விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் ஒன்றாக விண்டோஸ் இருக்கிறது. உலகில் பயன்படுத்தப்படும் கணினிகளில் 86 சதவிகிதம் விண்டோஸ் 10 தளத்தை கொண்டிருக்கின்றன.
விண்டோஸ் இயங்குதளத்திற்கு வார இடைவெளிகளில் புதுப்புது அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன. சில சமயங்களில் சீரான இணைய வசதி கிடைக்காத பட்சத்தில் அப்டேட்கள் பாதியில் ரத்து செய்யப்பட்டு விடும். இதுபோன்ற சூழலில் இந்த அப்டேட்களை ஆஃப்லைனில் இன்ஸ்டால் செய்ய முடியுமா? ஆஃப்லைனில் விண்டோஸ் 10 அப்டேட் சாத்தியமா என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

எதுபோன்ற விண்டோஸ் அப்டேட்களை இன்ஸ்டால் செய்ய முடியும்?
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எவ்வித அப்டேட்களையும் இன்ஸ்டால் செய்யவில்லை என்றபோதும் அவை சரியாக இயங்கும். எனினும், இதனால் அப்டேட் செய்யக்கூடாது என்றில்லை. தேவையான அப்டேட்களை இன்ஸ்டால் செய்வதன் மூலம் கணினி பாதுகாப்பாக இருப்பதோடு, உங்களின் விவரங்களும் பாதுகாக்கப்படும்.
புதிய செக்யூரிட்டி பிழைகளை உருவாக்குவதை ஹேக்கர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆய்வாளர்கள் இவற்றை கண்டறிந்து முறியடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மைக்ரோசாஃப்ட் எப்போதும் பிழைகளை சரி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. புதிய அம்சங்கள் அப்கிரேடு செய்யப்பட்டு, பிழை சரி செய்யவே அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பிழைகள் கணினி சரியாக இயங்குவதை தடுத்து, சில அம்சங்களை இயங்கவிடாமல் செய்யும்.

விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
இணைய வேகம் குறைவாக இருக்கும் போதோ அல்லது இணைய வேகம் அதிவேகமாக இல்லாத போது இயங்குவதற்கென புதிய வசதியை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பயனர்கள் லேன் நெட்வொர்க் மூலம் மற்றொரு கம்ப்யூட்டரில் இருந்து அப்டேட்களை டவுன்லோடு செய்துகொள்ள முடியும். இதனை இரு கம்ப்யூட்டர்களை ஒரே நெட்வொர்க்கில் இணைத்து செயல்படுத்த முடியும்.
செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருந்து Delivery Optimisation Settings ஆப்ஷனை தேர்வு செய்து மற்ற கணினிகளில் இருந்து டவுன்லோடுகளை அனுமதிக்கக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இணையம் அல்லது லோக்கல் நெட்வொர்க்கில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும். முதலில் அப்டேட் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொண்டு அதன்பின் அப்டேட்கள் தானாக டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

முன்கூட்டியே டவுன்லோடு செய்வது
முதலில் அப்டேட்டை டவுன்லோடு செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்யலாம். அப்டேட்களை முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய அதனை முதலில் டவுன்லோடு செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- + ஐகானை க்ளிக் செய்து அப்டேட்ஸ் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். கணினி ரீஸ்டார்ட் ஆனாலோ அல்லது ரீஸ்டார்ட் ஷெட்யூல் ஆனாலோ அப்டேட்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இண்டர்நெட்டுடன் இணைந்தபின் அப்டேட்டை டவுன்லோடு செய்யவும். பின் டவுன்லோடு ஆன அப்டேட்டை ஆஃப்லைனில் இன்ஸ்டால் செய்யலாம்.

மீடியா கிரியேஷன் டூல்:
பூட் செய்யக்கூடிய யு.எஸ்.பி. டிரைவ்களை உருவாக்கி அதனை எப்போது வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சரியான விண்டோஸ் 10 இயங்குதளத்தை தேர்வு செய்யும் போது மற்றொரு கம்ப்யூட்டருக்கு சரியான இன்ஸ்டாலேஷன் மீடியாவை பெற முடியும். பின் விரும்பிய மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும். சரியான டி.வி.டி.யில் ஐ.எஸ்.ஒ. ஃபைலை பர்ன் செய்யலாம்.


Click it and Unblock the Notifications