கள் என்று பதிவு செய்து தேடினால் உங்களுக்கு தேவையான வீடியோக்கள் எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to find videos on Facebook: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X