உங்கள் WhatsApp சாட்டை ஏன் Google Drive-ல் இருந்து நீக்குவது சிறந்தது? காரணம் இருக்கு மக்களே..

|

உங்கள் வாட்ஸ்அப் சாட்களை முற்றிலுமாக டெலீட் செய்யும் போது, ​​அவற்றை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கம் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், கூகுள் டிரைவ் பேக்அப் தகவல்களை நீக்குவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அவை சமீபத்தில் வரை குறியாக்கம் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது. அப்போது, பாதுகாப்பாக உங்கள் வாட்ஸ்அப் சாட்டை முழுமையாக நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

கூகிள் டிரை பேக்அப் சாட்களை நீக்கம் செய்வது எவ்வளவு முக்கியம்?

கூகிள் டிரை பேக்அப் சாட்களை நீக்கம் செய்வது எவ்வளவு முக்கியம்?

கூகிள் டிரைவில் பேக்அப் செய்யப்படும் சாட்கள் குறியாக்கம் செய்யப்படவில்லை என்பதனால் இதை மூன்றாம் நபர்கள் யாராவது அணுக வாய்ப்புள்ளது. அதாவது, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டை யாரேனும் ஹேக் செய்தால், உங்கள் வாட்ஸ்அப் பேக்அப் சாட்களை அப்படியே முழுமையாக அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் சாட்டை முழுமையாக நீக்கம் செய்ய விரும்பினால், அதைக் கூகிள் டிரைவில் இருந்தும் நீக்கம் செய்வதே சிறந்ததாக இருக்கும்.

தேவையற்ற சாட் பேக்அப்களை நீக்குவது ஏன் சிறந்தது?

தேவையற்ற சாட் பேக்அப்களை நீக்குவது ஏன் சிறந்தது?

மேலும், தேவையற்ற சாட் பேக்அப்களை அழிப்பதன் மூலம், கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில் உங்களுக்காகச் சிறிது இடத்தை உருவாக்கலாம். ஏனெனில் கூகிள் டிரைவ் இலவச ஸ்டோரேஜ் என்பது இப்போது வேறும் 15 ஜிபியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், Google இயக்ககத்திலிருந்து உங்கள் சாட்களை நீக்கியவுடன் அவற்றை மீட்டெடுப்பதற்கு எந்த வழியும் இருக்காது என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..

Google பேக்அப்பிலிருந்து WhatsApp சாட்களைத் நீக்கம் செய்ய

Google பேக்அப்பிலிருந்து WhatsApp சாட்களைத் நீக்கம் செய்ய

உங்கள் Google பேக்அப்பிலிருந்து WhatsApp சாட்களைத் நீக்கம் செய்ய, கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவும்.

  • உங்கள் வெப் பிரௌசரில் drive.google.com என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லவும். நீங்கள் உங்கள் மொபைலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், டெஸ்க்டாப் பதிப்பிற்கு மாறவும்.
  • வாட்ஸ்அப் பேக்அப் அம்சத்தை ஒத்திசைக்க, உங்கள் தொலைப்பேசியுடன் உள்ளமைக்குப்பட்ட உங்கள் Google ஐடி மற்றும் பாஸ்வோர்டை உள்ளிட்டு உள்நுழைக.
  • பேக்அப் துண்டிப்பை உறுதிப்படுத்த இதை செய்யுங்கள்

    பேக்அப் துண்டிப்பை உறுதிப்படுத்த இதை செய்யுங்கள்

    • உங்கள் சுயவிவரம் மற்றும் கணக்குப் படத்திற்கு மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
    • இடது பக்கத்தில் உள்ள Manage apps என்பதைத் தேர்ந்தெடுத்து வாட்ஸ்அப் மெசஞ்சர் பகுதிக்கு ஸ்க்ரோல் செய்யவும்.
    • தேர்வுகளைக் கிளிக் செய்து, Disconnect from Drive விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
    • பேக்அப் துண்டிப்பை உறுதிப்படுத்த Confirm கிளிக் செய்யுங்கள்.
    • 'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..

      கூகுள் டிரைவிலிருந்து வாட்ஸ்அப் பேக்கப்பை நீக்க

      கூகுள் டிரைவிலிருந்து வாட்ஸ்அப் பேக்கப்பை நீக்க

      • இடது பலகத்தில் உள்ள Backups link இணைப்பைக் கிளிக் செய்யவும்.
      • backup file தேர்ந்தெடுக்கவும்.
      • மேல் வலதுபுறத்தில் Delete backup button தேர்ந்தெடுக்கவும்.
      • நீங்கள் ஒரு உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள், பின்னர் Delete என்பதைக் கிளிக் செய்யவும்.
      • பேக்அப் எடுக்க விரும்பவில்லையா?

        பேக்அப் எடுக்க விரும்பவில்லையா?

        கூகிள் டிரைவ் உங்கள் அரட்டைகளை எப்போதும் காப்புப் பிரதி எடுக்க விரும்பவில்லை என்றால், கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொலைப்பேசியிலிருந்து அதை நிறுத்தலாம். இதை செய்ய

        • வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
        • Settings செல்லவும்.
        • Chat Backup கிளிக் செய்யவும்.
        • Backup to Google Drive தேர்ந்தெடுக்கவும்.
        • பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

          இன்டெர்னல் ஸ்டோரேஜ் சாட்களை எப்படி நீக்குவது?

          இன்டெர்னல் ஸ்டோரேஜ் சாட்களை எப்படி நீக்குவது?

          • விருப்பங்களிலிருந்து Never விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
          • தொலைப்பேசியின் இன்டெர்னல் சேமிப்பகத்திலிருந்து உங்கள் அரட்டைகளையும் நீக்கலாம்.
          • உங்கள் மொபைலில், Files or the FIles manager பயன்பாட்டைத் திறக்கவும்.
          • WhatsApp folder தட்டவும், அனைத்து வாட்ஸ்அப் துணை கோப்புறைகளின் பட்டியலையும் நீங்கள் காண்பீர்கள்.
          • Databases போல்டரை கிளிக் செய்யவும்.
          • Delete என்பதை இறுதியாகத் தேர்ந்தெடுக்கவும்.
          • வாட்ஸ்அப் வழங்கும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம்

            வாட்ஸ்அப் வழங்கும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் அம்சம்

            கடந்த வாரம், வாட்ஸ்அப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எண்ட்-டு-எண்ட் குறியாக்கத்தை வாட்ஸ்அப் அரட்டை காப்புப்பிரதிகளாக வெளியிடத் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த குறியாக்கம் வெளியிடப்பட்டது.

            ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..ரூ. 500 விலை அதிகரிக்கும் Amazon Prime சந்தா.. ஆனால் 'இதை' உடனே செய்தால் உங்களுக்கு தான் லாபம்..

            என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்ஷன் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய?

            என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்ஷன் அம்சத்தை ஆக்டிவேட் செய்ய?

            என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட காப்புப்பிரதியை உருவாக்க, நீங்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பில் இருப்பதை உறுதிசெய்யவும். நீங்கள் அதைச் உறுதி செய்ததும் Settings > Chats > Chat Backups > End-to-End Encrypted Backup செலக்ட் செய்யவும்.

Best Mobiles in India

English summary
How to disconnect and delete your WhatsApp chat backups from Google Drive : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X