உங்க போனில் RC புக்கை டவுன்லோட் செய்வது எப்படி? கட்டாயம் 'இதை' போனில் வச்சுக்கோங்க!

|

நம் எல்லோரிடமும் குறைந்தது ஒரு வாகனமாவது கட்டாயம் இருக்கும், அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நிச்சயமாக RC புக்கின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி முக்கியமான ஆவணத்தைக் காகித வடிவில் பைக்கில் அல்லது காரில் வைப்பது பாதுகாப்பானதில்லை. இதனால் தான் இந்த ஆவணத்தை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உங்களிடம் Digilocker இருப்பது அவசியம்.

RC Book எவ்வளவு முக்கியமானது? இதை ஏன் எப்போதும் நம்முடன் வைத்திருக்க வேண்டும்?

RC Book எவ்வளவு முக்கியமானது? இதை ஏன் எப்போதும் நம்முடன் வைத்திருக்க வேண்டும்?

வாகனப் பதிவுச் சான்றிதழ் அல்லது ஆர்சி புக் (RC Book) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் அணைத்து வாகன ஓட்டுநர்களிடமும் இருப்பது கட்டாயம். உங்கள் வாகனம் ஆர்டிஓவில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த ஆர்சி புக் தான் சான்றளிக்கிறது. நீங்கள் அனுமதி பெற்ற வாகனத்தைத் தான் ஓட்டுகிறீர்கள் என்பதையும், அது உங்களுடையது என்பதையும் நிரூபிக்க நீங்கள் எப்போதும் இதை எடுத்துச் செல்வது அவசியம்.

வாகனப் பதிவுச் சான்றிதழ் அல்லது RC புத்தகம்

வாகனப் பதிவுச் சான்றிதழ் அல்லது RC புத்தகம்

வாகனப் பதிவுச் சான்றிதழ் அல்லது RC புத்தகம் என்பது உங்கள் வாகனப் பதிவு எண், உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, பதிவு செய்யப்பட்ட தேதி, என்ஜின் எண் மற்றும் பலவற்றைக் கொண்ட முக்கியமான ஆவணமாகும். எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஓட்டும் போதெல்லாம் இந்த முக்கியமான ஆவணத்தை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

DigiLocker மூலம் டவுன்லோடு செய்து வைப்பது ஏன் சிறப்பானது?

DigiLocker மூலம் டவுன்லோடு செய்து வைப்பது ஏன் சிறப்பானது?

இத்தகைய முக்கியமான ஆவணத்தை நீங்கள் டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. உங்கள் ஆர்சி விபரங்களை ஆன்லைனில் வைத்திருப்பது எப்போதும் நல்லது. குறிப்பாக, உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருப்பது மிகவும் சிறப்பானது. இதை நீங்கள் DigiLocker மூலம் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்வது சிறப்பானது.

RC டாகுமெண்ட்டை எப்படி டவுன்லோட் செய்வது?

RC டாகுமெண்ட்டை எப்படி டவுன்லோட் செய்வது?

DigiLocker இல் உங்களுடைய RC டாகுமெண்ட்டை எப்படி டவுன்லோட் செய்து வைத்துக்கொள்வது என்று பார்க்கலாம். DigiLocker ஆப்ஸிற்கு செல்வதற்கு முன், உங்களுடைய ஆதார் விபரம் மற்றும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய RC புக்கை அணுக உங்கள் வாகனப் பதிவு எண் மற்றும் முழு சேசிஸ் எண் விபரங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.

DigiLocker கணக்கை எப்படி உருவாக்குவது?

DigiLocker கணக்கை எப்படி உருவாக்குவது?

இந்த இரண்டையும் உங்கள் RC புத்தகத்தில் நீங்கள் காணலாம். நீங்கள் இதுவரை DigiLocker ஆப்ஸில் கணக்கை உருவாக்கவில்லை என்றால், முதலில் அதை உருவாக்க வேண்டும். எனவே DigiLocker கணக்கை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். உங்களிடம் ஏற்கனவே கணக்கு இருந்தால், இந்த வழிமுறைகளைத் தவிர்க்கலாம். முதலில், DigiLocker ஹோம் பேஜ் சென்று sign up என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

இதையெல்லாம் சரியாக உள்ளிடுங்கள்

இதையெல்லாம் சரியாக உள்ளிடுங்கள்

பின்னர், உங்கள் முழுப்பெயர், ஆதாரில் இருக்கும் படி பிறந்த தேதி, மொபைல் எண், ஆதார் அட்டை எண், மெயில் ஐடி விபரம் மற்றும் பாதுகாப்பு பின்னை ஐடி போன்றவற்றை உள்ளிட்ட உங்களுக்கான டிஜிலாக்கர் கணக்கை உருவாக்க வேண்டும். பின்னர் Submit என்பதை கிளிக் செய்து, உங்கள் DigiLocker கணக்கை வெற்றிகரமாக உருவாக்க வேண்டும்.

RC புக்கை டவுன்லோட் செய்ய இதை கிளிக் செய்யுங்கள்

RC புக்கை டவுன்லோட் செய்ய இதை கிளிக் செய்யுங்கள்

உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இருக்கிறது என்றால், உங்களுடைய ஆதார் அட்டை / மொபைல் எண் மற்றும் பின் நம்பரை உள்ளிட்டு லாகின் செய்யவும். ஹோம் பேஜில் உள்ள Issued Documents விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கிருந்து Get More Issued Documents செல்லவும். அடுத்தபடியாக Ministry of Road and Transport விருப்பத்தை செலக்ட் செய்யுங்கள். பின்னர் Registration of Vehicles என்பதை கிளிக் செய்யுங்கள்.

RC புக்கை இந்த டாக்குமென்ட்டாக வைப்பது தான் சிறந்தது

RC புக்கை இந்த டாக்குமென்ட்டாக வைப்பது தான் சிறந்தது

அடுத்த பக்கத்தில், உங்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேசிஸ் எண்ணை உள்ளிட வேண்டும். இதைச் செய்த பிறகு, Get Document என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். இப்போது, ​​மீண்டும் Issued Documents வரவும், இப்போது நீங்கள் RC புக் பதிவிறக்கத்திற்குத் தயாராக இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் RC புக்கை PDF டாக்குமென்ட்டாக சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இனி இந்த டிஜிட்டல் RC ஐ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to download RC in DigiLocker

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X