WhatsApp மூலம் ஆதார், PAN டவுன்லோடு செய்வது எப்படி? இந்த டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

|

இன்றைய காலகட்டத்தில் அணைத்து வசதிகளும் ஸ்மார்ட் போன் மூலமாக நம் கைக்குள் அடங்கி விட்டது. மெயில் அனுப்புவது, டிக்கெட் முன்பதிவு செய்வதில் தொடங்கி பணப் பரிவர்த்தனை, மாதாந்திர செலவுகளைப் பராமரிப்பது வரை அனைத்தையும் இப்போது உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்திச் செய்து விடலாம். வெளியே செல்லும்போது கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியமே இப்போது இல்லை.

WhatsApp மூலம் இனி 'இந்த' அடையாள ஆவணங்களை டவுன்லோட் செய்யலாமா?

WhatsApp மூலம் இனி 'இந்த' அடையாள ஆவணங்களை டவுன்லோட் செய்யலாமா?

பலர் பர்ஸ் எடுத்துச் செல்வதற்குக் காரணமே தங்கள் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வதற்காகத் தான் இருக்கும். ஆனால் அதையும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் உங்கள் ஸ்மார்ட் போனிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னால் நம்புவீர்களா. அதுவும் WhatsApp மூலம் இனி இந்த அடையாள ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றால் வாழ்க்கை இன்னும் எளிமையாகிவிடும் தானே.

Digilocker அம்சம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே.!

Digilocker அம்சம் பற்றி உங்களுக்கு தெரியும் தானே.!

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சில ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக, டிஜிலாக்கர் (Digilocker) என்ற ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவை மூலமாக உங்கள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் போன்ற மிகவும் முக்கியமாக ஆவணங்களின் ஒரிஜினல்களை டிஜிட்டல் ஆவணங்களாக டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

1 டிவி இல்ல 2 டிவி வாங்கலாம்.! ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 32-inch ஸ்மார்ட் டிவிகள்.!1 டிவி இல்ல 2 டிவி வாங்கலாம்.! ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 32-inch ஸ்மார்ட் டிவிகள்.!

டிஜிலாக்கரில் இருக்கும் அடையாள ஆவணங்களை இனி WhatsApp-ல் டவுன்லோட் செய்யலாம்

டிஜிலாக்கரில் இருக்கும் அடையாள ஆவணங்களை இனி WhatsApp-ல் டவுன்லோட் செய்யலாம்

இந்த சேவைக்காகவே பிரத்தியேகமான டிஜிலாக்கர் இணையதளமும், Digilocker ஆப்ஸ் கூட உருவாக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆதார் அடையாள அட்டை இருப்பவர்கள் அனைவரும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்போது இந்த சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MyGov Helpdesk வாட்ஸ்அப் சாட் பாட் என்ன செய்யும்?

MyGov Helpdesk வாட்ஸ்அப் சாட் பாட் என்ன செய்யும்?

MyGov Helpdesk என்ற வாட்ஸ்அப் சாட் பாட் மூலமாக ஆதார் அட்டை, பான் கார்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய அரசு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு டிஜிலாக்கரை இணையதளம் மற்றும் ஆப் மூலமாகப் பயன்படுத்தி பழக்கம் இல்லை என்றாலும் சுலபமாக வாட்ஸ் ஆப் மூலம் எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ள இந்த அம்சம் அனுமதிக்கிறது. சரி, இது எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

உங்கள் போனை எடுத்து முதலில் இதை செய்யுங்கள்

உங்கள் போனை எடுத்து முதலில் இதை செய்யுங்கள்

1. முதலில் +91-9013151515 என்ற எண்ணை MyGov Helpdesk என்ற பெயரில் உங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. பின்னர், உங்கள் WhatsApp-ற்கு சென்று வாட்ஸ்அப் காண்டாக்ட்டை ரெப்ரெஷ் செய்து கொள்ளுங்கள்.
3. பின்பு அதில் MyGov Helpdeskயை தேடி எடுத்து, ஓபன் செய்துகொள்ளவும்.
4. MyGov Helpdesk சாட்டில் Namaste அல்லது Hi என்று டைப் செய்து அனுப்பவும்.
5. அதில் Digilocker சேவையா அல்லது கோவின் சேவையா என்று தேர்வு செய்யுமாறு உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.

Digilocker சேவையை தொடர உங்களிடம் Digilocker கணக்கு இருக்கிறதா?

Digilocker சேவையை தொடர உங்களிடம் Digilocker கணக்கு இருக்கிறதா?

6. அதில் Digilocker சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
7. அதன் பின்னர் உங்களிடம் ஏற்கெனவே டிஜிலாக்கர் கணக்கு உள்ளதா என்று கேட்கப்படும்.
8. அதில் ஆம், இல்லை என்று இரண்டு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும்.
9. உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இருந்தால், ஆம் என்று தேர்வு செய்ய வேண்டும்.
10. உங்களிடம் டிஜிலாக்கர் கணக்கு இல்லை என்றால், முதலில் இணையதளத்திற்கு அல்லது ஆப்ஸ் மூலம் ஒரு புதிய கணக்கை உருவாக்க வேண்டும். பிறகு, மீண்டும் செயல்முறையைப் பின்பற்றி, ஆம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் புது பாஸ்போர்ட் வாங்குவது எப்படி? Passport வாங்க சுலபமான வழி இது தான்.!ஆன்லைன் மூலம் புது பாஸ்போர்ட் வாங்குவது எப்படி? Passport வாங்க சுலபமான வழி இது தான்.!

12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிடவும்

12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிடவும்

11. பின்னர், உங்கள் 12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை அனுப்ப வேண்டும். இப்படிச் செய்வதால் உங்கள் Digilocker சேவை வாட்ஸ்அப் சாட் பாட்டுடன் இணைக்கப்படும்.
12. பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதைச் WhatsApp சாட்டில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
13. அதனைத் தொடர்ந்து உங்கள் டிஜிலாக்கரில் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் வரிசையாகக் காட்டப்படும்.
14. அதில் உங்களுக்குத் தேவையான ஆவணத்திற்கு நேராக இருக்கும் எண்ணை டைப் செய்து அனுப்பினால் அந்த ஆவணம் pdf வடிவில் உங்களுக்கு அனுப்பப்படும்.

ஒரு நேரத்தில் ஒரு ஆவணம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியுமா?

ஒரு நேரத்தில் ஒரு ஆவணம் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியுமா?

15. அதனை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் அல்லது WhatsApp சாட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் ஒரு ஆவணம் மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஆவணம் உங்கள் டிஜி லாக்கர் கணக்கில் முன்னரே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இணையதளத்திற்குச் சென்று முதலில் அதனை உங்கள் டிஜிலாக்கர் கணக்கில் இணைத்து விட்டு பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Download Aadhaar, PAN and Other Documents Using WhatsApp Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X