சிக்னல் பயன்பாட்டில் மெசேஜ்களை நீக்குவது எப்படி? டெஸ்க்டாப், iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக டிப்ஸ்..

|

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய விதிகளைக் கட்டாயம் ஆக்கிய பின்னர், சிங்னல் மெசேஜ்ஜிங் ஆப் உலகம் முழுக்க பிரபலமடைந்தது. சிக்னல் என்பது பிரபலமான மெசேஜ்ஜிங் பயன்பாடாகும், இது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களால் இப்போது பயன்படுத்தப்படுகிறது.

சிக்னல் மெசேஜிங் பயன்பாடு

சிக்னல் மெசேஜிங் பயன்பாடு

இன்ஸ்டன்ட்-மெசேஜிங் பயன்பாடு பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் புகழ்பெற்ற மெசேஜிங் பயன்பாடான டெலிகிராமுடன் ஒத்திருக்கும் பல சேவைகள் மற்றும் நன்மைகளை இந்த ஆப்ஸ் வழங்குகிறது. பிற சமூக ஊடக தளங்களைப் போலவே, சிக்னல் அதன் பயனர்களை அதன் மேடையில் மெசேஜ்களை டெலீட் செய்யவும், அனுப்பிய மெசேஜ்களை அன்சென்ட் செய்யவும் அனுமதிக்கிறது.

3 மணி நேர காலத்திற்குள் இதை செய்ய வேண்டும்

3 மணி நேர காலத்திற்குள் இதை செய்ய வேண்டும்

இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை 3 மணி நேர காலத்திற்குள் பெறுநர் மற்றும் அனுப்புனர் ஆகிய இருவருக்கும் டெலீட் செய்துகொள்ளலாம். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பயனர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை அனுப்புனர் பக்கத்தில் இருந்து மட்டுமே நீக்க முடியும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

18 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம்.. 'லைவ்' இங்கே பார்க்கலாம்..18 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இன்று Asus ROG Phone 5 அறிமுகம்.. 'லைவ்' இங்கே பார்க்கலாம்..

சிக்னல் டெஸ்க்டாப்பில் மெசேஜ்ஜை டெலீட் செய்வது எப்படி?

சிக்னல் டெஸ்க்டாப்பில் மெசேஜ்ஜை டெலீட் செய்வது எப்படி?
சிக்னல் டெஸ்க்டாப்பில் மெசேஜ்ஜை நீக்க, சிக்னல் டெஸ்க்டாப் பயன்பாட்டைத் திறந்து சாட்ஸ் செல்லவும், நீங்கள் நீக்க விரும்பும் மெசேஜ்ஜை கண்டறிந்து, அதை லாங் பிரஸ் செய்து மார்க் செய்யுங்கள். பின்னர் நீங்கள் செலக்ட் செய்த மெசேஜ்ஜை அகற்ற டெலீட் விரும்புவதை கிளிக் செய்ய வேண்டும்.

delete for everyone அம்சம்

delete for everyone அம்சம்

இதற்கு நீங்கள் சாட்டில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து பாப்-மெனு தோன்றியதும், 'delete message' விருப்பத்தை கிளிக் செய்யுங்கள். delete for everyone அம்சம் டெஸ்க்டாப் பதிப்பில் கிடைக்காது என்பதை சிக்னல் பயனர்கள் கவனிக்க வேண்டும்.

Android மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்ஜை டெலீட் செய்வது எப்படி?

Android மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்ஜை டெலீட் செய்வது எப்படி?
Android ஸ்மார்ட்போன்களில் மெசேஜ்ஜை டெலீட் செய்ய, சாட்டை திறந்து மெசேஜ்ஜை பபிலை தட்டவும். கூடுதல் விருப்பத்தைத் தட்டவும் மற்றும் கூடுதல் மெசேஜ் பபில் அல்லது அலெர்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். டெலீட் செய்ய வேண்டிய மெசேஜ்ஜை தேர்ந்தெடுக்கப்பட்டதும், டெலீட் பட்டனைத் தட்டவும், பின்னர் பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 iOS ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு

iOS ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு

நீங்கள் ஒரு iOS ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால், உங்கள் ஐபோனில் சிக்னல் பயன்பாட்டைத் திறந்து சாட்டைத் திறக்கவும், அதில் உள்ள மெசேஜ் பபிலை லாங் பிரஸ் செய்து பிடித்துக்கொள்ளுங்கள், அல்லது மாற்றாக மெனுவில் இருக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து கூடுதல் மெசேஜ் அல்லது மெசேஜ் பபிலை கிளிக் செய்யலாம். பின்னர் டெலீட் பட்டனை கிளிக் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to Delete Messages on Signal App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X