COVID-19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ்..

|

COVID-19 தடுப்பூசி சான்றிதழை எப்படி ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெளிவாகப் பார்க்கவிருக்கிறோம். COVID-19 தொற்றுநோய்க்கு எதிராகப் பாதுகாப்பிற்காகக் கிடைக்கும் தடுப்பூசிகள் இப்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கிடைக்கிறது. மக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆணைப்படி இரண்டு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பயனர்கள் ஆன்லைனில் அதற்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

COVID-19 க்கு எதிராக இரண்டு டோஸேஜ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டீர்களா?

COVID-19 க்கு எதிராக இரண்டு டோஸேஜ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டீர்களா?

COVID-19 க்கு எதிராக இந்த நபர் இரண்டு டோஸேஜ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் என்பதற்கான சான்றாக இந்த சான்றிதழ் செயல்படுகிறது. இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் அதன் மூன்றாம் கட்டத்தில் உள்ளது. இப்போது, இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் தடுப்பூசி பெறத் தகுதியுடையவர்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆரோக்யா சேது ஆப்ஸ் மூலம் எப்படி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது?

ஆரோக்யா சேது ஆப்ஸ் மூலம் எப்படி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது?

தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையுடன் இப்போது நாடு தடுமாறி வரும் நிலையில், முன்னதாக இரண்டு டோஸேஜ் ​தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட அனைவருமே இந்த கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் இப்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை நீங்கள் இரண்டு வழிகளில் பெறலாம், அதில் முதலாவது ஆரோக்யா சேது ஆப்ஸ் மூலம் நீங்கள் உங்களுக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

கோவின் வலைத்தளம் மூலமாக எப்படி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்?

கோவின் வலைத்தளம் மூலமாக எப்படி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்?

இரண்டாவதாக நீங்கள் கோவின் வலைத்தளம் மூலமாகவும் உங்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இரண்டு தளங்களையும் இந்திய அரசு தான் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது எப்படி ஆன்லைனில் உங்களுடைய தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று பார்க்கலாம். நீங்கள் எந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.

எந்த தடுப்பூசியை எந்த நிறுவனம் தயார் செய்கிறது?

எந்த தடுப்பூசியை எந்த நிறுவனம் தயார் செய்கிறது?

இரண்டு டோஸ் பெறப்பட்ட பின்னரே COVID-19 தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்தியாவில் தற்போது இரண்டு COVID-19 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் என்னும் தடுப்பூசி பாரத் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்டது. அதேபோல், கோவிஷீல்ட் தடுப்பூசி அஸ்ட்ராஜெனெகா / ஆக்ஸ்போர்டால் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது. COVID-19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு ஆன்லைனில் இருந்து பதிவிறக்குவது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

டவுன்லோடு செய்வதற்கான செயல்முறை

டவுன்லோடு செய்வதற்கான செயல்முறை

  • முதலில் CoWIN வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.
  • உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP ஐப் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.
  • உள்நுழைந்ததும், உங்கள் மொபைல் எண் மூலம் பதிவுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுடனும் ஒரு பட்டியல் காண்பிக்கப்படும்.
  • இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் பெயருக்கு நேராகப் பச்சை நிறத்தில் 'Vaccinated' என்ற பேனர் காண்பிக்கப்படும்.
  • பி.டி.எஃப் பைளாக ஸ்டோர் செய்துகொள்ளலாம்

    பி.டி.எஃப் பைளாக ஸ்டோர் செய்துகொள்ளலாம்

    • 'Certificate' எனப்படும் பட்டன் வலதுபுறத்தில் காண்பிக்கப்படும்.
    • அதைக் கிளிக் செய்தால், சான்றிதழின் பி.டி.எஃப் புதிய டேபிள் திறக்கப்படும்.
    • டேப் இன் மேல் வலது மூலையில் உள்ள பதிவிறக்க download பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் பி.டி.எஃப் ஐ ஸ்டோர் செய்துகொள்ளலாம்.
    • உயிரைக் காக்கும் ஆக்ஸிமீட்டரை பார்த்து வாங்குவது எப்படி? இதை எப்படிப் பயன்படுத்துவது? முக்கியத் தகவல்.!உயிரைக் காக்கும் ஆக்ஸிமீட்டரை பார்த்து வாங்குவது எப்படி? இதை எப்படிப் பயன்படுத்துவது? முக்கியத் தகவல்.!

      ஆரோக்யா சேது ஆப்ஸ் மூலம் எப்படி தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது?

      ஆரோக்யா சேது ஆப்ஸ் மூலம் எப்படி தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்கம் செய்வது?

      • நீங்கள் ஆரோக்யா சேது பயன்பாட்டிற்குச் சென்று CoWIN tab > Vaccination Certificate என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
      • உங்கள் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினரின் பெயருக்கு அடுத்ததாகக் கோவின் போர்ட்டலில் காணக்கூடிய பயனாளி குறிப்பு ஐடியை உள்ளிடவும்.
      • அவ்வளவு தான் வேலை முடிந்தது

        அவ்வளவு தான் வேலை முடிந்தது

        • அடுத்தபடியாக 'Get Certificate' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
        • பின்னர் 'Download PDF' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து COVID 19 தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கச் செய்துகொள்ளுங்கள்.
        • அவ்வளவு தான் வேலை முடிந்தது, இனி நீங்கள் பதிவிறக்கம் செய்த ஸ்டோரேஜ் இடத்தில் இருந்து சான்றிதழை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to download COVID 19 vaccine certificate through Aarogya Setu app and from CoWIN website : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X