ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து துறை சார்பில் புதிய செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

|

இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது முறையான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன சான்றுகளை கையில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து துறை சார்பில் புதிய செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்பரிவாஹன் என அழைக்கப்படும் இந்த செயலி கொண்டு ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டிஜிட்டல் முறையில் உருவாக்கிக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?

இந்திய சாலைகளில் பயணிக்கும் போது போக்குவரத்து காவல் துறை உங்களை நிறுத்தி வாகனத்தை சோதனையிடும் போது விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கலாம். குறிப்பாக ஓட்டுனர் உரிமத்தின் நகல் கையில் இல்லாத சமயத்தில் இது பேருதவியாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட்போன்களில் எம்பரிவாஹன் செயலி மூலம் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை உருவாக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு தளத்துக்கான எம்பரிவாஹன் செயலியை டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

ஐ.ஓ.எஸ். தளத்துக்கான எம்பரிவாஹன் செயலியை டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்


விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை டவுன்லோடு செய்ய உங்களிடம் ஓட்டுனர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்கள் இன்றி விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் டவுன்லோடு செய்ய முடியாது.

ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்


- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எம்பரிவாஹன் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்

- செயலியை திறந்து சைன்-இன் செய்ய வேண்டும். அக்கவுண்ட் இல்லாத சமயத்தில் சைன்-அப் செய்ய வேண்டும்

- வலதுபுறத்தில் இருக்கும் ஓட்டுனர் உரிமத்துக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- இனி ஓட்டுனர் உரிம எண்ணை பதிவிட வேண்டும்

- விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை பெற Add To My Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- பிறந்த தேதியை பதிவிட்டு வெரிஃபிகேஷனை நிறைவு செய்ய வேண்டும்

- இனி பேக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

- டேஷ்போர்டு சென்று DL Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி உங்களது ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் இயக்க முடியும்

- இதுதவிர 3டி பார்கோடு உருவாக்கிக் கொள்ளலாம். இதனை காவல் துறையினர் ஸ்கேன் செய்தால் உங்களது ஓட்டுனர் உரிமத்தை பார்க்க முடியும்.

ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?

- எம்பரிவாஹன் செயலியில் இருக்கும் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தில் உங்களது பிறந்த தேதி, காலவதி தேதி, வாகன விவரம் மற்றும் ஆர்.டி.ஓ. விவரம் என அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

டிஜிட்டல் கையொப்பம் கொண்டிருக்கும் படிவம் ஐ.டி. சட்டம் 2000 பிரிவின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடையாள சான்றுகளை கொண்டு செல்ல மறக்கும் பட்சத்தில் விர்ச்சுவல் தரவுகளை காண்பிக்கலாம்.

தனிநபரின் பாதுகாப்புக்கு கூகுள் கேரண்டி.! இந்த விஷயம் தெரியுமா?

தனிநபரின் பாதுகாப்புக்கு கூகுள் கேரண்டி.! இந்த விஷயம் தெரியுமா?

கூகுளில் நமது தேடல் தகவல்களும் (சர்ச் ஹிஸ்ட்ரி), இடங்கள் குறித்த தகவல்களும் (லோகேஷன் ஹிஸ்ட்ரி) தானாக அழிந்துவிடும் வசதியை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளது அந்நிறுவனம்.

ஆனால் இந்த வசதி மூன்று மாதங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்படும். தற்போது நாமாக நமது தேடல்கள் குறித்த தகவல்களை அழித்துக் கொள்ளும் வசதி உள்ளது. கூகுளின் யுடியூப், கூகுள் மேப்ஸ் மற்றும் தேடல் ஆகியவற்றில் இந்த வசதி உள்ளது.

கூகுள் அறிமுகம்:

கூகுள் அறிமுகம்:

தனிநபர் தகவல்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது கூகுளில் நமது முந்தைய தேடல்கள் தானாக அழிந்துவிடும். கூகுள் பயனர்களிடம் இருந்து பெறும் தனிநபர் தகவல்கள் குறித்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கூகுள் மீது குற்றச்சாட்டு:

கூகுள் மீது குற்றச்சாட்டு:

நவம்பர் மாதம், பயனர்கள் தொலைப்பேசியை ஆஃப் செய்த பிறகும் அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை பெற்றதாக கூகுள் மீது பலர் குற்றம் சுமத்தினர்.

கூகுள் ஆய்வு:

கூகுள் ஆய்வு:

இந்த மாத தொடக்கத்தில் கூகுளில் குரல் பதிவு மூலம் தகவல் பெறும் ஆப்பில் (கூகுள் அசிஸ்டெண்ட் ஆப்), பயனர்களின் குரல்களை மனிதர்கள் ஆய்வு செய்ததாக கூகுள் கூறியது பலருக்கு வியப்பை அளித்தது. தற்போது ஒவ்வொரு பயனர்களும், செட்டிங்க்ஸில் கூகுள் வலைதள தேடல் தகவல்கள் மற்றும் இடம் குறித்த தகவல்களை வழங்கும் வசதியை நிறுத்திக் கொள்ளலாம்.

தானாக அழிந்து விடும்:

தானாக அழிந்து விடும்:

ஆனால் வரும் சில வாரங்களில் கூகுளில் நாம் தேடுவது ஒரு மாதத்திற்கு மேலானால் அது தானாக அழிந்துவிடும். இருப்பினும் யுடியூப் மற்றும் கூகுள் அசிஸ்டன் ஆப்களில் இந்த தேடல்கள் அழியாது.

Best Mobiles in India

English summary
How to download virtual Driving License using mParivahan app : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X