ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

|

சொந்த வேலைக்காகவோ அல்லது அலுவலக வேலைக்காகவோ அடிக்கடி வெளியூர் செல்பவரா நீங்கள்?

நீங்கள் தங்கும் ஓட்டல் / லாட்ஜ் ரூம்களில், ஏதேனும் ரகசிய கேமராக்கள் (Hidden Camera) ஒளித்து வைக்கப்பட்டு உள்ளதா என்பதை, உங்கள் ஸ்மார்ட்போன் வழியாகவே கண்டுபிடிக்கலாம் என்று கூறினால் நம்புவீர்களா?

உடனே டார்ச் அடித்து பார்க்க வேண்டுமா என்று கேட்டு விடாதீர்கள்!

உடனே டார்ச் அடித்து பார்க்க வேண்டுமா என்று கேட்டு விடாதீர்கள்!

ஓட்டல் ரூம்களில் உள்ள ரகசிய கேமராக்களை, உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடித்து விட முடியும் என்று கூறியதும்.. "எப்படி? ரூம் முழுக்க டார்ச் அடித்து பார்க்க வேண்டுமா?" என்று கேட்டு விடாதீர்கள்!

நீங்கள் அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ்வரும் 10 ஆப்களில் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களில்) ஏதேனும் ஒன்றை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவ்வளவு தான்; பாதி வேலை முடிந்தது!

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

மறைந்திருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப்கள்!

மறைந்திருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப்கள்!

ஆம்! ஓட்டல் அறைகளில் மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க சில ஆப்கள் உங்களுக்கு உதவும்!

எனவே நீங்கள் தங்குவது ஒரு பட்ஜெட் ஓட்டலாக இருந்தாலும் சரி அல்லது ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும் சரி, உங்களுக்கான ஒதுக்கப்பட்ட / வழங்கப்பட்ட அறையை பரிசோதிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக ஹிட்டன் கேமரா (Hidden Camera) ஏதேனும் உள்ளதா? என்று பரிசோதிக்க வேண்டும்!

ஹிட்டன் கேமராக்களை நீங்கள் தேடும் போது, உங்களுக்கு உதவக்கூடிய 10 ஆப்களின் பெயர்களும், அது என்னென்ன செய்யும் என்கிற விளக்கங்களும் இதோ:

01. ஹிட்டன் டிவைஸ் டிடெக்டர் கேமரா (ஆண்ட்ராய்டு)

01. ஹிட்டன் டிவைஸ் டிடெக்டர் கேமரா (ஆண்ட்ராய்டு)

ஒரு அறையில் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பை கேம் அல்லது ஸ்பை மைக்கை கண்டறிய உதவும் இந்த Hidden device detector camera ஆப்பை - யார் வேண்டுமானாலும் - மிகவும் எளிமையாக பயன்படுத்தலாம்.

இந்த கேம் ஃபைண்டர் அல்லது ஸ்பை டிடெக்டர் ஆப் ஆனது எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் கதிர்வீச்சின் தீவிரத்தை (radiation intensity) கண்டறிய மேக்னட்டிக் சென்சாரை (magnetic sensor) பயன்படுத்துகிறது.

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

02. ஹிட்டன் கேமரா டிடெக்டர்

02. ஹிட்டன் கேமரா டிடெக்டர்

இந்த Hidden camera detector ஆப் ஆனது சந்தேகத்திற்குரிய பொருளின் அருகே ஸ்மார்ட்போனின் கேமராவை நகர்த்த வேண்டும். அங்கே ஏதேனும் ஸ்பை கேமரா இருந்தால், இந்த ஆப் அதை வெளிப்படுத்தும்.

இந்த ஆப்பில், ஸ்பீக்கர்கள் மற்றும் கேமராக்களின் மேக்னெட்டிக் செயல்பாட்டை (magnetic activity) கண்டறியும் மேக்னட்டோமீட்டர் (magnetometer) உள்ளது. மேலும் அகச்சிவப்பு கேமராக்களை (infrared camera) கண்டறியும் கதிர்வீச்சு மீட்டரும் (radiation meter) இதில் உள்ளது.

03. ஹிட்டன் டிடெக்டர் கேமரா (ஆண்ட்ராய்டு)

03. ஹிட்டன் டிடெக்டர் கேமரா (ஆண்ட்ராய்டு)

ஆண்ட்ராய்டில் மட்டுமே அணுக கிடைக்கும் Hidden camera detector என்கிற இந்த செயலியும் கூட ஸ்பை கேமராவையும் கண்டறிய உதவும் ஒரு கில்லாடி ஆகும்.

இது ஒரு மேக்னெட்டோ மீட்டர் உடன் வருகிறது, இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் மேக்னெட்டிக் சென்சாரை பயன்படுத்தி ரகசிய கேமராவின் மேக்னெட்டிக் செயல்பாடுகளையும் கண்டறியும்.

இந்த ஆப்பில் அகச்சிவப்பு கேமரா டிடெக்டரும் (infrared camera detector) உள்ளது, இது அகச்சிவப்பு கேமராக்களை கண்டறியவும் உதவும்.

"இதை" உடனே டெலிட் செஞ்சிட்டா உங்க Phone-க்கு நல்லது.. இல்லனா? வார்னிங் கொடுக்கும் Google!

04. ஹிட்டன் ஸ்பை கேமரா டிடெக்டர் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

04. ஹிட்டன் ஸ்பை கேமரா டிடெக்டர் (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்)

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலும் கிடைக்கும் இந்த ஆப், ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பை கேமராவை கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பில் ஆல் இன் ஒன் நெட்வொர்க் ஸ்கேனர் உள்ளது, இது மறைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர்களை எளிதாகக் கண்டறிகிறது.

05. ஹிட்டன் கேமரா டிடெக்டர் ப்ரோ

05. ஹிட்டன் கேமரா டிடெக்டர் ப்ரோ

Hidden Camera Detector Pro என்கிற இந்த ஆப் ஆனது ஒரு அறையின் சுற்றுப்புறங்களில் உள்ள உளவு கேமராக்கள் அல்லது மறைக்கப்பட்ட கேமராக்களை காட்டிக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் ஆனது மறைத்து வைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோனையும் கண்டறியும். மேலும் இதனால் அகச்சிவப்பு கேமராவையும் கண்டறிய முடியும்.

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

06. நோ ஹிட்டன் - ஸ்பை கேமரா ஃபைண்டர் (ஆண்ட்ராய்டு)

06. நோ ஹிட்டன் - ஸ்பை கேமரா ஃபைண்டர் (ஆண்ட்ராய்டு)

No hidden - spy camera finder என்கிற இந்த ஆப் ஆனது அனைத்து வகையான ரகசிய கேமராக்கள், மறைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் மறைக்கப்பட்ட டிவைஸ்களை கண்டறிவதாக கூறுகிறது.

மேற்கண்ட ஆப்களை போலவே, இதனாலும் கூட அகச்சிவப்பு கேமராவை கண்டறிய முடியும் மற்றும் இது சில அட்வான்ஸ்டு ஸ்கேனிங் மோட்களுடன் (advanced scanning modes) வருகிறது.

07. ஹிட்டன் ஸ்பை கேமரா டிடெக்டர் (ஆண்ட்ராய்டு)

07. ஹிட்டன் ஸ்பை கேமரா டிடெக்டர் (ஆண்ட்ராய்டு)

Hidden spy camera detector என்பது ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார் மூலம் உளவு கேமராக்கள் மற்றும் மறைக்கப்பட்ட பக்ஸ்-ஐ (hidden bugs) கண்டறியும் ஒரு ஆண்ட்ராய்டு ஆப் ஆகும்.

இது மறைக்கப்பட்ட கேமராக்களை மட்டுமின்றி, அகச்சிவப்பு கேமராவையும் கண்டறியும்.

Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே Truecaller-ல் இதை மட்டும் செஞ்சிட்டா போதும்! உங்களுக்கு ஒரே "VIP அந்தஸ்து" தான்!

08. கேமரா டிடெக்டர்: ஃபைண்ட் ஸ்பை கேம் (ஆப்பிள் ஐஓஎஸ்)

08. கேமரா டிடெக்டர்: ஃபைண்ட் ஸ்பை கேம் (ஆப்பிள் ஐஓஎஸ்)

இது சந்தேகத்திற்குரிய டிவைஸ்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அதில் ஒளிந்துள்ள ரகசிய கேமராவை கண்டறிய உதவும் ஒரு ஆப் ஆகும். இது ஒரு அறையில் உள்ள ப்ளூடூத் டிவைஸையும் கூட கண்டறியும்.

மேலும் இந்த Camera Detector: Find Spy Cam ஆப் ஆனது விரிவான anti-sneak shooting guide-ஐயும் உங்களுக்கு வழங்கும்.

09. ஹிட்டன் பின்ஹோல் கேமரா டிடெக்டர் (ஆப்பிள் ஐஓஎஸ்)

09. ஹிட்டன் பின்ஹோல் கேமரா டிடெக்டர் (ஆப்பிள் ஐஓஎஸ்)

ஆப்பிள் ஸ்டோரில் அணுக கிடைக்கும் இந்த Hidden Pinhole Camera Detector ஆப் ஆனது ஒரே கிளிக்கில் ரகசிய கேமராக்களை கண்டறிய உதவும் ஒரு ஆப் ஆகும்.

இது ஆன்டி ஸ்னீக் ஷூட்டிங் உத்தியுடன் (anti-sneak shooting strategy) வருகிறது, இது சந்தேகத்திற்கிடமான இடங்களில் உங்களை எச்சரிக்கும்!

10. ஹிட்டன் கேமரா & டிவைஸ் ஃபைண்டர் (ஆப்பிள் ஐஓஎஸ்)

10. ஹிட்டன் கேமரா & டிவைஸ் ஃபைண்டர் (ஆப்பிள் ஐஓஎஸ்)

iOS இல் அணுக கிடைக்கும் இந்த ஆப்பும் கூட, சந்தேகத்திற்கிடமான டிவைஸ்களை கண்டறிவதாக உறுதியளிக்கிறது. இதில் வைஃபை மற்றும் ப்ளூடூத் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

ஒரு அறையில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்களை கண்டறிய உதவும் இந்த 10 ஆப்களில், உங்களுக்கு விருப்பமான மற்றும் வசதியான ஒரு ஆப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொள்ளவும்; எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்!

Photo Courtesy: Google Play Store / Wikipedia

Best Mobiles in India

English summary
How to find secret hidden camera fixed in the lodge hotel room using your smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X