கூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் கூகுள் மேப்ஸ் ஆப்பில் இன்காக்னிட்டோ மோட் பயன்முறையை அறிமுகம் செய்துள்ளது. இதை ஆன்
மற்றும் ஆப் செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

கூடுதல் தனியுரிமையை வழங்குவதற்கும், அதன் பயனர்களின் தரவைப் பாதுகாப்பதற்கும் கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய முயற்சியைக் கையில் எடுத்து அதை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் இன்று கூகிள் வரைபடங்களில் (Google Maps) சேவையின் கீழ் அதிகம்எதிர்பார்க்கப்பட்ட 'மறைநிலை பயன்முறையை (Incognito Mode) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்களின் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாது

உங்களின் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாது

இந்த புதிய சேவையின்படி கூகுள் மேப்ஸ் பயனர்கள், தங்கள் கூகுள் மேப் செயலியில் தேடும் இடங்களின் விபரங்கள் எதுவும் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் சேமிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக உங்கள் கூகுள் அக்கௌன்ட்டில் மட்டுமில்லாமல் உங்களின் ஸ்மார்ட்போன் சாதனத்திலும் சேமிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.!108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.!

எந்தவொரு தகவல்களும் சேமிக்கப்படமாட்டாது

எந்தவொரு தகவல்களும் சேமிக்கப்படமாட்டாது

அதேபோல், இன்காக்னிட்டோ மோடு இன் கீழ் நீங்கள் பயன்படுத்தும், உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட (personalized) அனுபவம் அல்லது தேடும் எந்தவொரு தகவல்களும் சேமிக்கப்படமாட்டாது. அதேபோல் இவற்றை மீண்டும் ரீட்ரைவ் செய்யமுடியாது.

2008 ஆம் ஆண்டு

2008 ஆம் ஆண்டு

இன்காக்னிட்டோ மோடு முதலில் 2008 ஆம் ஆண்டு கூகுள் க்ரோமில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யூட்யூப் சேவையிலும் இன்காக்னிட்டோ மோடு இணைக்கப்பட்டது. தற்பொழுது ஒருவழியாகக் கூகுள் மேப்ஸ் சேவையிலும் இன்காக்னிட்டோ மோடு
இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக மாறுமா அலெக்ஸா? நடந்தது இதுதான்!கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக மாறுமா அலெக்ஸா? நடந்தது இதுதான்!

கூகுள் மேப்ஸ் 10.26

கூகுள் மேப்ஸ் 10.26

இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் ஆனது கூகுள் மேப்ஸ் 10.26 அல்லது அதற்கு மேற்பட்டவெர்ஷன்களின் கீழ் அணுக கிடைக்கும். பின்பு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாகப்பார்ப்போம்.

ஆன் செய்வதற்கான வழிமுறைகள்

ஆன் செய்வதற்கான வழிமுறைகள்


நீங்கள் சமீபத்திய அப்டேட் செய்த பின்பு,ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் ஆப்பை திறக்கவும்.

இப்போது கூகுள் மேப்ஸ் வலது மூலையில் காட்சிப்படும் உங்களது ப்ரொபைலை கிளிக் செய்யவும்

அடுத்து இதை நிகழ்த்த நீங்கள் உங்கள் அக்கவுண்ட்(இமெயில்) சார்ந்த விவரங்களை காண்பீர்கள். அதற்கு கீழே ஏற்கனவே ஆப்பில் அணுக கிடைக்கும் add another account எனும் விருப்பத்தின்மேலே turn on Incognito Mode எனும் புதிய விருப்பத்தை காணமுடியும், அதை கிளிக் செய்தால்இன்காக்னிட்டோ மோடின் லோகோ வரும்.

பின்பு நீங்கள் Learn More-ஐ கிளிக் செய்து அதைப்பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லது வெறுமனே close செய்யலாம். ஒருமுறை நீங்கள் close என்பதை கிளிக் செய்தவுடன்,உங்களின் கூகுள் மேப்ஸ்-ல் Incognito Mode ஆனது எனேபிள் ஆகியிருக்கும்.

ஆஃப் செய்வதற்கான வழிமுறைகள்

ஆஃப் செய்வதற்கான வழிமுறைகள்

இதை ஆஃப் செய்வது மிகவும் சுலபமானது,அதாவது கூகுள் மேப்ஸில் உள்ள சர்ச் பாரை கிளக் செய்தவுடன்,அதற்கு கீழே turn Off Incognito எனும் விருப்பத்தை காண்பீர்கள். அதை வெறுமனே கிளிக் செய்ய உங்களின்
ப்ரொபைல் ஐகான் ஆனது ஒரு வினாடிக்கு காட்சிப்படும். பின்பு உங்கள் கூகுள் மேப்ஸ் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

Best Mobiles in India

English summary
How to enable Google Maps on incognito mode: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X