தொலைந்து போன போனில் உள்ள டேட்டாகளை எப்படி அழிப்பது?

|

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை தொலைத்து விட்டால் அதில் உள்ள டேட்டாகளை வேறு யாரும் பயன்படுத்தாதபடி உங்கள் சாதனத்தில் உள்ள விபரங்களை அழிக்க முடியும். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற முக்கியமான தகவல்கள் மற்றவர்கள் கையில் கிடைப்பது நல்லதில்லை.

தகவல்களை அழிப்பது எப்படி?

தகவல்களை அழிப்பது எப்படி?

உங்கள் போனில் உள்ள முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்த முடியாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

'ஃபைன்ட் மை டிவைஸ்' சேவை

'ஃபைன்ட் மை டிவைஸ்' சேவை

'ஃபைன்ட் மை டிவைஸ்' எனும் அம்சத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள், இந்த சேவையை கொண்டு தான் உங்கள் போனில் உள்ள டேட்டாகளை அழிக்கபோகிறோம். இந்த சேவையை பயனப்டுத்த உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும்.

பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த காரியம்! கொந்தளித்த நெட்டிசன்ஸ்!பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த காரியம்! கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

செயல்முறை

செயல்முறை

  • முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உங்களது கூகுள் அக்கவுன்ட்டை லாக்-இன் செய்யுங்கள்.
  • இங்கு நீங்கள் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.
  • லாக் மற்றும் சவுண்ட் ஆப்ஷன்

    லாக் மற்றும் சவுண்ட் ஆப்ஷன்

    உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும். திரையில் Sound, Lock and Erase என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

    ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?

    ஐந்து நிமிடங்களுக்கு சத்தம் எழுப்பும்

    ஐந்து நிமிடங்களுக்கு சத்தம் எழுப்பும்

    இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

    லாக் ஆப்ஷன்

    லாக் ஆப்ஷன்

    ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

Best Mobiles in India

English summary
How To Erase Your All Private Datas From Your Lost Android Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X