ஸ்மார்ட்போனில் PAN Card பதிவிறக்கம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!
தற்போது பான்கார்டு ஒரு முக்கியமான அரசு ஆவணமாக கருதப்படுகிறது. குறிப்பாக அரசாங்க சலுகைகளை பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

பான் கார்டு
அதேபோல் நீங்கள் வங்கிக் கணக்கு தொடங்க விரும்பினாலும் அல்லது வேறு வேலை செய்ய விரும்பினாலும் பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படும். குறிப்பாக இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல வருமான வரி, பண மோசடிகளை கண்டறிதல் போன்ற பல விஷயங்களுக்கு பயன்படுகிறது.

ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யலாம்
மேலும் இப்போது ஸ்மார்ட்போனில் கூட பான் கார்டை எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும். அதாவது PDF அல்லது XML வடிவத்தில்
பான் கார்டை டவுன்லோடு செய்ய முடியும். அதாவது நாம் பான் கார்டை விட ஸ்மார்ட்போன்களை தான் அதிக நேரம் வைத்திருக்கிறோம்.
எதாவது முக்கியமான இடத்தில் நீங்கள் பான் கார்டை மறந்தால் கூட போனில் பதிவிறக்கம் செய்து வைத்த பான் கார்டு நகல் கண்டிப்பாகப்
பயன்படும்.

அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
குறிப்பாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தான் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதேபோல் பான் கார்டு NSDL அல்லது UTIITSL ஆல் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது ஸ்மார்ட்போனில் பான் கார்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளைசற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் onlineservices.nsdl.com என்ற அரசாங்க இணையதளத்திற்கு செல்லவும்.

வழிமுறை-2
தற்போது நீங்கள் இரண்டு விருப்பங்களை பார்க்க முடியும். அதில் பான் எண் என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அடுத்து நீங்கள் உங்களது பான் எண்ணை உள்ளிட வேண்டும்.

வழிமுறை-4
அதன்பிறகு உங்களது ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

வழிமுறை-5
அதை தொடர்ந்து நீங்கள் பிறந்த தேதி உள்ளிட்டு, பின்னர் கேப்சாவை நிரப்பவும்.

வழிமுறை-6
இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்த பிறகு submit என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-7
அதன்பிறகு ஒடிபி-ஐ பெற மின்னஞ்சல் அல்லது மொபைலில் ஒடிபி-ஐ உருவாக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-8
இப்போது உங்களுக்கு கிடைத்த ஒடிபி-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்தால் போதும். இப்போது உங்களது e-PAN கார்டை PDF அல்லது XML வடிவத்தில் திரையில் பார்க்க முடியும். இப்போது எளிமையாக பான் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications