வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?

|

இன்றைய காலகட்டத்தில் வாகனங்களின் புலக்கம் அதிகமாகிவிட்டது. சாலைகளில் எங்கு பார்த்தாலும் எறும்புகளை போல் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு ஊர்ந்து செல்வதை நம்மால் பார்க்க முடியும். இதனால் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகமாகிக்கொண்டு போகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. அப்படி அசம்பாவிதங்கள் நடக்கும்போது பாதிக்கப்பட்டவரை பற்றிய தகவல் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்குமே இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றவரை பற்றிய விபரங்களை நாம் தெரிந்துகொள்ள, அவர்களுடைய வாகன எண் மட்டும் நமக்கு தெரிந்தால் போதும். ஆனால், இதுவரை நம்மில் பலர், இதுபோன்ற வாகன எண்ணை எடுத்துக்கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் (rto office) சென்று கொடுத்து தான் விபரங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இந்த தகவல்களை நாம் ஆன்லைன் மூலமாகவே உரிமையாளரின் விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

உரிமையாளரை கண்டுபிடிக்க வழிகள்

உரிமையாளரை கண்டுபிடிக்க வழிகள்

இதில் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வாடகை கார்கள், லாரி மற்றும் பஸ் ஆகியவை அனைத்தும் அடக்கம். அசம்பாவிதங்களுக்காக மட்டும் இல்லாமல் தொலைந்த வாகனங்களின் உரிமையாளரை கண்டுபிடிக்க அல்லது வாகனங்களை வாங்க மற்றும் விற்க அந்த வாகனத்தின் விபரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் இந்த ஆன்லைன் முறை உதவியாக இருக்கும் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இந்த தகவலை அறிய பல வழிகள் இருக்கிறது என்றாலும் கூட, சில சிறந்த முறைகளை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.

ஆதார் கார்டு போட்டோவை எப்படி மாற்றுவது? இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? முழு விபரம்.!ஆதார் கார்டு போட்டோவை எப்படி மாற்றுவது? இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? முழு விபரம்.!

பரிவாகன் பயன்படுத்தி வாகன உரிமையாளர் விபரங்களை எப்படி தெரிந்துகொள்வது?

பரிவாகன் பயன்படுத்தி வாகன உரிமையாளர் விபரங்களை எப்படி தெரிந்துகொள்வது?

முதலில்https://vahan.parivahan.gov.in/nrservices/faces/user/citizen/citizenlogin.xhtml என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

புது கணக்கை உருவாக்க உங்கள் மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் otp எண்ணை உள்ளிட வேண்டும்.

உங்கள் பரிவாகன் கணக்கில் உள்நுழைய உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வோர்ட்டை உள்ளிட்ட வேண்டும்.உங்களுக்கு தேவைப்படும் வாகன எண்ணை உள்ளீடு செய்து திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சா கோடு தகவலை டைப் செய்தவுடன் கிடைத்துவிடும்.

வாகனத்தின் எரிபொருள் வகை, நிலை, உரிமையாளரின் பெயர், செல்லுபடியாகும் காலம், காப்பீட்டுத் தேதி மற்றும் வாகனத்தின் பதிவு தேதி போன்ற அனைத்து RC விவரங்களையும் இங்கே நீங்கள் பார்க்க முடியும்.

ட்ரான்ஸ்போர்ட் புக் இணையதளத்தைப் பயன்படுத்தி விபரங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?

ட்ரான்ஸ்போர்ட் புக் இணையதளத்தைப் பயன்படுத்தி விபரங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?

வாகன் பரிவாகன் தளத்திற்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். ஆனால், இந்த இணையதளத்தில் பரிவாகன் போல் தனி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 • https://transportbook.in/features/vahan-info என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
 • வாகன எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
 • வாகன உரிமையாளர் மற்றும் வாகனத்தின் விபரங்கள் காட்டப்படும்.
 • Acko App மூலம் வாகன உரிமையாளர் விபரங்களை எப்படி தெரிந்துக்கொள்வது?

  Acko App மூலம் வாகன உரிமையாளர் விபரங்களை எப்படி தெரிந்துக்கொள்வது?

  • உங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ios போனில் Acko App பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால், உங்களுக்கு அனுப்படும் otp ஐ உள்ளிடவும்.
  • Do more with Acko என்ற தலைப்பின் கீழ் RTO info என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதில் வாகன எண்ணை உள்ளீடு செய்தால், வாகனம் மற்றும் வாகன உரிமையாளரின் விபரங்கள் காட்டப்படும்.
  • SMS வாயிலாக வாகன உரிமையாளர் விபரங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?

   SMS வாயிலாக வாகன உரிமையாளர் விபரங்களை தெரிந்துக்கொள்வது எப்படி?

   உங்களிடம் இணைய இணைப்பு இல்லையெனில் அல்லது மேலே உள்ள முறைகள் வேலை செய்யவில்லை என்றால், இந்த SMS முறையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

   SMS அனுப்பும் ஆப்பில் VAHAN என்று டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வாகன எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.

   உதாரணமாக VAHAN TN01AB1234 என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.சில நிமிடங்களில், வாகன உரிமையாளரின் பெயர், RTO விவரங்கள், மாடல், RC/FC காலாவதி தேதி, இன்சூரன்ஸ் விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தியை திரும்பப் பெறுவீர்கள்.

   டிஜிட் வெப்சைட் பயன்படுத்தி வாகன உரிமையாளர் விபரங்களை தெரிந்து கொள்ள:

   டிஜிட் வெப்சைட் பயன்படுத்தி வாகன உரிமையாளர் விபரங்களை தெரிந்து கொள்ள:

   https://www.godigit.com/traffic-rules/how-to-find-vehicle-owner-details-by-registration-number என்ற இணையதள முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களான வாகன வகை (வணிகம் / தனியார்/ இரு சக்கரம்/ நான்கு சக்கரம்), உரிமையாளர் பெயர் (சரியாக தெரியவில்லை என்றால் ஏதாவது ஒரு பெயரை பதிவு செய்யலாம்), வாகன பதிவு எண் மற்றும் உங்கள் கைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

   உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் otp ஐ கேப்ட்சா உடன் உள்ளிட வேண்டும். இதன் மூலம் வாகன உரிமையாளர் பற்றிய விபரங்கள் உங்களுக்கு திரையில் காட்டப்படும்.

Best Mobiles in India

English summary
How to find owner details with registration number online 2022 tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X