இதுக்கு தீர்வு இருக்கு: வாட்ஸ் அப் கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி?

|

வாட்ஸ்அப் நிறுவனம் தனது தனியுரிமைக் கொள்கையை திருத்தி அறிவித்தது. மேலும் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ள பயனர்களை கேட்டுக் கொண்டது. அடுத்தக்கட்டமாக இதை ஏற்றுக் கொள்ளும் பயனர்கள் மட்டுமே தொடர்ந்து தளத்தை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டது. இதையடுத்து பல பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறி வருகின்றனர்.

வாட்ஸ்அப் கணக்கை நீக்க வழிகள்

வாட்ஸ்அப் கணக்கை நீக்க வழிகள்

வாட்ஸ்அப் கணக்கை நீக்க விரும்பினால் பல வாய்ப்புகள் உள்ளது. தற்காலிமாக செயலிழக்க செய்யலாம் அல்லது அதை நிரந்திரமாக நீக்குவதற்கான வழிமுறைகளும் உள்ளது. தங்களது கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீக்க வாட்ஸ்அப் பயனர்களை அனுமதிக்கிறது. உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்பினால் கீழே வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்

வழிமுறைகள்

 • ஸ்டெப் 1- வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும்
 • ஸ்டெப் 2- செட்டிங்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று கணக்கு தேர்வை கிளிக் செய்து எனது கணக்கு நீக்கு என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • ஸ்டெப் 3- சர்வதேச வடிவத்தில் தங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவும் (அதாவது +91 உடன்)
 • ஸ்டெப் 4- எனது கணக்கை நீக்கு என்று விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 • ஸ்டெப் 5- அதன்பின் உங்கள் கணக்கை நீக்கு என்ற வார்த்தையுடன் அதற்கான காரணம் காண்பிக்கப்படும். அதில் ஏதாவது ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கவும்.
 • ஸ்டெப் 6- அதன்பின் எனது கணக்கை நீக்கு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
 • முழுமையாக நீக்க 90 நாட்கள் ஆகலாம்

  முழுமையாக நீக்க 90 நாட்கள் ஆகலாம்

  தங்கள் வாட்ஸ்அப் கணக்கையும் தொடர்புடைய தகவல்களையும் நீக்க கோரிக்கை கொடுத்த தருணத்தில் இருந்து உங்கள் கணக்கை நீக்க 90 நாட்கள் வரை ஆகலாம். நீங்கள் அனுப்பிய முந்தைய செய்திகளை தங்களது நண்பர்கள் பார்க்கக்கூடும். கணக்கு இல்லாத காரணத்தால் தங்களது புகைப்படம் மட்டும் தோன்றாது. ஆனால் நீங்கள் வாட்ஸ்அப்பில் சேர்ந்த அனைத்து குழுக்களில் இருந்தும் அகற்றப்படுவீர்கள். தங்களது எண் வாட்ஸ்அப் மூலம் பிரிக்கப்படும். இருப்பினும் அதே எண்ணுடன் மீண்டும் வாட்ஸ்அப்பில் சேர விரும்பினால் அதுவும் நடக்கும்.

  பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப்

  பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப்

  சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு சேவைகளை சில வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்தலாம்.

  வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை

  வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை

  வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates-ஐ கட்டாயம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாட்ஸ்அப் பயனர்கள் அனைவருக்கும் நோட்டிபிகேஷன் மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது. இந்த நோட்டிபிகேஷனுக்கு சென்று allow என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். பிறகு வாட்ஸ் அப் கணக்கை ஓபன் செய்ய வேண்டும். அப்டேட் செய்து ஓபன் செய்த சில விநாடிகளில் இந்த நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படுகிறது.

  எவ்வளவு தரவு தானாக சேகரிக்கப்படுகிறது

  எவ்வளவு தரவு தானாக சேகரிக்கப்படுகிறது

  மெசேஜிங் பயன்பாட்டின் மூலம் எவ்வளவு தரவு தானாக சேகரிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை நிறுவனம் மேலும் பகிர்ந்து கொண்டது. "சேவை தொடர்பான, கண்டறியும் மற்றும் செயல்திறன் தகவல் போன்ற எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம் என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Delete Whatsapp Account Permanently

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X