கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

|

கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

எனினும், தனியுரிமையை பற்றி யோசிக்கும் போது, நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது. பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில் உள்ளிட்டவற்றை கூகுள் சேமித்துக் கொள்ளும். பயனர்கள் தங்களது குரல் பதிவுகளையும் கேட்க முடியும்.

கூகுளை பொருத்தவரை இவ்வாறு பயனரின் வாய்ஸ் விவரங்கள் ஒட்டுமொத்த சேவையை மேம்படுத்துவதற்காகவே சேமிக்கப்படுகின்றன. எனினும், இவற்றை பார்த்து சிலவற்றை அழிக்கும் வசதியை கூகுள் வழங்குகிறது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

1 - வெப் பிரவுசர் மூலம் கூகுள் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

- முதலில் 'myactivity.google.com’ வலைதளம் செல்லவும்.

- இனி 'Delete activity by’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் மூலம் ஆக்டிவிட்டியை அழிக்கலாம்.

- அடுத்து நீங்கள் அழிக்க வேண்டிய வாய்ஸ் மற்றும் ஆடியோக்களை தேர்வு செய்ய வேண்டும்.

- இறுதியில் Delete பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- முந்தைய Delete ஆப்ஷனை உறுதிப்படுத்தும் பாப்-அப் விண்டோவை க்ளிக் செய்ய வேண்டும்.

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வாய்ஸ் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

2 - ஸ்மார்ட்போனில் கூகுள் ஹிஸ்ட்ரியை அழிப்பது எப்படி?

- கூகுள் செயலியை திறக்க வேண்டும்.

- இனி More ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து Search Activity ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இவ்வாறு செய்ததும் myactivity.google.com வலைதளம் தானாக திறக்கும்.

- இனி திரையின் மேல்புறம் வலதுபக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.


- இதில் 'Delete activity by’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


- இனி எப்போது இருந்து தகவல்களை அழிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் அனைத்து விவரங்களையும் அழிக்க 'All time’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்.


- அடுத்து திறக்கும் மெனுவில் நீங்கள் அழிக்க வேண்டிய வாய்ஸ் மற்றும் ஆடியோக்களை தேர்வு செய்ய வேண்டும்.


- இனி Delete ஆப்ஷனை க்ளிக் செய்து, அதனை உறுதிப்படுத்தும் பாப்-அப் விண்டோவை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to delete Google Assistant voice history : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X