Instagram வீடியோக்களை டக்குனு டவுன்லோட் செய்யணுமா? அப்போ இதை உடனே செய்யுங்க.!

|

Meta நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் (Instagram) இப்போது அதிகளவு எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டுள்ளது. Meta நிறுவனம் ஏற்கனவே Facebook, WhatsApp போன்ற தளங்களில் பல கோடி மக்களை பயனராக வைத்துள்ளது. இந்த ஒவ்வொரு வித ஆப்ஸிலும் நிறுவனம் பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. Instagram இல் பயனர்கள் ரீல்ஸ், போஸ்ட் மற்றும் ஸ்டோரீஸ் மூலம் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட அனுமதிக்கிறது.

இளசுகள் முதல் பெருசுகள் வரை Instagram

இளசுகள் முதல் பெருசுகள் வரை Instagram

இன்ஸ்டாகிராம் இப்போது மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான காணப்படுகிறது. இளசுகள் முதல் பெருசுகள் வரை பல எண்ணிக்கையிலான பயனர்கள் இப்போது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முன்னதாக, மெட்டாவுக்குச் சொந்தமான புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாடான IGTV அம்சத்தை வழங்கியது. இதில் பயனர்கள் 60 வினாடிகளுக்கு மேல் வீடியோவை பதிவிட அனுமதிக்கிறது.

பொழுதுபோக்காக மாறிவிட்ட Instagram ரீல்ஸ்

பொழுதுபோக்காக மாறிவிட்ட Instagram ரீல்ஸ்

Instagram இல் இப்போது ரீல்ஸ் பார்ப்பது என்பது பலருக்கும் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம் பயனர்களை நிறுவனம் இப்போது ரீல்ஸ் மற்றும் போட்டோ போஸ்ட்களை சேவ் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுடைய சேவ்டு கேலரியில் இருந்து சேவ் செய்த பதிவுகளைப் பின்னர் அணுகிக்கொள்ளவும் இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

இன்ஸ்டா வீடியோக்களை போனில் டவுன்லோட் செய்ய முடியுமா?

இன்ஸ்டா வீடியோக்களை போனில் டவுன்லோட் செய்ய முடியுமா?

ஆனால், போன் கேலரியில் சேவ் செய்யவோ அல்லது டவுன்லோட் செய்யவோ இது அனுமதிப்பதில்லை. ஆம், உங்களால் இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் உதவியோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டா போட்டோவை டவுன்லோட் செய்யக் கூடிய அம்சம் என்று தனியாக இன்ஸ்டாவில் எதுவும் இல்லை.

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோடு செய்ய வழி இருக்கிறது

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோடு செய்ய வழி இருக்கிறது

ஆனால், சில நேரங்களில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை நாம் டவுன்லோட் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப நினைப்போம், அல்லது வாட்ஸ்அப் இல் ஸ்டேட்டஸ் வைக்க விரும்புவோம். இப்படியான நேரத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோடு செய்ய உங்களுக்கு மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் தான் கைகொடுக்க போகின்றன. இன்ஸ்டாவில் இருக்கும் ஒரு வீடியோவை உங்கள் போனில் டவுன்லோட் செய்ய விரும்பினால், இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றவும்.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

உங்க போனில் Instagram வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

உங்க போனில் Instagram வீடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி?

பல மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் டவுன்லோட் இணையதளங்களைப் பயன்படுத்தி நீங்கள் Instagram வீடியோவை உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்துக்கொள்ளலாம். iGram, savefromnet, Ingrammer, Clipbox போன்றவை இந்த வேலையை சிறப்பாகச் செய்கின்றன. இந்த தளங்கள் 3வது பார்ட்டி தளம் என்பதால், உங்கள் சொந்த ஆபத்தில் அவற்றைப் பயன்படுத்தவும். சரி, இப்போது Instagram வீடியோக்களைப் savefrom.net மூலம் எப்படி டவுன்லோட் செய்வதென்று பார்க்கலாம்.

Copy மற்றும் Paste செய்தால் மட்டும் போதுமா? டவுன்லோட் ஆகிவிடுமா?

Copy மற்றும் Paste செய்தால் மட்டும் போதுமா? டவுன்லோட் ஆகிவிடுமா?

  • முதலில் உங்கள் பிரௌசரில் இருந்து https://en.savefrom.net என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் Instagram ரீல் அல்லது வீடியோ இடுகையின் URL ஐ Copy செய்யவும்.
  • 'paste your link here' என்ற பாக்சில் URL ஐ Paste செய்யவும்.
  • ஒரு போஸ்டில் பல வீடியோக்கள் இருந்தால், நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • download என்பதை கிளிக் செய்யவும்.
  • iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

    போன் மற்றும் லேப்டாப்களில் கூட டவுன்லோட் செய்யலாமா?

    போன் மற்றும் லேப்டாப்களில் கூட டவுன்லோட் செய்யலாமா?

    • உங்கள் வீடியோவைப் பதிவிறக்க விரும்பும் ஃபார்மட்டை தேர்வு செய்யவும்.
    • சில நொடியில் அந்த வீடியோ உங்கள் போனில் சேமிக்கப்படும்.
    • இதேபோல், இன்ஸ்டாகிராம் கணக்கை லேப்டாப் இல் ஓபன் செய்தும் டவுன்லோட் செய்யலாம்.
    • குறிப்பிடத்தக்க வகையில், பெரும்பாலான மூன்றாம் தரப்பு டவுன்லோடு ஆண்ட்ராய்டு போன்களில் வேலை செய்கிறது.
    • ஆனால், நீங்கள் ஒரு ஐபோன் பயனர் என்றால் Instagram வீடியோக்களைப் பதிவிறக்குவது உங்களுக்குக் கடினமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
How To Download Instagram Videos Instantly To Your Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X