Home
How to

சர சரனு இறங்குதா சார்ஜ்? பேட்டரி லைஃப் அதிகரிக்க 5 எளிய டிப்ஸ்.. கடைசியா இருக்கத மிஸ் பண்ணாதீங்க!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று பேட்டரி சீக்கிரமாக தீர்ந்துவிடுவதுதான். அதிக நேரம் வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, சோஷியல் மீடியா ஆப்களை ஸ்க்ரோல் செய்வது போன்ற காரணத்தால் பேட்டரி சார்ஜ் வேகமாக குறையலாம். இருப்பினும், சில செட்டிங்ஸ் (Settings) வழியாக பேட்டரி லைபை நீட்டிக்க முடியும்.

குறிப்பாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன் பயன்படுத்துபவர்கள் போனில் இருக்கும் சில முக்கியமான பீச்சர்களை சரியாக பயன்படுத்தினால், ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்த போனை முடியும். இதற்காக புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் போன் பேட்டரி லைஃப் அதிகரிக்க உதவும் 5 எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்.

சர சரனு இறங்குதா சார்ஜ்? பேட்டரி லைஃப் அதிகரிக்க 5 எளிய டிப்ஸ்!

1. பேட்டரியை அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை சரிபார்க்கவும்

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் வேகமாகக் குறைகிறது என்றால், முதலில் எந்த ஆப்ஸ் அதிக பேட்டரியை பயன்படுத்துகிறது என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்கு சென்று பேட்டரி > பேட்டரி யூசேஜ் (Battery > Battery Usage) ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். இதில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்களை கண்டறிய முடியும்.

அதேபோல், ஐபோன் யூசர்கள் செட்டிங்ஸ் > பேட்டரி ( Settings > Battery) ஆப்ஷனுக்கு சென்று ஒவ்வொரு ஆப்பும் எவ்வளவு பேட்டரியை பயன்படுத்தியுள்ளது என்பதைப் பார்க்கலாம். நீங்கள் பெரிதாக பயன்படுத்தாத ஆப் அதிக பேட்டரியை எடுத்துக்கொள்கிறது என்றால், அதன் பேக்கிரவுண்ட் ஆக்டிவிட்டியை (Background Activity) நிறுத்தி வைக்கலாம். தேவையில்லாதது என்றால் நீக்கியே விடலாம்.

இருப்பினும், அதிக பேட்டரி பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப்பும் பிரச்சனையானது என்று நினைக்க கூடாது. கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங், மற்றும் நேவிகேஷன் (Navigation) போன்ற ஆப்கள் அதிக ப்ராஸசிங் பவர், டிஸ்பிளே மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளுடன் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கும். இதனாலேயே பேட்டரி சார்ஜ் வேகமாகக் குறையலாம்.

2. பேக்கிவுண்ட் ஆப்களை கட்டுப்படுத்தவும்

உங்கள் ஸ்மார்ட்போனில் சில ஆப்களை பயன்படுத்தாமல் இருந்தாலும், அவை பேக்கிரவுண்ட்டில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். புதிய தகவல்களைப் பெறுவது, நேட்டிபிகேஷன்களை அனுப்புவது மற்றும் ஃபைல்களை அக்சஸ் செய்வது உள்ளிட்டவை இதற்கு காரணமாக இருக்கலாம். இதை கட்டுப்படுத்த முடியும்

ஆண்ட்ராய்டு யூசர்கள் செட்டிங்ஸ் > ஆப்ஸ் (Settings > Apps) ஆப்ஷனுக்கு சென்று தேவையான ஆப்பை தேர்வு செய்து அதன் பேட்டரி பயன்பாட்டை மாற்றலாம். உங்களது ஸ்மார்ட்போன் மாடலை பொறுத்து பேக்கிவுண்ட் பயன்பாட்டை (Background Usage) அனுமதிப்பது அல்லது கட்டுப்படுத்துவது போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் தேவையானதை பயன்படுத்தலாம்.

ஆப்பிள் யூசர்கள், செட்டிங்ஸ் > ஜெனரல் > பேக்கிரவுண்ட் ஆப் ரெஃப்ரெஷ் (Settings > General > Background App Refresh) விருப்பத்து சென்று, இதை செய்து கொள்ளலாம். ஆனால், வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட மெசேஜிங் ஆப்கள், ஈமெயில் ஆப்கள், ஓடிடி ஆப்களுக்கு பேக்கிரவுண்ட் டேட்டா தேவைப்படும். ஆகவே, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

3. டிஸ்பிளே பிரைட்னஸை குறைக்கவும்

ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது, அதிக பேட்டரியை பயன்படுத்தும் முக்கியமான ஒன்றாகும். நீண்ட நேரம் அதிக பிரைட்னஸில் போனை பயன்படுத்தும்போது பேட்டரி சார்ஜ் வேகமாக குறையலாம். ஆகவே, அவுட்டோரில் இருக்கும்போது மட்டுமே அதிக பிரைட்னஸை பயன்படுத்துங்கள். இன்டோரில் இருக்கும்போது போதுமான அளவை மட்டுமே பயன்படுத்துங்கள்.

இதுபோக அடாப்டிவ் பிரைட்னஸ் விருப்பம் இருக்கிறது. அதாவது, சென்சார்கள் வழியாக ஆட்டோ பிரைட்னஸ் மோடை பயன்படுத்தலாம். இது தேவைக்கு ஏற்ப பிரைட்னஸை கூட்டவும், குறைக்கவும் செய்யும். இருப்பினும், எல்சிடி, அமோலெட் மற்றும் ஓஎல்இடி டிஸ்பிளேவுக்கு ஏற்ப இது மாறுபடும். டார்க் மோட் பயன்படுத்துவம் பேட்டரியை நீட்டிக்க செய்யும்.

4. தேவையில்லாத கனெக்டிவிட்டிகள் மற்றும் பீச்சர்கள் ஆப் செய்யவும்

ஸ்மார்ட்போன்களில் வை-பை, ப்ளூடூத் அல்லது மொபைல் டேட்டா உள்ளிட்டவை தேவையில்லாத நேரத்திலும் தொடர்ந்து ஆனில் இருக்கும். அதேபோல லேகேஷன் சர்வீசஸ் ஆப்ஷனும் தேவையில்லாத போதும் பயன்படுத்தப்படும். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை பயன்படுத்தாத நேரத்தில் அதை ஆப் செய்து வைத்து கொள்ளலாம்.

அதேபோல தேவையில்லாத ஆப்களுக்கு லோகேஷன் பர்மிஷனுக்கு (Location Permission) அனுமதி வழங்க வேண்டாம். அதேபோல ப்ளூடூத் டிவைஸ்களை தொடர்ந்து கனெக்ட் செய்து வைத்திருக்க வேண்டும். பயன்படுத்தும்போது மட்டுமே கனெக்ட் செய்து கொள்ளுங்கள். இது உங்களது பேட்டரி லைபை அதிகரிக்க கட்டாயம் உதவும்.

5. சரியான சார்ஜிங் பழக்கத்தை பின்பற்றவும்

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட காலத்திற்கு சிறப்பாக செயல்படுவதற்கு சரியான சார்ஜிங் பழக்கம் முக்கியமாகும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம் அயன் பேட்டரி (Lithium-ion Battery) கிடைக்கின்றன. இவற்றின் லைப் காலப்போக்கில் குறைவது வழக்கமானதாக இருக்கிறது. ஆகவே, சார்ஜ் குறையவை தடுக்க முடியாது.

இருப்பினும், சில பழக்கத்தால் அதை கட்டுப்படுத்த முடியும். பேட்டரி சார்ஜ் முழுமையாக 0% ஆகும் வரை காத்திருந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேபோல், எப்போதும் 100% வரை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயமில்லை. முடிந்தவரை பேட்டரி சார்ஜை 20% முதல் 80% வரையிலான அளவில் வைத்திருப்பது பேட்டரியின் ஆரோக்கியத்திற்கு உதவலாம்.

அதே நேரத்தில் ஸ்மார்ட்போனுக்கு பொருத்தமான சார்ஜரை பயன்படுத்த வேண்டும். சார்ஜ் போட்டுக்கொண்டு கேமிங் விளையாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பேட்டரி புரொடெக்சன் கொடுக்கப்பட்டாலும், ஓவர் சார்ஜிங் செய்ய வேண்டும். நைட் முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்த்துவிடுங்கள். இதுபோன்ற சரியான பேட்டரி பழக்கத்தை வைத்திருங்கள்.

Best Mobiles in India

English summary
How to Extend Battery Life of Your Smartphone 5 Simple Tips to Make Your Battery Last Longer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X