Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!

|

சமூகவலைதள கணக்கு ஓபன் செய்வதில் தொடங்கி ஆன்லைன் ஆர்டர், இணைய பயன்பாட்டு அணுகல் என ஒவ்வொன்றுக்கும் மெயில் ஐடி பதிவிட வேண்டும் என்பது அவசியமாக இருக்கிறது.

இப்படி அனைத்துக்கும் இமெயில் ஐடி கொடுப்பதன் விளைவாக ஜிமெயில் இன்பாக்ஸ் குவிந்து அலுவல்பூர்வமான மெயில் எது என்றே தெரியமால் போகிவிடும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது என்பது மிக சிரமம்.

கட்டண நடைமுறை அறிமுகமாகும் என தகவல்

கட்டண நடைமுறை அறிமுகமாகும் என தகவல்

அதோடு, 15 ஜிபி வரையிலான தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள ஜிமெயில் பயனர்களை கூகுள் அனுமதிக்கிறது. ஆனால் வரும்காலங்களில் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு கட்டண நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்பாக்ஸ்-ஐ கிளின் ஆக பராமரிப்பது மிக அவசியம். குவிந்துக்கிடக்கும் மெயில்களை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது சிரமம் தான். ஆனால் அதற்கு வழிகள் இருக்கிறது.

சோஷியல் மற்றும் ப்ரொமோஷன் பிரிவு

சோஷியல் மற்றும் ப்ரொமோஷன் பிரிவு

நீங்கள் ஜிமெயில் ஓபன் செய்தால், வலது புறத்தில் inbox என்று காட்டப்படும்.

அதில் சோஷியல் மற்றும் ப்ரொமோஷன் என்ற பிரிவு இடம்பெற்றிருக்கும். நோட்டிபிகேஷன் மெயில் மற்றும் விளம்பர மெயில்கள் பெரும்பாலும் இந்த பிரிவில்தான் இருக்கும்.

இதை ஒரே நேரத்தில் மொத்தமாக டெலிட் செய்யும் வசதி இருக்கிறது. வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம் வாங்க.

ப்ரவுசருக்குள் லாக்-இன் செய்வது அவசியம்

ப்ரவுசருக்குள் லாக்-இன் செய்வது அவசியம்

அனைவரும் ஜிமெயில் ஆப் பயன்படுத்துவோம். ஆனால் இன்பாக்ஸ்-ஐ மொத்தமாக டெலிட் செய்வதற்கு ஆப்ஸ் பயன்படாது.

கூகுள் க்ரோம் அல்லது ஏதாவது ப்ரவுசருக்குள் நுழைந்து ஜிமெயில் லாக்-இன் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் மொபைலில் ஜிமெயில் லாக்-இன் செய்தால் அதில் டெஸ்க்டாப் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

லேப்டாப் அல்லது கணினியில் லாக்-இன் செய்யும் பட்சத்தில் இது தேவை இல்லை.

டெஸ்க்டாப் வியூ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்

டெஸ்க்டாப் வியூ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்

மொபைல் ப்ரவுசரில் ஜிமெயில் லாக்-இன் செய்யும் பட்சத்தில் டெஸ்க்டாப் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கொள்வது அவசியம்.

ப்ரவுசர் பிரிவின் மேல் வலது மூலையில் மூன்று புள்ளிகள் காட்டப்படும் இதை கிளிக் செய்தால் ஏணைய ஆப்ஷன்கள் காட்டப்படும்.

இதில் டெஸ்க்டாப் வியூ என்ற விருப்பம் இருக்கும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

அனைத்து மெயில்களும் டெலிட் ஆகி விடும்

அனைத்து மெயில்களும் டெலிட் ஆகி விடும்

பின் ஜிமெயிலுக்குள் நுழைய வேண்டும். இன்பாக்ஸ் பிரிவில் ஒரு மெயிலை அழுத்தி கிளிக் செய்தால் அனைத்து மெயிலின் முன்புறத்திலும் பாக்ஸ்கள் காட்டப்படும்.

ஒவ்வொரு பாக்ஸ் ஆக கிளிக் செய்வதற்கு பதிலாக மெயில்கள் பிரிவுக்கு மேல் இடது புறத்தில் ஒரு பாக்ஸ் காட்டப்படும் அதை கிளிக் செய்தால் அனைத்து மெயில்களும் மார்க் ஆகி விடும்.

அதன் அருகிலேயே எத்தனை மெயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் காட்டப்படும்.

இப்போது டெலிட் என்ற தேர்வை கிளிக் செய்தால் அனைத்து மெயில்களும் டெலிட் ஆகி விடும்.

இதே முறையை தொடர்ச்சியாக செய்தால் மொத்தம் இன்பாக்ஸையும் க்ளியர் செய்யலாம்.

Select all என்ற ஆப்ஷன்

Select all என்ற ஆப்ஷன்

Select all என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியம். ஆரம்பத்தில் Select என்ற ஆப்ஷன் மட்டுமே இருக்கும், அதை தேர்வு செய்த பிறகு தான் Select all என்ற ஆப்சன் காண்பிக்கப்படும். இன்னும் குழப்பம் இருந்தால் சற்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

எளிய வழிமுறைகள்

எளிய வழிமுறைகள்

ஜிமெயிலை லாக்-இன் செய்து கொள்ளுங்கள். பின் இன்பாக்ஸ்-க்குள் நுழைந்து சோஷியல் மற்றும் விளம்பரப் பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் காட்டப்படும் மெயிலில் ஏதேனும் ஒன்றை அழுத்திப்படித்தால், டிக்-பாக்ஸ் காட்டப்படும். இதை டிக் செய்து டெலிட் செய்து கொள்ளலாம்.

மொத்தமாக நீக்க விரும்புகிறீர்களா?

மொத்தமாக நீக்க விரும்புகிறீர்களா?

மொத்தமாக டெலிட் செய்ய மேல் வலது புறத்தில் ஒரு பாக்ஸ் தனியாக காட்டப்படும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இந்த டிக் பாக்ஸை அழுத்தினால் (இன்பாக்ஸ் விளம்பரங்களைத் தவிர) அனைத்து மெயில்களும் தேர்ந்தெடுக்கப்படும்.

பின் மேலே உள்ள குப்பைத் தொட்டி (டெலிட்) போன்று இருக்கும் தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

இதை கிளிக் செய்தவுடன், மொத்தமாக நீக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் பாப்-அப் உங்களுக்கு வரும்.

இதை கிளிக் செய்து அனைத்து மெயில்களையும் டெலிட் செய்யலாம்.

மொத்த இன்பாக்ஸையும் க்ளீன் செய்யலாம்

உங்களிடம் நிறைய மின்னஞ்சல்கள் இருக்கும் பட்சத்தில், அனைத்தையும் டெலிட் செய்ய சில வினாடிகள் ஆகும்.

அனைத்து வழிமுறைகளும் முடிந்த பிறகு, கீழ் இடது மூலையில் ஒரு சிறிய உறுதிப்படுத்தல் பாப்-அப் கிடைக்கும்.

அதேபோல் உங்களிடம் ஆயிரக்கணக்கான மெயில்கள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மெயில்களே இதன் மூலம் டெலிட் செய்யப்பட்டிருக்கும்.

மொத்த இன்பாக்ஸையும் க்ளீன் செய்ய விரும்பினால் இதே வழிமுறையை தொடர்ந்து செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to Delete all Mails in Gmail in One Click

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X