Home
How to

ஐபோன் லாக் ஸ்கிரீனில் சிரி சஜெஷனை டிசேபிள் செய்வது எப்படி?

ஐபோன் லாக் ஸ்கிரீனில் மற்ற அம்சங்களுடன் ஷார்ட்கட்களுக்கான சஜெஷன்களும் சமீப காலங்களில் இடம்பெற்றிருக்கும்.

ஐபோனில் புதிய ஐ.ஓ.எஸ். இயங்குதளம் பயன்படுத்துவோர் நிச்சயம் இதனை கவனித்திருப்பர். ஐபோன் லாக் ஸ்கிரீனில் மற்ற அம்சங்களுடன் ஷார்ட்கட்களுக்கான சஜெஷன்களும் சமீப காலங்களில் இடம்பெற்றிருக்கும். இந்த சஜெஷன்களை கொண்டு சிரியை பயன்படுத்தி சில அம்சங்களை இயக்க முடியும்.

ஐபோன் லாக் ஸ்கிரீனில் சிரி சஜெஷனை டிசேபிள் செய்வது எப்படி?

ஒருவேளை நீங்கள் தினமும் வீட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் செல்வோர் எனில், சிரி தானாக பயணம் தொடர்பான விவரங்களை வழங்கும். சில சமயங்களில் இந்த அம்சம் செயல்படுவது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். இவ்வாறு சிரி உங்களது ஐபோனின் லாக் ஸ்கிரீனில் சஜெஷன்களை காண்பிக்க வேண்டாம் என நினைத்தால், இதனை டிசேபிள் செய்வதற்கான வழிமுறையை தொடர்ந்து பார்ப்போம்.

இவ்வாறு செய்வோர் தங்களது ஐபோனில் புதிய ஐ.ஓ.எஸ். வெர்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

1 - தனி செயலிகளில் சிரி சஜெஷன்களை டிசேபிள் செய்ய

- ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- இனி நோட்டிஃபிகேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- நோட்டிஃபிகேஷன் ஆப்ஷனில் சிரி சஜெஷன்ஸ் ஆப்ஷன் காணப்படும்.

- அடுத்த திரையில் சிரி சஜெஷன்களை சப்போர்ட் செய்யும் செயலிகள் காணப்படும்.

- இங்கு நீங்கள் பார்க்க விரும்பாத செயலிகளை தேர்வு செய்து, அதற்கான ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

ஐபோன் லாக் ஸ்கிரீனில் சிரி சஜெஷனை டிசேபிள் செய்வது எப்படி?

2 - அனைத்து செயலிகளிலும் சிரி சஜெஷன்களை டிசேபிள் செய்ய:

- ஒருவேளை ஒரே சமயத்தில் அனைத்து செயலிகளுக்கும் சிரி சஜெஷன்களை ஆஃப் செய்ய விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம். இவ்வாறு செய்யும் போது லாக் ஸ்கிரீனில் சிரி சஜெஷன் எதுவும் இடம்பெற்றிருக்காது.

- செட்டிங்ஸ் ஆப் சென்று சிரி மற்றும் சர்ச் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- சிரி மற்றும் சர்ஜ் ஆப்ஷனில் சஜெஷன்ஸ் ஆன் லாக் ஸ்கிரீன் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

மீண்டும் செயலியை இயக்க செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று முன் கூறிய வழிமுறைகளில் ஆன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to disable Siri suggestion on Apple iPhone’s lock screen : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X