Home
How to

கூகுள் பே செயலியில் Transaction history-ஐ டெலிட் செய்வது எப்படி? இதோ வழிமுறைகள்..

கூகுள் பே செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் மற்ற ஆப்ஸ்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி கொடுக்கிறது இந்த கூகுள் பே ஆப். எனவே தான் இந்தியா முழுவதும் கூகுள் பே ஆப் வசதி அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் எந்த யுபிஐ செயலியும் இல்லாத ஒரு அசத்தலான வசதியை சமீபத்தில் கூகுள் பே அறிமுகம் செய்தது. அதாவது அதாவது சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள்,வணிகங்களுக்கு உதவும் வகையில் கூகுள் பே செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை வழங்கத் தொடங்கியுள்ளது கூகுள் பே நிறுவனம்.

கூகுள் பே செயலியில் Transaction history-ஐ டெலிட் செய்வது எப்படி?

குறிப்பாக பயனுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் இந்த கூகுள் பே செயலியில் உள்ளது. அதேபோல் இந்த கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை (transaction history) எளிமையாக டெலிட் செய்ய முடியும். இப்போது கூகுள் பே செயலியில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்கும் வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே செயலியை ஓப்பன் செய்யவும். பின்பு இந்த செயலியில் இருக்கும் உங்களது ப்ரொபைல் ஐகானை (Profile) கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: நீங்கள் கூகுள் பே செயலியில் ப்ரொபைல் ஐகானை கிளிக் செய்ததும், செட்டிங்ஸ் (Settings) விருப்பம் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்துப்ரைவஸி அண்ட் செக்யூரிட்டி (Privacy and Security) என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3: அதை தொடர்ந்து டேட்டா அண்ட் பெர்சனலைசேஷன் (Data and Personalisation) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் கூகுள் அக்கவுண்ட் லிங்க் (Google Account link) என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய விண்டோ திறக்கும்.

வழிமுறை 4: அதில் பேமண்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிஸ் (Payment transactions & activities) என்கிற விருப்பத்தைப் பார்க்க முடியும். அதை கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்யதால் Delete விருப்பத்தைப் பார்க்க முடியும். இப்போது டெலிட் என்பதை கிளிக் செய்தால் போது எளிமையாக டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க முடியும்.

குறிப்பு: நீங்கள் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை நீக்க விரும்பும் தேதி அல்லது மணிநேர எண்ணிக்கையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பரிவர்த்தனை செயல்பாட்டை நீக்கலாம். குறிப்பாக இது உங்கள் வசதிக்கேற்ப பரிவர்த்தனை செயல்பாட்டை நீக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் பே செயலியில் கிடைக்கும் சாசெட் கடன்கள் அவசரகாலத்தில் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது சிறு வணிகர், நிறுவனங்களுக்கு அன்றாட தேவைகளுக்குச் சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்கு வேண்டி வங்கிகளுக்குச் சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே தான் அவர்களது உடனடி தேவைகளை அதாவது அன்றாட வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியைக் கூகுள் பே கொண்டுவந்தது.

கூகுள் பே செயலியில் Transaction history-ஐ டெலிட் செய்வது எப்படி?

இந்த சாசெட் (Sachet Loan) கடன்கள் என்பது சிறிய மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்களின் வகையாகும். அவற்றின் காலம் 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நானோ கிரெடிட் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் விரைவான ஒப்புதல் மற்றும் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாசெட் கடன்கள் என்பது என்னவென்றால், கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்கும். கூகுள் பே-இன் இந்த Sachet லோன் உடன் ஃபெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புதிய சாசெட் கடன் சேவையைக் கூகுள் பே நிறுவனம் தற்போது 2 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to delete Transaction history in Google Pay app: check simple steps here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X